தன்னை யழித்தெழுந்த தன்மயா னந்தருக்
கென்னை யுளதொன் றியற்றுதற்குத் - தன்னையலா
தன்னிய மொன்று மறியா ரவர்நிலைமை
யின்னதென் றுன்ன லெவன்.
தன்னை அழித்துஎழுந்த தன்மய ஆனந்தருக்கு
என்னை உளதுஒன்று இயற்றுதற்கு - தன்னை அலாது
அன்னியம் ஒன்றும் அறியார் அவர்நிலைமை
இன்னது என்றுஉன்னல் எவன்.
அகங்காரமாகிய தன்னை நாசமாக்கி எழுந்த எப்போதும் தன் மயமாக விளங்கும் ஆனந்த
ஸ்வரூபருக்கு செய்வதற்கு என்று என்ன காரியம் இருக்கிறது? அவர் தம் ஸ்வரூபத்தையன்றி பிற எதையும் அறியார். அவருடைய ஸ்திதியை இன்னது என்று
அறிவதெப்படி?
अहङ्कृतिं यो लसति ग्रसित्वा किं तस्य कार्यं परिशिष्टमस्ति ।
किञ्चिद्विजानाति स नात्मनोऽन्यत् तस्य स्थितिं भावयितुं क्षमः कः ॥ ३३ ॥
அஹங்க்ருʼதிம்ʼ யோ லஸதி க்³ரஸித்வா கிம்ʼ தஸ்ய கார்யம்ʼ பரிஶிஷ்டமஸ்தி |
கிஞ்சித்³விஜானாதி ஸ நாத்மனோ(அ)ந்யத் தஸ்ய ஸ்தி²திம்ʼ பா⁴வயிதும்ʼ க்ஷம: க: || 33 ||
No comments:
Post a Comment