அது சரி சார்! மனசை பாத்து
அது கோபமா இருக்கு, வருத்தமா இருக்குன்னு தெரிஞ்சு என்ன ஆகப்போறது?
பல வருஷங்களுக்கு முன்னே ஸ்வாமி தயானந்தர் நடத்தின ’ஆங்கர் மேனேஜ்மெண்ட் வொர்க் ஷாப்’ புக்கு போயிருந்தேன். அது
பத்தி பல விஷயங்களை பேசிவிட்டு அதை கையாள அவர் கொடுத்த சில பயிற்சிகளில் ஒன்று மிக
எளிது. நிமிர்ந்து உட்கார்ந்து மூச்சை ஆழமா இழுத்து விட்டுவிட்டு ….. மனசை கவனி! அது என்ன
நினைத்துக்கொண்டு இருக்கிறது? முதலில் எது எதையோ நினைத்துக்கொண்டு இருப்பது தெரியும். தொடர்ந்து கவனிக்க அது மெதுவாக கொய்யட் ஆகிவிடும்! ஆனா விடாத பயிற்சியாலத்தான் சில காலம் மனசை அப்படி கொய்யட்டா
இருக்க வைக்க முடியும்.
ஆமாம்! அது அப்படித்தான் இருக்கு. பிரச்சினையே வெகு சீக்கிரம் நம்மை அறியாமலே வேற ஏதோ எண்ணம் கிளைத்து வளரும்! நம்மாலே இதை அப்படியே நிறுத்த முடியாது. மனசு கொஞ்ச கொஞ்சமா
நின்னுடும்- அப்படி சொன்னேன் இல்லையா? இப்ப ¨அட! மனசு நின்னுடுச்சு¨ன்னு
ஒரு எண்ணம் வரும்!
நம்மையே அறியாம இன்னொரு எண்ணம் கிளர்ந்து மனசை ஆக்கிரமிச்சுடும்! இல்லை, எந்த எண்ணத்தை பாத்தோமோ அதை தொடர்ந்தே இன்னொன்னு வந்துடும். வேடிக்கை பாக்கிறதே இன்னொரு எண்ணத்தை தோற்றுவிக்கும். அதான் வாசனைகளோட சக்தி! விலகி நின்னு நெடு நேரம் மனசை பாக்கிறதை ரொம்ப நாள் பயிற்சிக்கு அப்புறம் செய்ய முடியுமோ என்னவோ!
கவனிப்பு என்கிறது புத்தி ரூபமா செய்கிற செயல். அதனால அது உடனடியா ஒரு ஆக்ஷன்
எடுக்கவும் முடியும். சும்மா இரு ந்னு அதட்ட முடியும். இப்போதைக்கு
ஒண்ணும் செய்யாதே ந்னு அறிவுரை சொல்ல முடியும். இல்லை
வேற எந்த வழியை வேணுமானாலும் காட்ட முடியும். இங்கே
முக்கியமான விஷயம் அதுக்குப்பின்னே நாம் செயல் படறது புத்தி பூர்வமா என்கிறதுதான். நம் புத்திக்கு எட்டின வரை சிறப்பா செயல்பட ஒரு வழி கிடைக்கும். புத்திக்கு எட்டின என்பதை கவனிங்க! நம்மை விட புத்திசாலிகள் இன்னும் சில சிறப்பான வழி வைச்சிருக்கக்கூடும். ஒரு வேளை நமக்கு சரியான வழி தெரியலைன்னாலும் அல்லது அதில
கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் உடனடி எதிர்வினை தேவையில்லாத சமயங்களில மத்தவங்களை கலந்து
ஆலோசிப்பது நல்லது.
அப்ப மனசை புத்தியால கவனிக்கணும்?
ஆமாம், ஆனா இரண்டுமே ஒரே விஷயத்தோட வெவ்வேறு வடிவங்கள்தான். அப்படித்தான் சங்கரர் சொல்கிறார். பல லேயர்கள் இருக்கிற இந்த மனசால - அதுல ஒரு லேயரால சலனப்படுகிற லேயரை கவனிக்கறோம். சலனம் இல்லாத இந்த லேயர் சலனப்படுகிற லேயரையும் சமன் செய்துவிடும்.
நம் மனசை எப்படி இருக்குன்னு கவனிக்கிறது போலவே மத்தவங்க மனசையும் கவனிக்கப்பார்க்கணும். இது சுலபமில்லைதான். நம் மனசு நம்மோடது; அதை பார்த்து கேட்டு தெரிஞ்சுக்கலாம். மத்தவங்க மனசுல என்ன இருக்குன்னு எப்படி தெரிஞ்சுக்கறது?
No comments:
Post a Comment