Pages

Monday, June 30, 2014

சுயக் கட்டுப்பாடு
 கொஞ்ச காலமாக நாடு கொஞ்சம் கொஞ்சமாக கெட்டுப்போய்க்கொண்டு இருக்குஎன்கிறது காலம் காலமாக கேள்விப்படும் விஷயம்தான்! புகார் அதேதான். டிகிரிதான் வேறயா இருக்கு!  

உணர்ச்சிகளின் போராட்டம், திறமையின்மை,  நம்பிக்கை இழந்த நிலை, மூர்க்கத்தனம், கவனக்குறைவு, எல்லாம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது.

என்ன செய்தால் குழந்தைகள் நம்மைவிட நல்லா  இருப்பாங்க? சுய கட்டுப்பாடு, உற்சாகம். விடா முயற்சி, சுய ஊக்கம் இதையெல்லாம்  வளர்க்கணும். பின்னால அவர்களோட மரபணுக்கள் / விதி என்ன விதிச்சு இருக்கோ, அந்த சூழலில் அவர்கள் மேலும் வளர இன்னும் நல்ல வாய்ப்பு இருக்கும்.  

நன்னடத்தை இருக்கிறவரோட வாழ்க்கையில எப்பவும்  அடிப்படையான உணர்ச்சிகள் அவரோட மேலாளுமையில் இருக்கு.  ஒருவருடைய இம்பல்ஸ் என்கிற உத்வேகம் இந்த அடிப்படை உணர்வுகள் செயலாகும் வழி. சாதாரணமா இவை மலினமானவை. சுயநல, காம, கோபங்களால் ஆனவை. இந்த உணர்வுகள் எப்போதுமே பீரிட்டு எழ காத்துக்கிட்டு இருக்கின்றன. சுய கட்டுப்பாட்டால் உத்வேகம் மட்டுபடுத்தப் படவில்லையானா நன்னடத்தை இராது. இந்த உத்வேகத்தை மட்டுப்படுத்தறதே ஒருவரின் மன உறுதியும் குணங்களும். அதுதான் இவர் இப்படிப்பட்டவர் ந்னு வரையறுக்குது

அதே போல ஒருவரின் பொதுநலப்பண்பு, அவர் மற்றவரை புரிந்து உணர்வதில் இருக்கிறது. இதிலிருந்துதான் மனிதாபிமானம் எழுகிறது.  
தற்காலத்தின் கட்டாய தேவை என்று சிலது இருக்குமானால் அவை இந்த சுய கட்டுப்பாடும் மனிதாபிமானமும்தான்.
இந்த மூளையின் பாகங்களின் ஊடாடலை புரிந்து கொள்வது ஏன் அவசியம்? இதுதான் நமக்கு சிலதை புரியவைக்குது. எப்படி நாம் நம் மகத்தான நோக்கங்களையும் தாண்டி உணர்ச்சிகளின் ஆட்டத்துக்கு அடி பணிந்து விடுகிறோம் என்பதை.  நம்மை ஆட்டிவிக்கும் இந்த உத்வேகங்களை எப்படி கையாளலாம் என்பதையும் கூட காட்டுவிக்கும்.

இப்பல்லாம் நாம் ஜீன்ஸ் படித்தான் இருக்கோம்ன்னு பரவலா பேசப்படுது இல்லையா? ஆமாம்,  நாம் பெற்றோர்கிட்ட பெற்ற பாரம்பரியம்தான்  நம் மனப்போக்கை நிர்ணயிக்கும் உணர்ச்சிகளின் கால கட்டங்களை அமைக்குது. ஆனால் இதுவே விதியாகி விடாது. ஏன்னா  நல்ல காலமாக இந்த நரம்புப் பின்னல் போக்கெல்லாம் மாற்றி அமைக்கப்படக்கூடியன. குழந்தை/ பால பருவங்களில் இவை இன்னும் நெகிழ்வானவை. அதனால் முயற்சி எடுத்தால் அவற்றை சீக்கிரமே நெறிப்படுத்தலாம். இந்த காலகட்டத்தில் நிகழும் மாற்றங்களே பின்னால் வயது முதிர்ந்த நபராக செயல்படும் காலத்தில் இருக்கும் உணர்வு வலிமைக்கு அடித்தளமாக இருக்கும்.

உலகளாவிய அளவில் சிறுவர்களும் சிறுமியர்களும் இப்போது மேலும் மேலும் முந்தைய தலைமுறையை விட அதிகமாக உணர்வுகளை கையாள முடியலைன்னு சொல்லப்படுது. கட்டற்ற உத்வேகம், கவலை, பகைமை உணர்வு, தனிமை, மனத்தளர்வு, கோபம், யாருக்கும் எதற்கும் கட்டுப்படாமை இவற்றோட அவங்க கஷ்டப்படுகிறாங்கன்னு தெரியுது.
இதற்காக உணர்வுகள் ஒட்டு மொத்தமாக கெட்டவை என்று ஒன்றுமில்லை.

 
Post a Comment