Pages

Tuesday, December 16, 2014

மகிழ்ச்சி-2 பயிற்சி
சந்தோஷமா இருக்க மத்தவங்களோட நம்மை ஒப்பிட்டுக்கக்கூடாது! அவனப்பாரு! எவ்வளோ பணம், காரு, பங்களா, அவன் பசங்க ப்ரபலமான ஸ்கூல்ல படிக்குதுங்கஇந்த ரீதியில நினைச்சா
நீ எவ்வளோ பணம் சம்பாதிச்சாலும் புது பணக்காரனை பரம்பரை பணக்காரங்க இளப்பமாத்தான் பார்ப்பாங்க! நீ எந்த நிலைக்கு மேலே போனாலும் அந்த நிலைக்கு மேலே யாரோ ஒத்தராவது இருப்பாங்க! அடுத்து அவங்களை பாத்து ‘அவனைப்பாருந்னு அதே மாதிரி நினைக்கப்போறியா? இதுக்கு முடிவே இராது!
அதே போல வாழ்க்கையில் சின்ன சின்ன சந்தோஷங்கள் பலதும் எப்பவும் நடந்துகிட்டேத்தான் இருக்கு! அதில் பலதை நடக்க வேண்டியதுதானே ந்னு சாதாரணமா எடுத்துக்கறோம்.
நிறைய காத்து வெளியே இருக்கிறப்ப அதை உள்ளே இழுக்க வெளியே விட முடியாததோட கொடுமை ஒரு ஆஸ்த்மாவோட அவஸ்தை படறவருக்குத்தான் தெரியும்! சிறுநீர் பை நிரம்பி இருந்தும் வெளியேற்ற முடியாததன் கொடுமை சிறுநீர் பாதை அடைப்பு இருக்கிறவங்களுக்குத்தான் தெரியும்! பல விஷயங்களின் முக்கியத்துவமும் அது இல்லாத போதே உணரப்படுது!
தினசரி குழாய்ல தண்ணி வந்தா அதை எண்ணி சந்தோஷப்படறோமா? அது ஒரு நாள் வரலைன்னா கஷ்டப்பட்டுக்கொண்டு எல்லாரையும் திட்டி தீர்க்கிறோம். இதோ போலத்தான் பலதும்!
எக்ஹார்ட் டோல் ந்னு ஒரு ப்ரொபசர் ஒரு ஆராய்ச்சி செஞ்சார். சிலரை ‘க்ராட்டிட்யூட் ஜர்னல்  ந்னு ஒண்ணு எழுதச்சொன்னார். வாழ்கையில எனக்கு என்னவெல்லாம் கிடைச்சு இருக்கு; அதுக்கு நான் நன்றி உடையவனா இருக்கேன் என்கிறதே சாராம்சம். இப்படிப்பட்ட சந்தோஷம் தரும் ஐந்து வாக்கியங்களை தினசரி ஒரு வாரம் எழுதின பிறகு அவங்க 2 % அதிக மகிழ்ச்சியோட இருந்தாங்க. ஆனா விசேஷம் இனிமேத்தான் வருது! அதை நிறுத்திய பிறகும் மகிழ்ச்சி அதிகமாகிகிட்டே இருந்தது. சில வாரங்களுக்குப்பிறகு 5 % ஆச்சு. ஆறு மாசம் கழிச்சு அளவிட்டுப்பார்த்தப்ப 9 % அதிகமாகி இருந்தது! ஒரே ஒரு வாரம் செய்த பயிற்சி ஆறு மாசத்துக்குப்பிறகும் பலன் கொடுத்தது!

சிலருடைய கருத்துப்படி வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு மகிழ்ச்சியின் மட்டம் இருக்கு. சாதாரணமா எப்போதும் இந்த மட்டத்தின் மகிழ்ச்சியில் இருப்பாங்க. ஏதேனும் பெரும் துயர், நோய், பெரிய இழப்பு என்று ஏற்படும் போது இந்த மகிழ்ச்சியின் மட்டம் குறையுது. எளிய பயிற்சியாலேயே இதை மேலுக்கு கொண்டு வரலாம்.

ஆகவே இதை பயிற்சி செய்து பாருங்க! இரண்டே நிமிடங்கள்தான். உங்கள் தினசரி த்யானம்/ யோகா/ மூச்சுபயிற்சிக்கு பிறகு. நிமிர்ந்து உட்கார்ந்து கண்களை மூடி சின்ன லிஸ்ட் ஒண்ணு போடுங்க! சமீபத்தில – நேத்து? போன வாரம்? எப்படி வேணுமானாலும் இருக்கலாம்- எது உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது? .ம போட்டுக்கொடுத்த அருமையான காப்பி? ஆபீஸுக்கு கிளம்பும் போது உங்களை பார்த்து அழகாக சிரித்த குழந்தை? ஆபீஸில் சந்தித்த உற்சாகமான புதிய க்ளையண்ட்? மாலை பார்க்கில் நேற்றைக்கு இன்னும் கூடுதலா ஓடின ஒரு ரௌண்ட்? ஆமாம்! சந்தோஷத்தை கொடுப்பது ஏதோ பெரிய சமாசாரமா இருக்கணும்ன்னு எதுவும் இல்லை. தினசரி வாழ்க்கையில் நாம் சந்திக்கிற  சின்ன சின்ன சந்தோஷங்கள்அவற்றை எல்லாம் கவனிச்சா அவையே போதும்! அவை நிறைய இருக்கிறப்போ சேர்ந்து ஒரு பெரிய சந்தோஷத்தையே கொடுக்கும்!

சரி, லிஸ்ட்ல எவ்வளோ ஐட்டம் இருக்கணும்?
ஐந்தே ஐந்து உங்கள் சொந்த வாழ்க்கையில் நடந்தவை. ஐந்தே ஐந்து உங்கள் வேலைக்களத்தில் நடந்தவை. ஐந்தே ஐந்து விஷயங்கள் உங்களைப்பத்தி உங்களுக்கே பிடித்தவை! உங்களுடைய அழகான புன்சிரிப்போ, இரக்க குணமோ, திருப்பி ஏதும் எதிர்பாராத உதவியோஎதுவானாலும் பரவாயில்லை!
இதை எல்லாம் பட்டியல் போடும்போது விழுந்து விழுந்து சிரிக்கலைனாலும், ஈ ந்னு இளிக்கலைனாலும் ஒரு சின்ன புன்னகையாவது முகத்தில இருக்கட்டும்

ரைட் அவ்ளோதான்! கூடிய வரை தினசரி செய்யுங்க! கூடிய வரை தினசரி முன்னால் பட்டியல் போட்டதையே போடாதீங்க! புதுசா ஒண்ணை நினைச்சுப்பாருங்க!

இப்படி செய்யும்போது உங்க உணர்வுகளை களத்துக்கு கொண்டு வாங்க. அருமையான காஃபியை நினைச்சா அதோட மணம், நிறம், இதமாக சூடு, சுவை …. குழந்தையை கொஞ்சி இருந்தா அதோட ப்ரத்யேக வாசனை, பட்டு மாதிரியான ஸ்பர்சம்! அது கிக்கீ ந்னு சிரிச்சது! இப்படி எல்லா உணர்வுகளோடவும் அந்த கற்பனையை அனுபவியுங்க!
கலிபோர்னியா பல்கலைக்கழகத்துல ஆராய்ச்சி செஞ்சாங்களாம். ஒரு க்ரூப்பை தினசரி இந்த பயிற்சியை செய்யச்சொன்னாங்களாம். 30 நாட்கள் கழிச்சு பார்த்தப்ப கண்ட்ரோல் க்ரூபை விட இவங்க 25% அதிக மகிழ்ச்சியோட இருந்தாங்களாம்!
http://www.mindvalleyinsights.com/how-to-avoid-the-gap/

இப்படி செய்ய என்ன ஆகும் என்கிறது தெரியுதில்லே? இது வரை ‘டேக்கன் ஃபார் க்ராண்டட்’ ன்னு பாத்த எல்லாத்தையும் புதுசா பார்க்க ஆரம்பிப்போம். அப்புறம் நடக்கிற ஒவ்வொரு சின்ன நல்ல விஷயத்தையும் கவனிச்சு சந்தோஷப்படுவோம்! பின்னே நாளைக்கு அதை நினைவுக்கு கொண்டு வர வேணுமில்லே? :-)

சில பேருக்கு கடந்த காலத்தை ஒப்பிடும்போதுதான்அட, இவ்வளோ நல்லது நடந்திருக்கா நமக்கு!” ந்னு தோணும். இவ்வளோ நாள் புலம்பிகிட்டு இருந்தது தப்போன்னு கூட தோணும்! நல்ல செருப்பு இல்லைன்னு புலம்பற ஆசாமி காலே இல்லாதவனை பார்த்தா மாதிரி அட இதுக்கெல்லாம் நான் பொலம்பிட்டு இருக்கேனே ந்னு நினைக்கக்கூடும் இல்லியா? எங்கே இருந்தோம், இப்ப எங்கே வந்திருக்கோம் ந்னு பார்க்கிறப்போதுதான் நம் முன்னேற்றம் தெரியும்!

துன்பமோ இன்பமோ வெளி காரணிகளோட பங்கு கொஞ்சமே! பெரிய காரணி நம் மனமே! ஆகவே சந்தோஷமா இருக்கோமா, இல்லை எப்பவும் குறை சொல்லிக்கொண்டே இருக்கோமா என்கிறது பெரும்பாலும் நம் கையிலேயேதான் இருக்கு.
கடைசியா என் மெய்ல்ல இருக்கிற டேக் ஐ மறக்காதீங்க! வாழ்வது கொஞ்ச காலமே! சந்தோஷமா இருப்போம்!


No comments: