Pages

Wednesday, May 20, 2015

உள்ளது நாற்பது -26



தன்னைத்தான் காண றலைவன் றனைக்காண
லென்னும்பன் னூலுண்மை யென்னையெனின் றன்னைத்தான்
காணலெவன் றானொன்றாற் காணவொணா தேற்றலைவற்
காணலலெவ னூணாதல் காண்.

தன்னைத்தான் காணல் தலைவன்தனைக் காணல்
என்னும் பன்னூல்உண்மை என்னைஎனின் தன்னைத்தான்
காணல்எவன் தான்ஒன்றால் காணஒணாதேல் தலைவன்
காணல்எவன் ஊண்ஆதல் காண்.


பல நூல்கள் தன்னைப்பார்த்தலே இறைவனைப் பார்த்ததாகும் என்கின்றன, இவை சொல்ல வருவது என்ன? தான் என்னும் வஸ்து ஒன்றே. இரண்டல்ல. இந்த வஸ்துவையேதான் தலைவன் என்றும் சொல்கிறார்கள். அப்படி இருக்கையில் தன்னை தானே எப்படி பார்ப்பது? காண்பவனும் காணப்படுவதும் வெவ்வேறாக இல்லாத்தால் அது இயலாது. ஆகவே நூல்கள் சொல்வது என்ன எனில் உலகைக்காண்கிற அகங்காரம் தன் மெய்ஸ்வரூபத்தில் லயித்து நசித்துப் போவதையே தன்னைக்காணுதல் என்றும் இதையே தலைவனைக் காணுதல் என்றும் சொல்கின்றன.

आत्मानमीक्षेत परं प्रपश्ये- दित्यागमोक्तेः सुलभो न भावः ।
नात्मैव दृश्यो यदि का कथेशे स्वयं तदन्नीभवनं तदीक्षा ॥ २३ ॥
ஆத்மானமீக்ஷேத பரம்ʼ ப்ரபஶ்யே- தி³த்யாக³மோக்தே: ஸுலபோ ந பா: |
நாத்மைவ த்³ருʼஶ்யோ யதி³ கா கதே²ஶே ஸ்வயம்ʼ தத³ன்னீபவனம்ʼ ததீ³க்ஷா || 23 ||

 

No comments: