ஆன்மீகத்தில் ’ஈடு பட்டு இருந்த’ ஒரு பெண்மணி தான் அன்று காலை பாவமன்னிப்பு கேட்க போயிருந்ததாக மாஸ்டரிடம் சொன்னார்.
“அட! நீங்க அப்படி எந்த பாவமும் பண்ண முடியும்ன்னு தோணலையே?
என்ன சொல்லி பாவமன்னிப்பு கேட்டீங்க?”
”ம்ம்ம்! சோம்பேறித்தனத்தால ஒரு ஞாயித்துக்கிழமை சர்ச்சுக்கு
போகலை. ஒரு முறை தோட்டக்காரனை திட்டினேன்.”
”அவ்ளோதானே?”
”ம்ம்ம் அஞ்சு வருஷம் முன்னே என் மாமியாரை ஒரு வாரத்துக்கு வீட்டை விட்டு துரத்திட்டேன்!”
”அது ஆகி அஞ்சு வருஷமாச்சே?”
”ஆமாம்.
ஆனா அதை ஒவ்வொரு வாரமும் சொல்லி பாவமன்னிப்பு கேட்பேன். அத திருப்பித்திருப்பி நினைவு படுத்திக்கறது பிடிக்குது!”
No comments:
Post a Comment