Pages

Wednesday, September 2, 2015

கிறுக்கல்கள்! - 15


என்னதான் சொன்னாலும் மக்கள் அவர்களுடைய பொறாமை, படபடப்பு, வெறுப்பு, குற்றவுணர்ச்சி எல்லாத்தையும் விட மாட்டேன் என்கிறார்கள்! இவை எல்லாம் அவர்களை உயிருடன் இருக்கும் போதையை ஏற்படுத்துகின்றன!

குரு  உதாரணமாக ஒரு கதையை சொன்னார்: உள்ளூர் தபால்காரர் சாலையில் போகாமல் குறுக்கு வழியாக ஒரு புல்வெளியை கடந்ததை குரு பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது அதை பார்த்த ஒரு காளை தன் ராஜ்யத்தில் புகுந்துவிட்ட தபால்காரரை துரத்தியது. அடித்துப்பிடித்துக்கொண்டு சைக்கிளை வேகமாக ஓட்டி மயிரிழையில் தப்பித்தார் தபால்காரர்.

பார்த்துக்கொண்டு இருந்த குரு சொன்னார்: மயிரிழையில் தப்பித்துவிட்டீர்கள். அது அனேகமாக உங்களை கொன்றே இருக்கும்.

ஆமாம், அது எப்போதுமே இப்படித்தான் துரத்துகிறது; நானும் மயிரிழையில் தப்பிக்கிறேன்!


No comments: