புத்த குரு சொன்னார்: ஞானி உலகில் எல்லாவற்றையும் கச்சிதமாக இருப்பதாக பார்க்கிறான்.
இந்த
மடத்து தோட்டக்காரனைக்கூடவா?
அவன்
கூனன்.
குரு
சொன்னார்: அதிலென்ன சந்தேகம்? அவனுக்கு கச்சிதமான கூன் இருக்கிறது!
----
இது
பல சீடர்களுக்கு சமாதானமாக இல்லை.
குரு
தொடர்ந்தார்: கடவுள் நம் வாழ்கை என்னும் ஒரு ஓவியத்திரையை
அற்புதமாக நெய்கிறார்…. நம் பாபங்கள்
உட்பட! ஆனால் நாம் பார்ப்பது ஓவியத்திரையின்
பின் பக்கத்தை!
முத்தாய்ப்பாக
சொன்னார்: சிலர் ஏதோ பளபளப்பான கல் என்று நினைப்பதை
நகைக்கடைக்காரர் வைரம் என்று கண்டு கொள்கிறார்!
No comments:
Post a Comment