Pages

Wednesday, June 18, 2014

உணர்வு சார் நுண்ணறிவு - முதல்படி- நம் உணர்ச்சிகள்

ஏன் சார்? வேற வேலையே எங்களுக்கு கிடையாதா? மனசையே கவனிச்சுகிட்டு இருந்தா வேற என்னத்தான் செய்ய முடியும்?
---
என்னத்தான் செய்ய முடியாது? எல்லாமே செய்யலாம்! தினசரி சர்வ சாதாரணமா செஞ்சுகிட்டு இருக்கோம்.

ஒரு வேலையை செஞ்சுகிட்டே நாம் வேற எதையோ நினைச்சுகிட்டு இருக்கோம். வீட்டு வேலை செய்துகிட்டே சாயந்தரம் எந்த சினிமா பார்க்கலாம்ன்னு நினைக்கிறோம். பூஜை பண்ணிகிட்டே என்ன டிபன் இன்னைக்குன்னு நினைச்சுகிட்டு இருக்கோம்.

மனசு சாதாரணமாவே மல்டி டாஸ்கிங் செய்ய வல்லது. சில சமயம் நாம் வேணும்ன்னு அதை ஃபோகஸ் செய்து எதையாவது செய்யறோம். இன்னும் கான்சண்ட்ரேட் செய்யறோம். அதாவது மத்ததை எல்லாம் புறம் தள்ளி ஒரு விஷயத்துல மட்டும் கவனம் செலுத்தறோம். இல்லைனா அது ரெண்டு மூணு வேலையை செஞ்சுகிட்டு இருக்கும்.

அதனால அப்பப்ப மனசு எப்படி இருக்குன்னு சோதிக்கறது நிஜமா கஷ்டம் இல்லை.
கஷ்டம் எதுன்னா அதை தக்க வைச்சுக்கிறதுதான். செஸ்ல வர குதிரை மாதிரி இடம் திசை மாறிக்கிட்டே இருக்கிறது மனதின் இயல்பு. 

ஒரு நாளில பல நேரங்களை இதுக்குன்னு ஒதுக்கி இதை செய்யலாம். எங்கே வேணுமானாலும்; எப்ப வேணுமானாலும். செய்ய சில நொடிகள்தானே ஆகும்? இப்படியே செய்ய செய்ய பழகி தானா நிகழும்.

ரைட்! மனசை பார்க்க ஆரம்பிச்சாச்சு. அங்கே எப்படி இருக்கு?  கோபம், சந்தோஷம். ம்ம்ம் வருத்தம்…… சாந்தம்…… அப்புறம் அப்புறம்….
அவ்ளோதான்!
நமக்கு உணர்ச்சிகள் பலது இருக்குன்னே தெரியலை.
இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யலாமா? இந்த பட்டியல் ஒரு இடத்துல கிடைச்சது.
1. கோபம்  2. குற்றம். 3 கவலை. 4. வெறுப்பு 5. சலிப்பு 6. விரக்தி 7. குழப்பம் 8. மகிழ்ச்சி 9. ஆனந்தம் 10. சோகம்.   இன்னும் சீற்றம்  நிறைவு, பயம், வெட்கம், வருத்தம், சந்தேகம்,  ஆச்சரியம், சோர்வு, பொறாமை.
இன்னும் யோசிச்சு பார்த்தா இன்னும் அதிகமா கிடைக்க்லாம்.
விக்கியை கேட்டா..
அன்பு - பாசம் - கோபம் - சினம் - ஆனந்தம் - இன்பம், மகிழ்ச்சி - துக்கம் - ஆசை - பொறாமை - வெறுப்பு - விரக்தி - அமைதி - பயம் - கவலை - எதிர்பார்ப்பு - ஏமாற்றம் - ஆச்சரியம் - வெட்கம் - பரிவு, இரக்கம் - காதல் - காமம் - எரிச்சல் - சலிப்பு - குற்றுணர்வு - மனவுளைச்சல் அல்லது மன அழுத்தம் - ஈர்ப்பு - பெருமை - உணர்வின்மை - நம்பிக்கை - மனக்கலக்கம் - தவிப்பு - பற்று - அவநம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மை - சோம்பல் - அதிர்ச்சி - மன நிறைவு அல்லது திருப்தி - தனிமை - அவா - வலி - அலட்சியம் - திகில் - பீதி
இதுலேயே டிகிரி வித்தியாசம் வரலாம். உதாரணமா எரிச்சல், கோபம், சீற்றம், மஹா கோபம். இப்படி ஒவ்வொண்ணுத்துக்குமே இருக்கும். இது முக்கியம்! ஏன்னா இதோட பலம் அதிகமா ஆச்சுன்னா அதை மாத்தறது இன்னும் கஷ்டமாகும். அதனால சீற்றத்தை கோபமாகவும், கோபத்தை எரிச்சலாகவும் ஆக்கலாம். அது நல்லது. எவ்வளவுக்கு எவ்வளவு நமக்கு வகைப்படுத்த தெரியுதோ அவ்வளவுக்கு அவ்வளவு சரி செய்யறது சுலபம்.

