இது இந்த தொடரில கடைசி பதிவு! அப்பாடா!
கடைசியானாலும் இது வரை பார்த்த எல்லா பதிவிலேயும் பார்த்ததைவிட
இது முக்கியமான படி!
வாழ்த்துகளை வேண்டுதல்!
நாம் கற்பனை செய்தவை எல்லாம் மெய்ப்பட நாம் உழைக்கணும். அவை
நடக்க நமக்கு ஆதரவு தேவை. நமக்கு என்ன நடக்கிறது என்பதுக்கு நாம் மட்டுமே காரணி இல்லை.
நாம் கொடுத்த உழைப்புக்கு ‘மெய் வருத்த கூலி’ கிடைச்சாலும் எல்லாம் நாம் விரும்பிய
படியே நடக்கிறதில்லை என்பது நிதர்சனம்! ஆகவே நமக்கு ஆதரவு தேவையா இருக்கு. அது வெளியிலிருந்து
எதிர்பார்த்தோமானால் அது எப்பவுமே கிடைக்கும்ன்னு சொல்ல முடியாது. ம்ம்ம்… என்ன செய்யலாம்?
ஒரு வேளை அது உள்ளேந்தே வருமானால்? அது வெளி நபர்களை நம்பி இல்லாம இருந்தால்? நமக்கு
நடப்பதை வெளி நபர்கள் முடிவு செய்வார்கள் என்ற ஒரு நிலை இல்லாம இருந்தால்?
இதை சாதிப்பதுதான் இந்த படி!
நம்மை விட சக்தி வாய்ந்த ஏதோ ஒண்ணு இருக்குன்னு ஏறத்தாழ எல்லாரும்
ஒத்துப்பாங்க! ஏதோ ஒண்ணு இந்த உலகத்தை, பிரபஞ்சத்தை படைச்சு இருக்கணும். ஏதோ ஒண்ணு
நாம் பார்க்கிற பௌதிக விதிகளையும் நிர்ணயம் செய்து இருக்கணும். ஆத்திகர்கள்
இதைகடவுள் என்பார்கள். நாத்திகர்கள் கடவுளை மறுத்தாலும் ஏதோ ஒரு சக்தி வெளியே இருக்கறதை
நாத்திகர்களில் சிலர் ஒப்புக்கொள்வார்கள். அல்லது நம்முள் இருக்கும் சக்தி (inner strength) என்பார்கள். இந்த சக்தியை செயலுக்கு கொண்டு வரலாம்.
வழக்கமான த்யானம் முடித்து…
ஒரு தங்க நிற ஒளிப்பிழம்பை தலைக்கு மேல் கற்பனை செய்து கொள்ளுங்கள்!
அதை உங்கள் மனோ நிலைக்கு ஏற்ப இறை சக்தியாகவோ உள்ளிருக்கும் சக்தியாகவோ கற்பனை செய்து
கொள்ளுங்கள். அது மெதுவாக நம் தலையில் இறங்கி பரவுகிறது. உச்சந்தலையில் இருந்து முகம்,
கழுத்து, தோள்கள், கைகள்… விரல்கள் வரை, மார்பு, முதுகு, இடுப்பு, தொடைகள், கால்கள்….
நம் உடல்முழுதும் அதனால் நனைந்து போகிறது. அது நம்மை முழுக்க ஆக்ரமிக்கிறது. நமக்கு
தேவையான எல்லா பண்புகளும், சக்தியும் ஆதரவும் இதனால் நமக்கு கிடைப்பதாக உருவகிக்கவும்.
மூச்சை இழுத்து விடுங்கள். இந்த உயர் சக்தியை நம்முள் இருத்திக்கொள்வோம்! நாம் நம்
வாழ்வை, இந்த நாளை…. எதிர்காலத்தை நம் ஆளுகையில் வைத்திருப்பதாக நினைத்துக்கொள்வோம்.
இந்த நிலையில் நாம் விரும்பும் வரை இருக்கலாம். பின்னர் மெதுவாக
1,2,3 என 5 வரை எண்ணி வெளியே வருவோம்! இது
பத்தி இந்த தொடரின் முதல் பதிவில பார்த்து இருகோம் இல்லையா?
நம் எதிர் காலம் குறித்த நேர் முறையான பலமான எண்ணங்களாலும்
உயர் சக்தியை வேண்டுவதாலும் நம் எதிர் காலத்தை வளமானதாக திருத்திக்கொள்ளலாம்.
வாழ்த்துகள்!
No comments:
Post a Comment