Pages

Tuesday, May 19, 2015

அடியார்கள்- அண்ணாமலை ஸ்வாமி - 2




ஒரு நாள் தனிமையில் அண்ணாமலைஸ்வாமி பகவானிடம் தன் பிரச்சினையை கூறினார். “பகவானே, நிறைய பெண் ஆளுங்க கட்டட வேலைக்கு வராங்க. அது எனக்கு சிரமமா இருக்கு. பேசாம ஆண் ஆளுங்களை வெச்சு வேலை பார்க்கலாம்ன்னு நினைக்கிறேன்.”
பகவான், “பெண் ஆளுங்களை வேலைக்கு வை! வரட்டும்! பெண் ஆளுங்களை வேலைக்கு வை! வரட்டும்! பெண் ஆளுங்களை வேலைக்கு வை! வரட்டும்! ” என்று மூன்று முறை கூறினார்.
அப்போது அண்ணாமலைஸ்வாமி பகவானே! எனக்கு மோட்சம் கூட வேண்டாம். பெண் ஆசை போனால் போதும்!” என்றார்.
எல்லா மகத்துகளும் அதுக்குத்தான் பாடு பட்டா! நீயும் அதேஎன்றார் பகவான்.

ஒரு முறை அண்ணாமலைஸ்வாமி கட்டிட மேற்பார்வை பணியிலிருக்கும் போது ஒரு அழகிய பெண் பகவான் தரிசனத்துக்கு வந்துவிட்டு மலைக்குச் சென்றாள். அதைக்கண்ட அண்ணாமலை தேவதை மாதிரி இந்த பெண் இருக்கிறாளே என்று ஆச்சரியப்பட்டார்.
பிறகு அவள் நினைவுகளால் அண்ணாமலை மிகுந்த துன்பத்துக்குள்ளானார். இப்படி கஷ்டத்தை அனுபவிக்கும் போது காரணமில்லாமல் பகவான் அங்கே வந்தார். அண்ணாமலையிடம் அந்த பாறை மேலே நில்லு!” என்று உத்தரவிட்டார்.
காலில் செருப்பு இல்லாமல் மதிய நேரம் ஒரு மணிக்கு அண்ணாமலை பகவான் உத்திரவுக்கு கட்டுப்பட்டு பாறை மீது நின்றார். பகவான் ஏதோ பேசிக்கொண்டே நிறைய கேள்விகள் கேட்டுக்கொண்டு இருந்தார். பாறையின் சூடோ தாங்க முடியவில்லை. ஆனாலும் பகவானின் உத்திரவு அவரை பொறுக்கச்செய்து கட்டுப்படுத்தியது. சற்று நேரத்தில் அண்ணாமலை தன்னைத் துன்பப்படுத்திய எண்ணங்கள் மறைந்ததை கண்டார். உடனடியாக பகவான் பேச்சை நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். அந்த பெண்ணின் நினைப்பு திருப்பியும் வரவில்லை!

ஒரு முறை பகவான் அண்ணாமலைஸ்வாமியிடம் உனக்கு மோட்சம் வேணும்ன்னா இந்த புத்தகத்தை உன் நோட்டிலே எழுதிக்கோ. பிறகு அதைப்படி. அதிலே சொல்லி இருக்கிற உபதேசப்படி வாழப்பழகுஎன்று சொல்லி எல்லாம் ஒன்றேஎன்னும் புத்தகத்தைப் பற்றி கூறினார்.
அண்ணாமலை நீங்க எப்பவும் வேலை கொடுத்துக்கிட்டே இருக்கீங்க! எனக்கு எழுத நேரம் இல்லை. யாரானா எழுதிக் கொடுத்தா சந்தோஷமா படிக்கிறேன்என்றார்.
ஓஹோ! மேக்கீடு எழுத நேரம் இருக்கு; ஆனா இதுக்கு இல்லையோ? மோட்சத்தை இப்படி எல்லாம் விலை கொடுத்து வாங்க முடியாது! நீயே எழுதினா மனசிலே பதியும். ஒரு தடவை எழுதறது பத்து தடவை படிக்கறாப்போல. தினமும் கொஞ்சமா எழுது, ஒரு அவசரமும் இல்லே. ஒரு மாசத்துல ஆகட்டுமே! என்ன இப்ப!” என்றார். அண்ணாமலைஸ்வாமி தானே கைப்பட மெதுவாக எழுதி முடித்தார். பகவான் அதற்கு தலைப்புகளிட்டு தவறுகளைத் திருத்திக்கொடுத்தார்.

No comments: