முடிந்த வரை தெளிவாக உணர்வு சார் நுண்ணறிவு பத்தி “சுருக்கமா” சொல்லிட்டேன். இந்த பதிவுகளின் நோக்கம் உங்களுக்கு இந்த விஷயம் குறித்து ஒரு அறிமுகம் கொடுத்து மேலே நீங்களே படிச்சுக்குங்க/ கத்துக்குங்க ந்னு சொல்லத்தான்! இனிமேலும் அதிகமா எழுதினா அது குழப்பத்தை அதிகமாக்குவதோடு அயற்சியையும் கொடுக்கலாம்.
கடைசியா இரண்டு பதிவுகளில சில செக் லிஸ்ட் மட்டும் பார்க்கலாம்!
சரியாக தன்னை உணர்கிறவருக்கு பின் வரும் விஷயங்கள்
தெரியும்:
நாம் எப்படி நடந்துக்கறோம்; மத்தவங்க நம்மை எப்படி பார்க்கிறாங்க?
நாம் மத்தவங்களுக்கு எப்படி எதிர்வினை செய்கிறோம்?
நம் மனப்பாங்கு, உணர்வுகள், உத்தேசங்கள், தகவல் பரிமாறும் விதம் எப்படி இருக்கு?
இதை மத்தவங்களுக்கு புரிய வைக்க முடியுதா?
நமக்கு இதுல பாண்டித்தியம் வந்தாச்சான்னு சோதிக்க:
எதிர்மறை எண்ணங்கள் மேலெழும்போது நமக்கு அது உடனே தெரியுதா?
உற்சாகப்படுத்திக்க தனக்குத்தானே பேசறது உதவிகரமா இருக்கும் சந்தர்பங்கள்
எதுன்னு தெரியுதா? எப்படி பேசறதுன்னு தெரியுதா? நமக்கு நாமே எப்படி உற்சாகப்படுத்தி கொள்கிறோம்?
கோபப்படுகிறோம் என்பது தெரியுதா?
நடப்பை எப்படி உள்வாங்கிக்கொள்கிறோம் என்று?
நடப்பில் என்ன உணர்ச்சி மேலோங்கி இருக்கிறது என்று?
நாம் அனுபவிக்கிறதை சரியாக மற்றவருக்கு உணர்த்த முடியுதா?
நம் மூட் மாறுவதை அறியறோமா?
நம் நடத்தை மற்றவர்களை எப்படி பாதிக்குது ன்னு அறியறோமா?
நாம் தவறான பக்கத்தில் இருக்க நேர்ந்தால் எப்படி நடந்துக்கிறோம்?
உணர்ச்சிகளை கையாளுதல்:
தன்னைத்தானே சமநிலைப்படுத்திக்கொள்ளுதல், பெருகும் கலக்கம், பயம், துக்கம், எரிச்சல் இது எல்லாத்தையும் உதறுதல் … முடியுதா?
உடலின் செயல்நிலை மாறும் போது தெரியுதா?
அழுத்தமான மனோ நிலை வருமானால் தளர்த்திக்கொள்ள முடியுதா?
மனக்கலக்கம் வந்தாலும் சரியான படி வேலை செய்ய முடியுதா?
கோபம் வரும்போது அதை குளிர்விக்க முடியுதா?
நமக்கு இதுல பாண்டித்தியம் வந்தாச்சான்னு சோதிக்க:
நமக்கு இதுல பாண்டித்தியம் வந்தாச்சான்னு சோதிக்க:
வெவ்வேறு உடல் செயல்நிலைகளை வெவ்வேறு உணர்ச்சிகளுடன் சரியாக சேர்த்துப்
பார்க்க முடியுதா?
உணர்ச்சியை கட்டுப்படுத்த தனக்குத்தானே பேசிக்கொள்ள முடியுதா? நம் உணர்வுகளை சரியாக மத்தவங்களுக்கு புரிய வைக்க முடியுதா?
எதிர்மறை உணர்வுகளை பட்டும் படாம கவனிச்சு ஆராய முடியுதா?
மற்றவர் கோபத்துக்கு நாம் ஆளாகும்போது அமைதியா இருக்க முடியுதா?
கோபத்தை பயன் தரும் வழிக்கு திருப்ப முடியுதா?
உங்களை நீங்களே நல்ல
மூடுக்கு திருப்பிக்க முடியுதா?
No comments:
Post a Comment