Pages

Thursday, May 21, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 23




குழுமணி நாராயண சாஸ்த்ரி வால்மீகி ராமாயண உரையை எழுதினார். அதை பகவானிடம் சமர்ப்பிக்க விரும்பி கிளம்பினார். வெறுங்கையுடன் போக வேண்டாம் என்று ஒரு சீப்பு வாழைப்பழங்களை வாங்கினார். வரும் வழியில் ஒரு பிள்ளையார் கோவிலை தாண்டி வர வேண்டி இருந்தது. அப்போது மானசீகமாக ஒரு வாழைப்பழத்தை பிள்ளையாருக்கு சமர்ப்பணம் செய்தார்.
ஆசிரமம் வந்து சேர்ந்து பகவானுக்கு நமஸ்காரம் செய்தார். பழங்களை சமர்ப்பித்தார். உடன் இருந்த தொண்டர் அவற்றை உள்ளே எடுத்து வைக்கப்போனார். பகவான் கொஞ்சம் பொறு! பிள்ளையார் அவரோட பழத்தை எடுத்துக்கட்டும்!” என்றார். தொண்டருக்கு ஒன்றும் புரியவில்லை.
தான் எதற்கு வந்தோம் என்று சாஸ்த்ரி சொல்லும் முன்பே பகவான் உம் ராமாயணத்தை படிங்கோ; கேட்கலாம் என்றார்!

ஒரு முறை பழைய ஹாலில் பேசும்போது பகவான் அழுத்தம் திருத்தமாக பாக்கப்படறது எல்லாம் பொய்; பாக்கற வஸ்து மட்டுமே மெய்!” என்றார். கேட்டுக்கொண்டு இருந்த நாராயண ஐயருக்கு சந்தேகம் வந்தது. சபையில் கேட்க இஷ்டப்படாமல் பிறகு பகவான் தனியாக இருக்கும்போது கேட்டார் பகவானே இப்படி சொன்னேளே? எல்லாமே பொய்யா? நீங்க சாட்சாத் ஈஸ்வரன். நீங்க பொய்யா? நீங்க உக்காந்து இருக்கிற சோஃபா பொய்யா? இந்த தடுப்பு பொய்யா? பாக்கற நான் பொய்யா?”
பகவான் சொன்னார் இதுல என்ன சந்தேகம் ஓய்? எல்லாம் பொய்தான்.எல்லாத்தையும் உள்ளேந்து பாக்கிறதே ஒரு வஸ்து. அது ஒண்ணு மட்டுமே மெய். மீதி எல்லாமே பொய்தான் ஓய்!”

ஒரு முறை லக்‌ஷ்மி நரசிம்மம் தன் குடும்பத்துடன் பகவானை தரிசிக்க வந்தார். அவருடைய தாயார் பகவானே! நீங்கதான் கடவுள். நீங்களே எங்களுக்கு கதி!” என்றார்.
பகவான் நான் கடவுளா! கடவுள்கிட்டே அடங்கி கிடக்கிறவன் அம்மா! என்னை கடவுள்ன்னு சொல்லாதீங்கோ. அப்புறம் ஒரு முடியை கூட விடமாட்டா. எல்லாரும் பிடுங்கிண்டு போயிடுவா! “ என்றார்!

ரேஷன் காலம். அரிசி கிடப்பது சிரமமாக இருந்தது. இரவில் அரிசி சாதம் போடுவது சிரமமாயிற்று. கோதுமை சாதம் போட்டார்கள். சில நாட்கள் போயின. பகவானுக்கு மட்டும் அரிசி சாதம் போட்டார்கள்.
பகவான் அங்கிருந்த சின்னசாமியை கூப்பிட்டு ஏன் இதுக்கு மட்டும் அரிசி சாதம், மத்தவாளுக்கு கோதுமை சாதம்?” என்று கேட்டார்.
கோதுமை சூடு, உங்களுக்கு ஒத்துக்காதுஎன்று பதில் வந்தது.
பகவான் ஓஹோ! நீ பெரிய டாக்டரோ? எல்லோருக்கும் என்னவோ, அதே இதுக்கும் போடு. இந்த பேதம் பார்க்கிறதை இத்தோட விட்டுடு! “ என்றார்.

 

No comments: