சத்தியத்தைப்பத்தி பேசும்போது சொல்ல முடியாததை வார்த்தைகளால விவரிக்கப் பார்க்கிறோம். அதனால அது மிகச்சுலபமா தப்பா புரிஞ்சுக்கொள்ளப்படலாம். இதனால சத்தியத்தைப் பத்தி எழுதி இருக்கிறதை படிக்க அது முட்டாள்தனமாகவும் கொடுமையாகவும் ஆகிடுது. தன் பொது புத்தி சொல்கிறதை விட்டுவிட்டு நூல்கள் சொல்கிறதா தான் நினைக்கிறதை கடைபிடிக்கிறாங்க!
குரு
இதை சொல்லிவிட்டு இதை புரிய வைக்க ஒரு கதையையும் சொன்னார்.
ஒரு
கிராமத்து கருமான் தனக்கு ஒரு உதவியாளை தேடிக்கொண்டு இருந்தான். ஒரு வழியாக
மிகக்குறைந்த சம்பளத்துக்கு நிறைய நேரம் உழைக்கத் தயாரான இளைஞன் கிடைத்தான். பாடம்
உடனே ஆரம்பித்தது.
இதோ
பார், இந்த உலோகத்தை அடுப்பில் வைத்து பழுக்கக்காய்ச்சி இருக்கேன். இதை எடுத்து இந்த அடிகள் மேலே வைப்பேன். சரியா
வெச்சுட்டு நான் தலையை ஆட்டினதும் நீ அது மேலே இந்த சம்மட்டியால ஓங்கி அடிக்கணும்.
சீடன்
தனக்குப் புரிந்தபடி சம்மட்டியால் ஓங்கி அடித்தான்.
அடுத்த
நாள் கிராமத்தில் புது கருமான் இருந்தார்!
No comments:
Post a Comment