Pages

Tuesday, October 7, 2014

பரிந்துள்ளல்




பரிந்துள்ளல்பரிந்து உள்ளல். இது ஒருவரை அவர் எப்படி தன்னை அறிந்திருக்கிறாரோ அப்படியே  அறிவது; அவருடைய எண்ண / உணர்ச்சி உலகங்களுக்குள்ளே போய் அவருடைய உலகத்தை நம்மோட  இடுபொருள் - கருத்து- எதுவுமில்லாம புரிந்து கொள்வது. கண்ணோட்டம் நும் சொல்லலாம். ஆங்கிலத்தில் empathy.

இந்த பரிந்துள்ளல் எப்படி வரும்? முதல்ல நமக்கு நம் உணர்ச்சிகளை தடைகளில்லாம சரியாக புரிந்து கொண்டால்தான் மற்றவர்களுடைய உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடியும். உள ஒன்றிப்பு என்கிறராப்போர்ட்தான் மற்றவர்களிடம் அக்கறை கொள்வதற்கு மூலம். உள ஒன்றிப்பு ந்னா மனங்கள் இசைவில் இருக்கணும். ஒருவரிடம் பரிவு ஏற்படும் போதே அவருடைய உள்ளத்துடன் இசைவு ஏற்படும்.   

இந்த மற்றவரின் உணர்வு இது என்று புரியும் உள்ளுணர்வுக்கு கருவி மற்றவருடைய சொல் சாரா செய்திகளைபடிக்கதெரிந்து கொள்வது. பொதுவாக பெண்கள் இந்த விஷயத்தில் ஆண்களைவிட கெட்டி! பேச்சின் தோரணை, கை/ முக அசைவுகள் இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் குறிப்புகளாக இருக்கும். மனதின் வெளிப்பாடு சொற்கள்; உணர்வுகளின் வெளிப்பாடு இந்த சொல் சாரா செய்திகள். 90% வரை உணர்வுகளை இவை வெளிப்படுத்துகின்றன. நம்மை அறியாமலே நாம் இவற்றை உள் வாங்கி புரிந்து கொள்கிறோம்.பேச்சில் இருக்கிற பயம்; சட்டென்று கையை வீசுவதில் இருக்கிற எரிச்சல் இதை எல்லாம் யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை. இருந்தாலும் புரிந்து கொள்கிறோம்.

ஒரு ஒன்பது மாச குழந்தைக்குதான்ன்னு ஒண்ணுமே கிடையாது. இன்னொரு குழந்தை அடிபடறதை பாத்தா தானும் அழும்; அல்லது அப்செட் ஆகும்!
அப்புறமா நாம்தான் அதை ‘கெடுக்கிறோம்’! நான், நீ என்று வித்தியாசம் எல்லாம் சொல்லிக்கொடுக்கிறோம்! ஹரி யாரு? அது நான் ந்னு தன்னை சுட்டிக்காட்டினா சந்தோஷப்படுகிறோம்!
 ஒரு வயசுல அஹங்காரம் கொஞ்சம் முளை விட்டு இருக்கும். ஆனாலும் அது மற்ற குழந்தைகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும். இந்த சமயத்துல குழந்தை செய்கிற தப்பை கடிந்து கொள்கிறதை விட  பாத்தியா நீ செஞ்சதால அந்த பாப்பாவுக்கு வலிச்சதுரீதியான திருத்தங்கள் நல்லா வேலை செய்யும்

இந்த மாதிரி குழந்தைகள் நாலஞ்சு இருந்தா அதுகளை பார்க்கிறதே தமாஷா இருக்கும். எல்லாமே ஏக காலத்துல அழும்; அல்லது சிரிக்கும்! அவை எல்லாம் உணர்வு பூர்வமா ஒண்ணாகறதாலே இப்படி!
குழந்தையை வளர்க்கிறப்ப அதன் அம்மா அதோட உணர்ச்சிகளுக்கு ட்யூன் ஆயிடுவாங்க. குழந்தையோட ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பதில் அவங்ககிட்டேந்து வரும். குழந்தை ஒரு சத்தம் கொடுத்தா பதிலுக்கு ஒரு சத்தம் வரும். அதே சத்தமாத்தான் இருக்கணும்ன்னு கூட இல்லை! சத்தமா இருக்கணும்ன்னு கூட இல்லை! ஒரு புன்சிரிப்பு, தட்டிக்கொடுத்தல்…. ஏதும்!. அப்படி செய்வது குழந்தைக்கு தன் அம்மாவோட உணர்வு பூர்வமா தொடர்பில இருக்கோம் என்பதை சொல்லி அதை பாதுகாப்பாக உணரச்செய்யும்

ஏன் இதைப்பத்தி இங்கே சொல்கிறேன்னா இதுவே பின்னால் அந்த குழந்தை வளர்ந்த பிறகு மற்றவர் உணர்வுகளோட ட்யூன் ஆக உதவுது! இப்படி ட்யூன் ஆகாத குழந்தைகள் பின்னால கட்டுப்படுத்த முடியாத உணர்வுகளோட கஷ்டப்படுவாங்க! அதனால் குழந்தைகளுக்கு நேரம் இல்லைன்னு சொல்லாதீங்க! இதான் முக்கியம்.


No comments: