நானா ரெனமனமுண் ணாடியுள நண்ணவே
நானா மவன்றலை நாணமுற - நானானாத்
தோன்றுமொன்று தானாகத் தோன்றினுநா னன்றுபொருள்
பூன்றமது தானாம் பொருள்.
நான்ஆர் எனமனம் உள்நாடி உளம்நண்ணவே
நானாம் அவன்தலை நாணம்உற - நான் நானாத்
தோன்றும் ஒன்றுதானாக தோன்றினும் நான்அன்றுபொருள்
பூன்றம்அது தானாம் பொருள்.
மனமானது நான் யார் என்று விசாரித்து இதயத்தில் அழுந்த அந்த மனதின் 'நான்' என்று கிளம்புகின்ற தலை சாய்ந்துவிடும். அதே கணத்தில் உடலே நான் என்னும் அஞ்ஞானத்தை
அழித்துக்கொண்டு தானாகவே ஒரு சத்திய வஸ்து 'நான் நான்' என்று இடைவிடாமல் தோன்றும். இப்படி தோன்றினாலும் அது
இப்போது எழுந்த புதிதான ஒன்று அல்ல. எப்போதுமே இருக்கும் ஆதி அந்தமில்லாத கால வரை இல்லாத பூரண வஸ்துவே ஆகும். அதுவே உண்மையான தான் ஆகும்.
गवेषणात्प्राप्य हृदन्तरं तत् पतेदहन्ता परिभुग्नशीर्षा ।
अथाहमन्यत्स्फुरति प्रकृष्टं नाहङ्कृतिस्तत्परमेव पूर्णम् ॥ ३२ ॥
க³வேஷணாத்ப்ராப்ய ஹ்ருʼத³ந்தரம்ʼ தத் பதேத³ஹந்தா பரிபு⁴க்³னஶீர்ஷா |
அதா²ஹமன்யத்ஸ்பு²ரதி ப்ரக்ருʼஷ்டம்ʼ நாஹங்க்ருʼதிஸ்தத்பரமேவ
பூர்ணம் || 32 ||
No comments:
Post a Comment