Pages

Monday, September 8, 2014

மாஸ்டர் ஆடிட்யூட்.


அடுத்து நாம் எப்படி எல்லாம் இருக்க முடியும் ந்னு பார்க்கலாம்.

தன்னைத்தானே உற்சாகப்படுத்திக்கிறது பெரிய விஷயம். உழைப்பு உழைப்பு உழைப்பு… சிலர் திருப்பித்திருப்பி அயராம ஒரே விஷயத்தை செய்து செய்து அதுல பாண்டித்தியம் பெறுவாங்க. உலக அளவில சிறந்த விளையாட்டு வீரர்கள் இப்படி இருப்பாங்கநிறைய மேற்கத்திய மக்கள் ஒரு குழந்தையோட பலவீனங்களை ஒத்துப்பாங்க. அவங்களோட பலத்துல போகஸ் செய்வாங்க. இந்திய/ சீன மக்கள் அப்படி இல்லை. ஒரு விஷயம் கைவரலைன்னா இன்னும் கொஞ்ச நேரம் அதுக்காக உழைக்கணும்; அதெப்படி வராமப்போகும்? அவ்ளோதான்இப்படி இருக்கிற வேலை நடத்தை என்கிற கலாசாரம் மிகச்சிறந்த உந்து சக்தியா, உற்சாகமா, விடா முயற்சியா உருவெடுத்து மத்தவர்களை காட்டிலும் அவர்களை சிறப்பானவர்களாக்குது.

 நம் யோசித்து திட்டமிடும் திறனையும், பிரச்சினைகளை தீர்க்கும் திறனையும் நம் உணர்ச்சிகள் பாதிக்குதா? அப்படி எவ்வளவு தூரம்  பாதிக்க நாம் அனுமதிக்கறோம் என்பதை பொருத்தே நம் மன வலிமை இருக்கு. வாழ்க்கையில் நாம் சாதிக்க முடிவது எவ்வளோ என்பதும் இதிலேயே இருக்கு. என்ன வேலை செய்கிறோமோ அதை உற்சாகப்படுத்துவதா நம் உணர்வுகள் அமைஞ்சுட்டா அது போல வேறில்லை!

நம் உந்துதல் சக்தி (impulse) கட்டுப்படுத்தப்படணும் ன்னு சொன்னோம் இல்லையா? குழந்தைகளாக இருக்கிறப்பவே இது நடக்கணும். ஒரு அருமையான சோதனை. நாலு வயசு குழந்தைகள் நிறைந்த ஒரு வகுப்பில் ஒருவர் சொல்கிறார் -  ”குழந்தைகளே! உங்கள் எல்லாருக்கும் இனிப்பு தரப்போறேன். இங்கே வைத்திருக்கிறேன் பாருங்க. ஆனால் எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கு. போய்விட்டு வந்து கொடுப்பேன். ஒவ்வொருத்தருக்கும் இரண்டு கிடைக்கும். இல்லை, அவசரம் இப்பவே வேணும்ன்னு யாரும்  நினைச்சா  இப்பவே ஒண்ணே ஒண்ணு எடுத்துக்கலாம். அப்புறமா கிடைக்காது! சரியா?”

உடனே பல குழந்தைகள் ஒரு இனிப்பை எடுத்துக்கொண்டாங்க. சிலர் மட்டும் பொறுமையாக காத்து இருந்தாங்க. அது சுலபமாக இருக்கலை. பாட்டுப் பாடியோ விளையாடியோ தன்னைத்தானே கட்டுப்பாட்டில் வைத்து இருந்தாங்க. ஆராய்ச்சியாளர் திரும்பி வந்த பிறகு அவர்களுக்கு இரண்டு இனிப்பு கிடைத்தது. இந்த குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் வரை ஆய்வு தொடர்ந்தது. யார் இப்படி கட்டுப்படுத்திக்கொள்ள முடிந்ததோ அவர்கள் சமூக உறவுகளில் இன்னும் பலமாக இருந்தனர்; அவங்க இன்னும் பல உந்துதல்களை சமாளித்து நினைத்த இலக்கை அடைய முடிந்தது. பிரச்சைனைகளால் பாதிக்கப்படவில்லை; மனசு உடைந்து போகவில்லை. நம்பிக்கையுடன் புதிய விஷயங்களில் ஈடுபட்டு வெற்றியடைந்து கொண்டு இருந்தாங்க. மாறாக உடனே இனிப்பை எடுத்தவர்களில் பலரும் நம்பிக்கையில்லாமல் பிரச்சினைகளை சமாளிக்க கஷ்டப்பட்டுக்கொண்டு சண்டை சச்சரவுகளில் ஈடு பட்டுக்கொண்டு இருந்தாங்க.  இந்த இரு குழுவுக்கும் இடையில் சாட் (SAT) மதிப்பெண்களில் 200 புள்ளிகள் வித்தியாசம் இருந்தது.

இந்த இலக்கு நோக்கிய, வெகுமதியை பெறுவதை தள்ளிப்போடக்கூடிய சுய கட்டுப்பாடே உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதின் சாரம்!

அடுத்ததா ...
எல்லா விதமான செயல்களையும் பாழாக்கக்கூடிய மனக்கலக்கத்தின் அச்சாணின்னு ஒண்ணை சொல்ல முடியுமா? அப்படிச்சொல்லக்கூடியது கவலைதான்! கவலைப்பட்டுப் பட்டே காலம் உழைப்பு எல்லாமே விரயம் ஆகும். சதா கவலைப்படுகிறவர்களோட படிப்புத்திறன் என்ன மாதிரி சோதிச்சுப்பாத்தாலும் மோசமாகத்தான் இருக்கும்!
சிலருக்கு காலை எழுந்தது முதலே கவலைதான்! ஒரு கவலை தர விஷயம் முடிஞ்சாச்சுன்னா அடுத்த கவலை வரும்! கவலை தர ஒண்ணுமே இல்லைன்னாக்கூட ‘அட கவலையே இல்லையே, என்ன இது’ ந்னு கவலை வரும்!

பொதுவா கவலை கெட்டது என்றாலும் பரிட்சைப்பத்தின கவலை சமாசாரம் தமாஷானது! பலருக்கும் கவலை படுவது மனசை வேறு விஷயங்களில் போகாம தடுத்து, நினைவாற்றலை குறைச்சு மோசமா செய்யத்தூண்டும். ஆனா சிலருக்கு பரிட்சையில மோசமா செய்துடுவோமோ என்கிற கவலையே இன்னும் கடினமா உழைக்க வெச்சு நல்ல மார்க் எடுக்க வைக்கும்! இந்த ட்ரிக்கைத்தான் உணர்ச்சிகளை கையாளத்தெரிந்த சிலர் பயன்படுத்தறாங்க!

No comments: