Pages

Saturday, June 14, 2014

உணர்வு சார் நுண்ணறிவு - முதல் படி - உன்னை நீ கவனி




இந்த உணர்வு சார் நுண்ணறிவுல முதல்படி நம்மை நாம் அறிவது. இது பெரிய வேதாந்த கருத்தானஉன்னை நீ அறிந்து கொண்டால் உனக்கு ஒரு கேடும் இல்லைசமாசாரம் இல்லை. இங்கே நம்மை ந்னு சொல்வது பரம லௌகீகமானநம்மைதான். இங்கே நம்மோட மனதைன்னு பொருள் கொள்ளணும். நாம் கோபமா இருக்கிறப்ப நாம் கோபமா இருக்கிறோம்ன்னு தெரியணும். நாம் மன அழுத்தத்தில இருக்கிறப்ப மன அழுத்தத்துல இருக்கிறோம்ன்னு தெரியணும். சந்தோஷமா இருக்கிறப்ப சந்தோஷமா இருக்கிறோம்ன்னு தெரியணும். அது என்ன பெரிய ப்ரம்ம வித்தையா, இல்லையே? ஆனா கஷ்டம்!
நீ எப்படி இருக்கேன்னு யாரும் கேட்டா கொஞ்சமா உள்ளே கவனிச்சு நான் கோபமா இருக்கேன், வருத்தமா இருக்கேன், மகிழ்ச்சியா இருக்கேன் ந்னு சொல்வது யாருக்குமே சுலபமே! ஆனா இதை யாரும் கேட்டாத்தானே இது நடக்கும்? இல்லைன்னா கோபமோ வருத்தமோ அப்படியே அனுபவிச்சுகிட்டுத்தான் இருப்போம்

யாரும் வந்து நமக்கு ஆறுதல் சொல்லும் போது இதுதானே நடக்கிறது

வருத்தப்படாதப்பா! நடந்தது நடந்து போச்சு!  அடுத்து ஆக வேண்டியதை பார்ப்போம்ந்னு சொல்லும் போது வருத்தம் முழுக்க மறையலைன்னாலும் கொஞ்சமாவது மட்டுப்படும்!
அதாவது ஒரு உணர்ச்சி நிலையில நாம் இருக்கிறோம்ன்னு புரியும் போது அதை மாற்ற முடியும்

காலையில் இருந்து எரிச்சலுடனே இருக்கிறோம். எல்லாமே தப்பா போகுது. எல்லார் மேலும் எரிஞ்சு விழறோம். ராத்திரி வரைக்கு இது தொடர்ந்து வருது! அடித்தளத்துல நாம் கோபமா இருக்கோம்ன்னு தெரியலை. அதனால எடுக்கிற முடிவுகள் செயல்கள் எல்லாம் சரியில்லாம போகிற வாய்ப்புகள் அதிகம்! கோபமா இருக்கோம்ன்னு தெரிஞ்சு இருந்தா நாம அதை சரி செய்ய ஏதேனும் செஞ்சு இருக்கலாம்! (என்ன என்ன? அது என்ன? :-) அப்புறமா அதுக்கு வரலாம்!)

யாரும் கேட்டாத்தான் நாம் எந்த உணர்வில இருக்கோம்ன்னு ஒரு நிலை இல்லாம எப்பவும் அல்லது அடிக்கடி எப்படி இருக்கோம்ன்னு கவனிக்க முடியுமா? முடியும். அதுக்கு பயிற்சி அவசியம்.

என் சர்ஜனுக்கு இப்ப 58 வயசு. அவர் மருத்துவ கல்லூரியில படிச்சப்பா அவருக்கு பேண்ட் தைச்ச டெய்லர்தான் இன்னும் பேண்ட் தைக்கிறார். அளவு கொடுக்க வேண்டிய அவசியமே கிடையாது! ஏன்னா இடுப்பு அளவு அப்படியேத்தான் இருக்கு. மாறவே இல்லை! சில வருஷங்களுக்கு முன்னே இதைப்பத்தி விவாதிச்சோம். அவர் சொன்னது, “இதுல ரெண்டு விஷயங்கள் இருக்கு. ஒண்ணு அளவுக்கு அதிகமா சாப்டு வயித்துல கொழுப்பு சேருவது. உணவு கட்டுப்பாட்டோட இருக்கறதால இது நடக்கலை. இரண்டாவது வயிற்றுப்பகுதி தசைகள் இறுக்கம் (tone) இழக்கிறது. உடல் பயிற்சி குறைக்குறைய இது நடக்கும். அதனால நான் எப்பவும் விழிப்புடன் வயிறை எக்கிப்பிடிச்சு தசைகளை இறுக்கமாக வைக்கிறேன். ”  

எப்பவுமா?  
ஆமாம் எப்பவும்.  
அதெப்படி சாத்தியம்?

இது த்யானம் செய்கிறது போலத்தான். ஆரம்பத்துல மனசு கட்டுக்கு அடங்கா ஓடிகிட்டே இருக்கும். எப்போதெல்லாம் மனசு விலகிடுத்துன்னு தெரியுதோ அப்பல்லாம் அதை திருப்பு த்யானத்துக்கு கொண்டு வரோம். அதைப்போலத்தான் இதுவும். தசைகளை இறுக்கிப்பிடிக்க நினைப்பேன். எப்போதெல்லாம் தசைகள் இறுகி இல்லைன்னு தெரியுதோ அப்போதெல்லாம் அதை இறுக்குவேன். நாளடைவில இது ஆட்டோமேடிக்காப்போச்சு!”
இதே மாதிரித்தான் இங்கேயும் செய்யணும். மனதை எப்படி இருக்கன்னு அப்பப்ப கேட்கணும். பாத்துகிட்டே இருக்கணும்.

ஏன் சார்? வேற வேலையே எங்களுக்கு கிடையாதா? மனசையே கவனிச்சுகிட்டு இருந்தா வேற என்னத்தான் செய்ய முடியும்?



No comments: