ரைட்! கற்பனை ஓடட்டும்! ஒளி
மயமான எதிர்காலத்துல என்ன என்ன நடக்கும்? நடக்க வேண்டிய
விஷயங்களை உணர்வு பூர்வமா பாருங்க! மகிழ்ச்சியான
தருணங்கள்; வெற்றிகள், சாதனைகள்! நம் உடல் நலம் எப்படி இருக்கும்? குடும்ப
வாழ்க்கை? நண்பர்கள்? எப்படி நேரத்தை
செலவழிக்கிறோம்? கற்ற திறமைகள் என்ன? சமூகத்துக்கும்
உலகுக்கும் கொடுப்பது என்ன? வேலை களத்தில் எதிர்காலம்? நிதி
நிலமை? நம் குணத்தில் என்ன முன்னேற்றங்கள்? வாழ்வு குதூகலத்துடன் இருக்க என்ன என்ன செய்கிறோம்? தாம்பத்தியம்?
கற்பனை மேலே ஓடட்டும்! நம்ம
வாழ்கையில் இருக்கிற பல பாதைகளில ஒரு பாதையை தேர்ந்தெடுத்துக்கலாம். உதாரணமா நாம் ஒரு சமூக சேவை ஸ்தாபனத்துல இருக்கோம். இது இன்னும் 3 வருஷங்களில
என்ன செஞ்சுகிட்டு இருக்கணும்?
அல்லது நமக்கு ஊர் ஊரா சுத்த பிடிக்கும். அடுத்த 3 வருஷங்களில எந்த ஊர் எல்லாம் பார்த்து இருக்கணும்?
அல்லது நமக்கு மேலே மேலே பரிட்சைகள் எழுதி தகுதிகளை இன்னும்
மேம்படுத்திக்க பிடிக்கும். இன்னும் 3 வருஷங்களில
என்னென்ன பரிட்சைகள் எழுதலாம்? என்னென்ன தகுதிகளை பெறலாம்? ஐடியா
வந்தாச்சா? இப்ப இதுகளில ஒண்ணை நினைவுக்கு கொண்டு வாங்க.
கிடைக்கணும்ன்னு இலக்கு வெச்சது இறுதித்தேர்வு மார்க் ன்னா அந்த மார்க் ஷீட்டை
பார்க்கிறோம்; கையில் அந்த சொரசொரப்பான பேப்பர்! கருப்பு எழுத்துகளில போட்டிருக்கிற மார்க்! அதை பாத்துகிட்டு இருக்கறப்பவே அம்மா வாழ்த்து சொல்வது காதில
விழுது! ஐம்புலன்களையும் செயலுக்கு கொண்டு வந்து அதை அனுபவிப்போம்! இது எவ்வளவுக்கு எவ்வளவு டீடெய்லோட இருக்கோ அவ்வளவு நல்லது; பலமா இருக்கும்!
ரைட்! அடுத்த இலக்குக்குப்போகலாம். எவ்வளவு
நேரம்/ தேவை இருக்கோ அதுக்கு தகுந்தாப்போல இதை எல்லாம் அமைச்சுக்கலாம். நிதர்சனமா பார்த்தா இதுக்கு ஒரு எல்லை இருக்கு! ஆசைக்கு அளவில்லை! உலகத்தையே
கொடுத்தாக்கூட சிலருக்கு போதாது.
அதனால நமக்கு நிஜமாகவே முக்கியமானதை தேந்தெடுத்து கற்பனையை
அமைச்சுக்கலாம்.
ஆச்சா? இப்ப இதுவோ இன்னும் அதிகமாகவோ என் வாழ்க்கையில் நடக்கட்டும்ன்னு
சொல்லிக்குங்க! முடிஞ்சது!
ஒரு விஷயத்த பலமா நம்பினா, நாளடைவில
அது நடந்துடும் என்கிறாங்க. பவர் ஆஃப் பாசிடிவ் திங்கிங்! இது
குறித்து பல ஆய்வுகள்!
சிலர் மூளையோட ரெடிக்குலர் சிஸ்டத்தை பழி சொல்றாங்க! அதாவது ஒரு கார் வாங்கணும்ன்னு நினைக்கிறோம். அடுத்த நாளேந்து பத்திரிகைகளில கார் விளம்பரமா கண்ணுக்கு
பட்டுக்கொண்டு இருக்கும்! மாருதி கம்பனி கார் வாங்கணும்ன்னு நினைச்சா அடுத்த நாள்ளேந்து
நாம் தெருல போறப்ப எல்லாம் மாருதி கம்பனி கார்களா கண்ணுல படும்! ஏன்? முன்னாடி இந்த விளம்பரம் எல்லாம் வரலியா? முன்னே மாருதி கார்கள் தெருவில ஓடலையா? இருந்தது! ஆனா கவனத்துக்கு
வரலை! இப்ப அதைப்பத்தி ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் மனசு போட்டு இருக்கிறதால்
அதெல்லாம் கண்ணுல படறதோட இல்லாம கவனத்துக்கும் வருது.
இதேபோல இன்னைக்கு இப்படி இப்படி நடக்கணும்ன்னு ஒரு தொடர்
எண்ணத்தை மனசுக்கு கொண்டு வரலாம். காலை சரியான நேரத்துக்கு எழுந்திருக்கிறோம். மனப்பயிற்சிகளை எல்லாம் முடிக்கிறோம். காலைக்கடன்களை முடிச்சு
அருமையான காபி/ டீ. சிற்றுண்டி; ஆபீஸுக்கு அதிக ட்ராபிக் இல்லாத சாலையில் போகிறோம். சிக்னல் எல்லாம் நமக்கு சாதகமாவே இருக்கு; ஆபீஸ்ல வேலையை ஜம்ன்னு ஊதி தள்ளறோம். மதிய சாப்பாடு காண்டீன்ல… அடடா
இன்னைக்கு சமையல்காரர் அருமையாவே சமைச்சு இருக்கார். நேரத்துக்கு சுடச்சுட கிடைக்குது! முடிஞ்சு வந்து தூங்காம நம் அடுத்த வேலையை கவனிக்கிறோம்; சக ஊழியர்களோட பயன் தரும்
உரையாடல்கள் நடக்குது. எல்லா வேலையையும் சீக்கிரம் முடிச்சுட்டு டாண் ந்னு அஞ்சு
மணிக்கு வீட்டுக்கு கிளம்பறோம். திருப்பியும் பிரச்சினை இல்லாத பயணம்; வீட்டுக்கு வந்து குழந்தைகளை கொஞ்சி விட்டு விளையாடி விட்டு
அருமையான இரவு உணவை சாப்பிட்டு விட்டு நிம்மதியா தூங்கப்போறோம்.
இந்த தொடர்ல ஏதேனும்
சரியா நடக்கலைன்னு வெச்சுக்கலாம். உதாரணமா மதிய உணவு நல்லா இல்லே. என்ன ஆகும்?
அது வழக்கம்தானேன்னு கண்டுக்காம போயிடுவோம்! கற்பனை செஞ்சதுல எது நடக்குதோ அதை மட்டும்
கவனிப்போம். எது நடக்கலையோ அது கவனத்துக்கு வராது! ஏன் ன்னு கேட்டா அதான் மூளையோட ரெடிகுலர்
சிஸ்டத்தோட கைங்கரியம்!
இதே பழக்கமாகப் போய் நல்லதையே கவனிப்போம்; மற்றதை விட்டுடுவோம்! அதான் ட்ரிக்!
No comments:
Post a Comment