Pages

Tuesday, September 8, 2015

கிறுக்கல்கள்! - 20



குருவிடம் நாத்திகர் ஒருவர் வந்தார். "உண்மையாகச்சொல்லுங்க! கடவுள் இருக்கிறாரா?"
குரு சொன்னார் "நான் உண்மையாக இருக்கணும்ன்னா  பதிலே சொல்லக்கூடாது!"

பின்னால் சீடர்கள் ஏன் பதிலே சொல்லவில்லை என்று கேட்டனர். குரு சொன்னார்: "ஏனென்றால் அது பதில் சொல்ல முடியாத கேள்வி!"

"ஹா! அப்படின்னா நீங்க நாத்திகரா?"

"நிச்சயமா இல்லை. நாத்திகர் செய்கிற தவறு எதைப்பற்றி சொல்ல முடியாதோ அதை இல்லை என்கிறது."

ஒரு சிறு தாமதத்துக்குப்பின் சொன்னார்: "ஆத்திகர் செய்கிற தவறு அதைப்பற்றி சொல்வது!"


No comments: