Pages

Saturday, May 9, 2015

உள்ளது நாற்பது - 23



உலகுண்மை யாகு முணர்வில்லார்க் குள்ளார்க்
குலகளவா முண்மை யுணரார்க் குலகினுக்
காதார மாயுருவற் றாருமுணர்ந் தாருண்மை
யீதாகும் பேதமிவர்க் கெண்.

உலகு உண்மைஆகும் உணர்வு இல்லார்க்குஉள்ளார்க்கு
உலகளவாம் உண்மை உணரார்க்கு உலகினுக்கு
ஆதாரமாய் உருவற்றுஆரும் உணர்ந்தார் உண்மை
ஈதுஆகும் பேதம் இவர்க்குஎண்.

உண்மை உணர்வுள்ள ஞானிக்கும் உண்மை உணர்வில்லாத அஞ்ஞானிக்கும் உலகம் என்பது உண்மைப்பொருளே.. அஞ்ஞானிக்கு உலகம் மட்டுமே உண்மைப்பொருளாக இருக்கிறது. ஞானிக்கு உலகம் அவனுள்ளே அவன் உணரும் உண்மைப்பொருளில் தோன்றி, அதனுள்ளேயே மறையும் விஷயமாக இருக்கிறது. இவர்களுக்கு இது வித்தியாசமாகும்.

अज्ञस्य विज्ञस्य च विश्वमस्ति पूर्वस्य दृश्यं जगदेव सत्यम् ।
परस्य दृश्याश्रयभूतमेकं सत्यं प्रपूर्णं प्रविभात्यरूपम् ॥ २० ॥
அஜ்ஞஸ்ய விஜ்ஞஸ்ய ச விஶ்வமஸ்தி பூர்வஸ்ய த்³ருʼஶ்யம்ʼ ஜக³தே³வ ஸத்யம் |
பரஸ்ய த்³ருʼஶ்யாஶ்ரயபூதமேகம்ʼ ஸத்யம்ʼ ப்ரபூர்ணம்ʼ ப்ரவிபாத்யரூபம் || 20 ||


No comments: