Pages

Friday, December 12, 2014

அன்பு -2 - பயிற்சி




அன்பு வறண்டு போனால் பரவாயில்லை; அதை நாம் உணர்ந்து நடவடிக்கை எடுத்தால்….
ம்ம்ம்என்ன நடவடிக்கை?

ஆச்சரியம்! அன்பை கொடுப்பது பயிற்சியால பெருக்கிக்கொள்ளக்கூடியது என்கிறாங்க! ஒரே வேலையை திருப்பித்திருப்பி செய்யும் போது அதுல ஒரு சாமர்த்தியம்எக்ஸ்பர்டைஸ்- வருகிறாப்போலே, தினசரி அன்பை கொடுக்கப்பழக அது பெருகும். அது பெருகி என்னய்யா ஆகப்போகுது எனக்கு என்கறீங்களா? மேலே தூக்கிப்போட்ட பொருள் கீழே திருப்பி வருவது போல, சுவத்தில வீசி எறிஞ்ச பந்து மீண்டும் நம்மகிட்டேயே வருவது போல கொடுக்கும் அன்பு திருப்பி வரும்! அளவில பெருகி வராட்டாக்கூட கொஞ்சமாவது

அன்பும் அக்கறையும் காட்டறதாலே  DHEA என்கிற ஹார்மோன் அதிகமா சுரக்கிறதாம். இது அட்ரினல் ஹார்மோனுக்கு எதிரா செயல்படுது. அட்ரினல் ஹார்மோன்தான் நாம் உணர்ச்சி வசப்படுகிறபோது கோபம் அடிதடிக்கெல்லாம் நம்மை ரெடி பண்ணுகிற ஹார்மோன்.

இந்த அன்பு காட்டுவதும் அக்கறையுமே தலாய் லாமாவுடைய முக்கிய கொள்கையாம். அவர் சொல்கிறார்இதுதான் என் எளிய மதம். கோவில்கள் வேண்டாம்; சிக்கலான தத்துவங்கள் வேண்டாம். நம் மூளையும் இதயமுமே கோவில்கள்; கருணையே நம் தத்துவம்.” 

, எல்லாம் கிக்கட்டும். இத எப்படி செய்யதுன்னு சொல்லுய்யா” என்கறிங்ளா?


ரி ரி

அமைதியா ஒரு இத்துல உக்காந்துக்குங்க. நீங்ஏற்கெனெவே  த்யானம் எல்லாம் செய்யரா இருந்தாங்க முறைப்படி கொஞ்சம் உம்பை தளர்த்திக்குங்க. புதுசா? சரி. தலையை நிமிர்த்தி, முதுகை நிமிர்த்தி கூன் போடாம உக்காருங்க. பயப்படாதீங்க! மொத்தமா ஒரு 3-5 நிமிஷம் போதும்! கண்களை மூடுங்க. பயிற்சி முழுதும் மூச்சை ஆழமா எடுத்து விடுங்க! 
உடம்பை தளர்த்த உங்க உச்சந்தலையை கவனத்துக்கு கொண்டு வாங்க. அங்கே இருக்கிற இறுக்கமெல்லாம் போய் தளர்வாகிறதா கற்பனை செய்யுங்க. அதிலேயே சில வினாடிகள் கவனம் இருக்கட்டும். அப்புறம் அந்த தளர்வை அப்படியே கீழே இறக்குங்க. உங்க முகம், தலை முழுதும்…. கழுத்து…. தோள்கள்… புறங்கைகள்…, முழங்கை மூட்டுகள்… .கைகள்… மார்பு, வயிறு, முதுகு, இடுப்பு, தொடைகள், முழங்கால் மூட்டுகள், கால்கள், பாதங்கள்….. இப்படியே மேலிருந்து கீழாக தளர்வாவதை கற்பனை செய்யுங்க.
ஆரம்பத்துல இப்படி கற்பனை செய்யறது கஷ்டமா இருந்தாலும் தொடர்ந்து செய்ய இது பழகி கலை கைவந்துவிடும்.

ரைட்! இப்ப உடம்பு தளர்வா இருக்கு. உங்க தலைக்கு மேலே ஒரு பந்து வடிவில வெள்ளை ஒளி மண்டலம் இருப்பதா கற்பனை செய்யுங்க. இதுதான் அன்பு! ம்ம்ம் … இது சின்னதா இருக்கு! இதை பெரிசாக்கணும்.
யாரா இருந்தாலும் எப்போதாவது அன்பு காட்டப்பட்டு இருப்போம். அப்பதானே இதான் அன்புன்னு நமக்கு ஒரு கற்பனை வந்திருக்கும்? அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை நினைவுக்கு கொண்டு வாங்க. அதை அப்படியே அனுபவியுங்க. அந்த காலம்… அறையின் குளிர் அல்லது வெம்மை… அப்ப காதில் விழுந்த ஒலிகள்…. தொடுதல் உணர்ச்சியால அனுபவிச்சது….  கண்டது…. இப்படி ஐம்புலன்களாலும் அனுபவிச்சது நினைவுக்கு வரட்டும். இதுல உங்களுக்கு குழப்பம் இருந்தா, எப்போதோ நாம் ஒரு கள்ளம்கபடமில்லாத குழந்தையை தூக்கி கொஞ்சி இருப்போம் இல்லையா? அதை கற்பனை செய்துகொள்ளுங்க.

ரைட்! இப்ப அந்த அன்பை இந்த வெள்ளை ஒளி மண்டலத்துக்குள்ள ஊதிவிட்டு அதை பலூன் போல பெரிசாக்குங்க! திருப்பித்திருப்பி! இப்ப அது நம்மை விட பெரிசாயிடுச்சு. அது அப்படியே கீழே இறங்கி நம்மை சூழ்ந்துக்கொள்ளுது. இதை கொஞ்சம் அனுபவிப்போம்.

இப்ப மூச்சை நல்லா உள்ளே இழுப்போம். பலூன் பெரிசாகுது. நீங்க இருக்கிற அறை அளவுக்கு! மூச்சை விடுங்க. அத்துடன் அந்த அறையில் இருக்கும் எல்லா ஜீவன்களுக்கும் இந்த அன்பை அனுப்புங்க. மனுஷங்கதான் இருக்கணும்ன்னு இல்லே. ஈ, எறும்பு, கொசு… ஆமாம் கொசு… அன்பு செலுத்தப்பட்ட கொசு நம்மை கடிக்குமா கடிக்காதான்னு அப்புறம் யோசிக்கலாம்… பூனை, நாய்…. அறை முழுதும் நம்மோட அன்பால நிரம்பட்டும். இப்ப நல்ல வார்த்தையா நாலு சொல்லுங்க! நல்லா இரு! நோய் நொடி இல்லாம சந்தோஷமா இரு! இன்னைய பொழுது நல்லாவே இருக்கட்டும்! ஐ லவ் யூ! இப்படி ஏதாவது! ஆச்சா?
இப்ப மூச்சை இழுத்துவிட்டு பலூனை இன்னும் பெரிசாக்கி வீட்டையே நிரப்புங்க! வீட்டை வெளியிருந்து வெள்ளை ஒளிக்குள்ள பார்க்கிறீங்களோ இல்லை உள்ளேயே வெள்ளை பனி மண்டலத்துல பார்க்கிறீங்களோ, அது பொருட்டு இல்லை. கற்பனை முக்கியம். இப்ப முன் போலவே வீட்டில் இருக்கிற எல்லாருக்கும் அன்பு கொடுக்கப்படட்டும்!
இதே போல நம் தெரு, நகரம், மாநிலம், நாடு… கடைசியா உலக உருண்டை! 

அவ்ளோதான் முடிஞ்சது. இப்ப நாம் மகிழ்ச்சியாகவே இருப்போம். விரும்பினா இதே நிலையில் கொஞ்ச நேரம் இருக்கலாம். இல்லை வெளியே வரலாம். படக்குன்னு வெளியே வர வேண்டாம். இப்படி சொல்லிக்குங்க. “ஒண்ணுலேந்து அஞ்சு வரைக்கும் எண்ணுவேன். அப்புறம் வெளியே வருவேன். அப்ப நான் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பேன்.” இப்ப எண்ணுங்க “ஒண்ணு, ரெண்டு…. மூணு… வெளியே வரும் போது நான் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பேன்… நாலு… அஞ்சு…. நான் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பேன்…” -- இப்ப மெதுவா கண்களை திறங்க. “இப்ப வெளியே வந்துட்டேன். சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன்.”
அப்புறம்? அப்புறம் என்ன விழுப்புரம்! உங்க வேலையை கவனிக்கப்போங்க!  தொடர்ந்து செய்ய எப்பவும் சந்தோஷமாக இருக்கிறதை நீங்க பார்க்கிறீங்களோ இல்லையோ மத்தவங்க பார்ப்பாங்க. மத்தவங்ககிட்ட அன்போட பேசறதையும் பழகறதையும் பார்த்து அவங்களும் அதே போல நடந்துக்க ஆரம்பிப்பாங்க. இல்லைன்னாலும் கவலை இல்லை; நாம் அன்பை  வெளியே எதிர்பார்ப்பதை நிறுத்திடுவோம். அதனால நமக்கு பாதுகாப்பில்லாத உணர்ச்சியோ, மத்தவங்க மேல காரணமில்லாத கோபமோ வராது. அது போதாதா என்ன?

No comments: