ஒரு விஞ்ஞானி குருவிடம் வந்து புகார் செய்தார். விஞ்ஞான கருது கோட்களை அவர் விமர்சிக்கிறார், அது விஞ்ஞானத்துக்கு நியாயம் செய்யவில்லை என்று.
குரு தான் விஞ்ஞானத்துக்கு எதிரி இல்லை, நண்பனே என்று அவருக்கு மிகுந்த பிரயாசையுடன் எடுத்துச்சொல்லிக்கொண்டு இருந்தார். ”… ஆனால் உங்கள் மனைவியைப்பற்றிய உங்களது ஞான - விஞ்ஞான கருதுகோள் ஞானத்துக்கும் அப்பாற்பட்டு இருக்கட்டும்!” என்றார்.
---
பின்னால் சீடர்களுடன் பேசும்போது இன்னும் அழுத்தமாக சொன்னார். கருதுகோள் என்பது ஒரு விஷயத்தை வரையறுகிறது. வரையறுத்த நிலையில் அது அழித்துவிடுகிறது. கருதுகோட்கள் உண்மை நிலையை அரிந்துப்பார்க்கின்றன. அரியும் விஷயத்தை நாம் கொன்றுவிடுகிறோம்.
அப்படியானால் கருதுகோட்கள் பயனற்றவையா?
No comments:
Post a Comment