அத்தோட ரெண்டு மூணு உணர்ச்சிகள் கலந்தும் இருக்கலாம். உதாரணமா பயமும் துக்கமும் கலந்து இருக்கலாம்

ஆங்கிலத்துல இன்னும் அதிகமா இருக்காப்போல இருக்கு. அப்படியே கீழே கொடுக்கறேன்! லவ் என்கிறது அன்பு, காமம், தாகம் ந்னு இருக்கலாம். இந்த அன்பே இன்னும் பலதா பிரியலாம். காம எழுச்சி, விருப்பம், காம வெறி, அதிக விருப்பு, மோகம் ந்னு பலதா இருக்கலாம். ஒவ்வொண்ணுத்துக்கும் சட்ல்நுட்பமான-  வித்தியாசம் இருக்கும் அல்லது தீவிரத்தில வித்தியாசம் இருக்கும். இதையும் வகைப்படுத்தி தெரிந்துக்கொள்ள முடிஞ்சா மிகவும் நல்லது. அது மற்றவர்களோட  உணர்வுகளைப்பத்தி அறிய முற்படும்போது கொஞ்சம் நல்லது செய்யும். வெறுமே ஒருத்தர் என்கிட்ட கோபப்பட்டார்ன்னு நினைக்காம அவர் என்கிட்ட எரிச்சல் அடைஞ்சார் ந்னு நினைக்கறப்ப அதோட தாக்கம் குறையும். இதனால அந்த உறவை இன்னும் நல்லபடி கையாள முடியும்.

Primary emotion
Secondary emotion
Tertiary emotions
Love
Affection
Adoration, affection, love, fondness, liking, attraction, caring, tenderness, compassion, sentimentality
Lust
Arousal, desire, lust, passion, infatuation
Longing
Longing
Joy
Cheerfulness
Amusement, bliss, cheerfulness, gaiety, glee, jolliness, joviality, joy, delight, enjoyment, gladness, happiness, jubilation, elation, satisfaction, ecstasy, euphoria
Zest
Enthusiasm, zeal, zest, excitement, thrill, exhilaration
Contentment
Contentment, pleasure
Pride
Pride, triumph
Optimism
Eagerness, hope, optimism
Enthrallment
Enthrallment, rapture
Relief
Relief
Surprise
Surprise
Amazement, surprise, astonishment
Anger
Irritation
Aggravation, irritation, agitation, annoyance, grouchiness, grumpiness
Exasperation
Exasperation, frustration
Rage
Anger, rage, outrage, fury, wrath, hostility, ferocity, bitterness, hate, loathing, scorn, spite, vengefulness, dislike, resentment
Disgust
Disgust, revulsion, contempt
Envy
Envy, jealousy
Torment
Torment
Sadness
Suffering
Agony, suffering, hurt, anguish
Sadness
Depression, despair, hopelessness, gloom, glumness, sadness, unhappiness, grief, sorrow, woe, misery, melancholy
Disappointment
Dismay, disappointment, displeasure
Shame
Guilt, shame, regret, remorse
Neglect
Alienation, isolation, neglect, loneliness, rejection, homesickness, defeat, dejection, insecurity, embarrassment, humiliation, insult
Sympathy
Pity, sympathy
Fear
Horror
Alarm, shock, fear, fright, horror, terror, panic, hysteria, mortification
Nervousness
Anxiety, nervousness, tenseness, uneasiness, apprehension, worry, distress, dread

 
Post a Comment