Pages

Tuesday, September 1, 2015

கிறுக்கல்கள்! - 14



ஞான நூல்களை எப்படி பயன்படுத்துவது குருவே?

முன்னே நான் ஒரு ஆசிரியராக இருந்தேன். அப்போது மாணவர்களை ஒரு கேள்வி கேட்டேன். அநிராய்ட் பாரோமீட்டரை வைத்து ஒரு உயரமான கட்டிடத்தின் உயரத்தை அளப்பது எப்படி?

ஒரு மாணவன் பதில் சொன்னது இப்படி: அதை ஒரு நூலில் கட்டி கட்டிடத்தின் உச்சியில் இருந்தது தொங்கவிட்டு, அப்புறம் நூலை அளந்தால் தெரிந்துவிடும்!

அறியாமையிலும் வளமான கற்பனை! அதுபோலத்தான் ஞான நூல்களை படித்து புத்தியால அறிந்து கொள்ள முயல்வதும். ‘அதை’ ’அறிவதுஒரு சூரிய உதயத்தை, ஒரு அலை வீசும் சமுத்திரத்தை, மரங்களில் சலசலக்கும் காற்றை அறிவது போலவே!

No comments: