Pages

Thursday, October 9, 2014

நிறைவுப்பதிவு!




மோடிவேஷன்: ஒரு இலக்கை அடைய உணர்ச்சிகளை வழித்தடமாக்க முடிவது. எதிர்கால நலன் கருதி உடனடி திருப்தி அடைவதை தள்ளிப்போட முடிவது. சுவாரசியம் குறைந்த வேலை, செயல்களானாலும் உற்சாகத்துடன் ஈடுபட முடிவது. என்ன தடைகள் வந்தாலும் விடா முயற்சியுடன் இருப்பது. வெளியிலிருந்து தூண்டுதல் இல்லாமலே தானே  பல செயல்களை துவக்குவது.

 எதெல்லாம் மோடிவேஷன் இருப்பதை காட்டும்?

நினைத்த மாத்திரத்தில் செயல் திறனை அடுத்த படிக்கு அதிகரிப்பது.
எதிர்பாரா விளைவுகள் இருந்தால் சட்டென்று மீண்டும் திட்டமிட்டு செயலுக்கு வருதல்.
தொலைநாள் இலக்குகளை திட்டமிட்டு பகுதி பகுதியாக குறித்த காலத்தில் முடித்தல்.
உபயோகம் இல்லாத அனாவசிய பழக்கங்களை மாற்றுதல் அல்லது நிறுத்துதல்.
லாபம் தரும் புதிய நடத்தைகளை உருவாக்குதல்.
எதை செய்யப்போவதாக சொல்கிறோமோ அதை வாய் வார்த்தையாகவே நின்று விடாமல் செயலுக்கு கொண்டு வருதல்.
 திறமைகளுக்கு ஆய்வு: விடாமுயற்சி இருக்கா? தடைகள் உங்களை நிறுத்திவிடுகின்றனவா? சுயமாக மனநிலையை மாத்திக்கொள்ள முடியுதா?

பரிந்துள்ளல்: உருப்படியாக தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியணும். குழுக்களை உருவாக்கி நடத்த தெரியணும். கலந்து பேசி தீர்வுகளை காண முடியணும். பிறரிடையே தோன்றும் சச்சரவுகளை மத்யஸ்தம் செய்யத்தெரியணும். தனி நபர்களிடம் நல்ல தொடர்புகளை உருவாக்கிக்கொள்ள தெரியணும்.
எதெல்லாம் பரிந்துள்ளல் இருப்பதை காட்டும்?
சச்சரவுகளை தீர்த்தல்; ஒருமித்த கருத்துகளை உருவாக்குதல்; பிறர் பிரச்சினைகளில் மத்யஸ்தம் செய்தல்; மற்றவருக்கு தெளிவாக செய்தியை தெரிவிக்கும் தன்மை; ஒரு குழுவின் எண்ணங்களை பிரதிபலிக்க முடிவது; நேரடியாகவோ மறைமுகமாகவோ மற்றவர் கருத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடிவது; பிறருக்கு நம்மிடம் நம்பிக்கையை உருவாக்குதல்; ஆதரவு குழுக்களை உருவாக்க முடிவது; நம் அண்மையில் பிறர் மகிழ்ச்சியுடன் இருக்க முடிவது; மற்றவர் தமக்கு பிரச்சினை எழுந்தால் வழிகாட்டலும் ஆதரவும் தேடி நம்மிடம் வருவது.

திறமைகளுக்கு ஆய்வு: பிரச்சினைகளை எளிதில் தீர்க்க இயலுகிறதா?
மனம் நோகாமல் நேர்மையாக விமர்சனம் செய்ய முடியுதா?
பிறர் சொல்வதை காது கொடுத்து கேட்கிறோமா?
பிறரை பாராட்டுகிறோமா?

சமூகத்தில் தாக்கம்: ஏனையோர் உணர்வுகளை புரிந்திருப்பது; அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது; அவற்றை லாபகரமாக திருப்ப அவர்களுக்கு உதவுவது. அவர்கள் மற்றவர் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை உணரச்செய்வது.

சமூக தாக்கத்தை எவை காட்டும்?
பிறர் அனுபவிப்பதை மிகச்சரியாக பிரதிபலிப்பது.
மற்றவரது துன்பப்பட்டு எதிர்மறை உணர்வுகள் வெளிப்படும் நேரங்களில் சமநிலையுடன் இருக்க முடிவது.
பிறருக்கு துன்பம் நேர்கையில் அதை புரிந்து கொள்வது.
பிறர் தம் உணர்வுகளை கட்டுக்கு கொண்டு வர உதவுவது.
பிறர் நம்மை பரிந்துள்ளல் உள்ளவராக அறிவது.
பிறர் நம்முடன் தம் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடிவது.
குழுக்களின் உணர்வுகளை மேலாள முடிவது.
பிறரின் உணர்வுகளுக்கு பொருந்தாத நடத்தையை கண்டு பிடிப்பது.
திறமைகளுக்கு ஆய்வு:  நம்மால் பிறரது உணர்வுகளை மேலாள முடியுதா? நம் மேலதிகாரி கோபம், துக்கம், கலக்கத்தில் இருக்கையில் அது நமக்கு தெரிகிறதா? கோபமாக இருக்கும் ஒரு குழுவை கட்டுப்படுத்த முடியுதா? நம் எண்ணங்களுடன் நாமே சமாதானமாக இருக்கமுடியுதா?

அவ்வளவுதான்!
கொஞ்சம் கடினமாக புது விஷயமாக இருந்ததால எழுதறது கொஞ்சம் சவாலாகவே இருந்த்து. இருந்தாலும் ஓரளவு செய்திருக்கேன் ந்னு நினைக்கிறேன். குறை நிறைகளை தயை செய்து விமர்சனம் செய்யுங்கள். தேவையானால் திருத்தங்கள் செய்து ஒரு பிடிஎஃப் ஆக வெளியிடலாம்!
உங்களுக்கு இந்த பதிவுகள் உபயோகமாக இருந்திருந்தா கொஞ்சம் சொல்லுங்க. சிரமப்பட்டதுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்!
பல விஷயங்களும் தியரடிக்கல்ன்னு தெரியும். இருந்தாலும் கொஞ்சம் சிரத்தை, முயற்சி, இறை அருள் கூடினா சாதிச்சுடலாம். அப்படி சாதிச்சா அது உங்க வாழ்நாள் முழுதும் நல்ல துணையா இருக்கும் என்கிறதுல சந்தேகமே இல்லை. வெற்றி பெற வாழ்த்துக்கள்!
நிறைவுற்றது!

No comments: