Pages

Monday, August 11, 2014

உபாகர்மா சிந்தனைகள்....நேத்து காலை பத்தரைக்கு பாடசாலைக்கு உபாகர்மா நடத்தி வைக்க போனேன். தலை  ‘ஆவணி அவிட்ட’ பையனை காணோம்! என்னன்னு விசாரிச்சா தலை ‘ஆவணி அவிட்டம்’ என்கிறதால வீட்டில கொண்டாட அழைச்சுண்டு போயிட்டாங்களாம்!
அதே போல கோவையில் சமீபத்தில் உபநயனம் ஒன்றுக்கு சிறு உதவி செய்யும் வாய்ப்பு மே மாதம் கிட்டியது. சும்மா கூப்பிட்டு பேசலாம் என்று கூப்பிட்டால் பையனின் அம்மா அங்கலாய்த்துக்கொண்டார் - வீட்டில் செய்ய முடியவில்லை, வாத்யார் வீட்டுக்கு போக வேண்டி இருந்தது என்று. சரிதானேமா, அங்கே ஹோமம் செய்து வேத ஆரம்பம் செய்வதுதானே சரி என்று சமாதானப்படுத்த வேண்டி இருந்தது.

இந்த உபாகர்மா பற்றி அந்தணர் பலருக்குமே கூட சரியான கற்பனை இல்லை! இதில் முக்கிய விஷயமே ‘வேத ஆரம்பம்’ செய்வதுதான். பத்திரிகைகளிலும் போட்டோ போட்டோவாக போட்டு ‘பூணூல் மாற்றிக்கொண்டார்கள்’ என்று எழுதுகிறார்கள்!

போன வாரம் ஸலூனுக்கு போயிருந்த போது நாவிதர் கேட்டார் “அதெப்படி சார் ஆவணி அவிட்டம் ஆடி மாசம் வருது” என்று! அது
​​
​​
ஶ்ராவண பௌர்ணமி. இந்த கணக்கு சந்திரனை ஒட்டியது. (சாந்த்ரமானம்). ஆனால் தமிழ் நாட்டில் சூரியனை ஒட்டிய கணக்கே புழக்கத்தில் இருக்கிறது. (சௌரமானம்). அதனால் பொதுவாக ஆவணி மாதம் வந்தாலும் சில சமயம் ஆடியிலும் வரும்.
அதாகப்பட்டது  அந்ந்ந்ந்த காலத்தில் வேதபயிற்சியில், தை மாத பௌர்ணமியில் ஹோமம் வளர்த்து பின் வேத பாடத்தை நிறுத்தி வைப்பார்கள். அடுத்த 6 மாதங்கள் காவியம், சாஸ்த்ரம் போன்ற பாடங்களே நடக்கும். பின் இந்த ‘ஆவணி அவிட்ட’த்தின் போது ஹோமம் வளர்த்து பின் வேத பாடம் திரும்பி ஆரம்பிப்பார்கள். அதற்காகத்தான் இந்த கர்மா. இந்த மாதிரி பயிற்சி இப்போது நடைமுறையில் இல்லை. அதனால் தை மாதம் செய்யாத கர்மாவுக்கு ப்ராயச்சித்தமாக ‘காமோ கார்ஷீத்’ என துவங்கும் ஒரு மந்திரத்தை ஜபம் செய்வர்.
இந்த ஜபம் தலை ‘ஆவணி அவிட்ட’ பையன்களுக்கு இல்லை. ஏன்? வேத ஆரம்பம் இவர்களுக்கு தலை ஆவணி அவிட்டம் முடிந்தே துவங்கும். அதனால் தை மாதம் இவர் வேத பயிற்சியிலேயே இல்லை என்பதால் பாபம் ஒன்றும் செய்யவில்லை. ஆகவே ப்ராயச்சித்தம் இல்லை.
மணி கண்டனுக்காக நெட்டில் உபாகர்மா ஆடியோ லிங்குக்காக தேடிய போது ஒரு இடம் அகப்பட்டது. எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஒரு ஆடியோவை கேட்டேன்.
அது இந்த ஜபம் குறித்ததுதான். சொதப்பிவிட்டார்கள். தவறை சுட்டிக்காட்டி கமெண்ட் போட்டேன். இன்னும் அது பப்ளிஷ் ஆகவில்லை! :-)) அதுக்குப்பின் போடப்பட்டவை எல்லாம் பப்ளிஷ் ஆகிவிட்டன.

பை தெ வே, கோவை பையன் சிகை வைத்துக்கொண்டு இருக்கிறான் என்று சொன்னார்கள். அம்மா “பையன் இப்படி சொல்கிறான். நீங்க கேளுங்களேன்” ந்னு அப்பாகிட்ட சொன்னாங்களாம். அப்பா பையனுடன் பேசப்போனாராம். இருவருக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் கடைசியில் பையர் அப்பாவை கன்வின்ஸ் பண்ணிவிட்டாராம்! இந்த காலத்தில் சிகை வைத்துக்கொண்டு ஸ்கூல் போக என்ன தைரியம் இருக்கணும்! மீ ஸோ ஹாப்பி!
இன்னும் ஹாப்பி ஆக்கினது இன்னைய காலை தொலைபேசியில் ரெண்டரை வயசு வாண்டு பேசியது!
“தாத்தா, நா பூணூல் போட்டுண்டேன்!”
“ரொம்ப சந்தோஷம் கண்ணா!”
“கொல்லைக்கு போனேன். அப்ப பூணூலை காதுல மாட்டிண்டேன்”
“ஹா!”
Post a Comment