Pages

Tuesday, September 2, 2014

கடவுள் ....




 கடவுள் கிடையாது. இதை நான் நம்பறேன். கடவுளை  நம்பறவங்க முட்டாள்கள்! அயோக்கியர்கள்.
நான் கடவுளை நம்ப மாட்டேன்; மத்தவங்களும் நம்பக்கூடாது!
கடவுள் கிடையாது. இதை நான் நம்பறேன்.
கடவுள் இருக்காரோ என்னவோ!! ஆதாரம் கிடைக்கும் வரை நான் நம்ப மாட்டேன்.
கடவுள் இருக்காரோ என்னவோ!! ஆதாரம் கிடைக்கும் வரை நான் நம்புவேன்.
கடவுள் இருக்கார். அவரை நான் நம்பறேன்.
கடவுள் இந்த கோவில்ல மட்டும்  இருக்கார். அதை நான் நம்பறேன்.
கடவுள் இல்லைன்னுதான் தோணுது. இருந்துட்டா என்னா செய்யறது? எதுக்கும் துண்டு போட்டு வைப்போம்! கடவுளே காப்பாத்து!
கடவுள் இல்லைன்னுதான் தோணுது. இருந்துட்டா என்னா செய்யறது? பயமா இருக்கே! எதுக்கும் போற்றி வைப்போம்! சனி பகவானே போற்றி போற்றி! காப்பாத்து!
கடவுள் இருக்காரா இல்லையான்னு தெரியலை. சந்தேகமா இருக்கு. இருந்துட்டா என்னா செய்யறது? எதுக்கும் துண்டு போட்டு வைப்போம்! கடவுளே காப்பாத்து!
கடவுள் இருக்காரோ இல்லையோ. இங்க இருக்கார்ன்னு சொல்லி இந்த பூசாரிங்க போடற ஆட்டம் தாங்கலை!
கடவுள் இருக்கார். ஆனா இந்த சடங்குகள் மேலே எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை!
கடவுள் இருக்கார். ஆனா இந்த பூசாரிங்க எல்லாம் சரி இல்லை! ஒண்ணுத்தையும் ஒழுங்கா செய்யறதில்லை. அதனால இங்க கடவுள் இல்லை!
கடவுள் இருக்கார். ஆனா இந்த பூசாரிங்க எல்லாம் சரி இல்லை! ஒண்ணுத்தையும் ஒழுங்கா செய்யறதில்லை. அதனால இங்க வழிபாடு செய்து பிரயோசனம் இல்லை!
கடவுள் இருக்கார். அவரை வீட்டில வெச்சு பூஜை, ஹோமம் எல்லாம் செய்தால் நமக்கு பணம், காசு, புகழ், நல்ல வேலை, எல்லாம் தருவார். கஷ்டம் ஒண்ணும் வராம பாத்துக்குவார்.
கடவுள் இருக்கார். அவரை வீட்டில வெச்சு பூஜை, ஹோமம் எல்லாம் செய்தால் நான் செய்யற ஊழல், அநியாயம் எல்லாத்தையும் மன்னிச்சுடுவார். நான் தண்டனை ஒண்ணும் இல்லாம தப்பிச்சுப்பேன்!
கடவுள் இருக்கார். அவரை வீட்டில வெச்சு பூஜை, ஹோமம் எல்லாம் செய்தால் நீங்க செய்யற ஊழல், அநியாயம் எல்லாத்தையும் மன்னிச்சுடுவார். நான் மட்டும்தான் அவரை வரவழைக்க முடியும்!
கடவுள் எங்கும் இருக்கார். அதனால் எதுக்கு கோவிலுக்கு போகணும்?
கடவுள் எங்கும் இருக்கார். அவரை எங்கே வேண்டுமானாலும் வணங்கலாம்!
கடவுள் எங்கும் இருக்கார், எனக்குள்ளேயும் இருக்கார். நானே கடவுள்! உங்களுக்கு என்ன வேணும்?
கடவுள் இருந்தா என்னா? இல்லாட்டா என்ன? நான் யார்கிட்டேயும் ஒண்ணும் கேட்க மாட்டேன். நான் நல்லவனா நடந்துப்பேன். என்ன கிடைக்கிறதோ கிடைக்கட்டும்!

பிற்சேர்க்கை:
கடவுள் கிடையாது. இதை நான் நம்பறேன். மத்தவங்க நம்பறது நம்பாதது அவங்கவங்க இஷ்டம்! அதைப் பத்தி எனக்கு அபிப்ராயம் இல்லை.

சக்தி மட்டுமே கடவுள். வேறு யாரும் கடவுள் இல்லை!
விஷ்ணு மட்டுமே கடவுள். வேறு யாரும் கடவுள் இல்லை!
சிவன் மட்டுமே கடவுள். வேறு யாரும் கடவுள் இல்லை!
#####  மட்டுமே கடவுள். வேறு யாரும் கடவுள் இல்லை!

#####  கடவுள் இல்லை. மீதி எல்லாருமே கடவுள்!!
…..

நீங்க எங்கே இருக்கீங்க? J



Post a Comment