Pages

Monday, December 22, 2014

ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது! - 3




ஒரு பட்டியலை தயார் செய்து ஓபனா டிஸ்ப்ளே பண்ணலாம். இப்படி வெளிப்படையா காட்டறப்ப அவை நடக்க சாத்தியக்கூறுகள் இன்னும்  அதிகம்ன்னு சொல்றாங்க! இல்லைன்னா நமக்கே மறந்தாலும் மறந்துடும்! இதை பாக்கிறப்ப கொஞ்சம் பயமா இருக்கணும்; கொஞ்சம்டூ மச்சாஇலக்கு வெச்சுட்டோமோன்னு தோணனும்! மூணு வருஷத்துக்கான இலக்கு அப்படித்தானே இருக்கணும்ன்னு பார்த்தோம்? ஆனா அதே சமயம் அது நமக்கு உற்சாகத்தையும் தருவதா இருக்கணும்.

ஒரு களப்பயிற்சி செய்து பார்த்தாங்க. ஆலன் ரிச்சர்ட்ஸன் ஆஸ்த்ரேலியாவில செய்த ஆராய்ச்சி. http://tinyurl.com/kw3cfd7 பாஸ்கெட் பால் -கூடைப்பந்து- ஆடக்கூடியவங்களை 3 குழுவா பிரிச்சாங்க. இவங்க எத்தனை ஃப்ரீ த்ரோவை கூடையில போடறாங்க என்பதே ஆய்வு. முதல் நாள் யார் யார் எவ்வளோ பாய்ண்ட் எடுக்கறாங்கன்னு குறிச்சுக்கொண்டாங்க. ஆராய்ச்சி காலத்தில ஒரு குழு  தினசரி களத்துக்குப்போய் ஃப்ரீ த்ரோ பயிற்சி செய்தாங்க. மத்தவங்க யாரும் களத்துல பயிற்சி எதுவுமே செய்யலை. ஆனால் மூணாவது குழு தினசரி 20 நிமிடங்கள்  ஃப்ரீ த்ரோவை கற்பனையில செய்தாங்க. கற்பனைல பந்து கூடையில் விழலைன்னா அது சரியா விழறவரைக்கு கற்பனை செய்வாங்க!  இப்ப சொல்லிகிட்டு இருக்கோமே இந்த பயிற்சி அது போல. 20 நாட்கள் கழிச்சு திருப்பி ஒவ்வொருத்தரோட  செயல் திறனையும் மதிப்பிட்டாங்க. தினசரி பயிற்சி செய்த முதல் குழு 24% முன்னேறியது! இரண்டாம் குழுல முன்னேற்றம் எதுவும் இல்லை. ஆச்சரியமான விஷயம் வெறும் கற்பனை மட்டும் செய்த மூணாவது குழு 23% முன்னேற்றத்தை காட்டியது!

இரண்டு விஷயங்கள் நினைவில இருக்கட்டும்!
1. ஐம்புலன்களையும் செயல்படுத்துங்க.
2. உணர்ச்சிகளை களத்துக்கு கொண்டு வாங்க. கற்பனையில மகிழ்ச்சி எவ்வளவுக்கு எவ்வளோ அதிகமா இருக்கோ அவ்வளவுக்கு செயலாக்கம் சீக்கிரம் நடக்கும்!

ரைட் இதோ பயிற்சி: வழக்கமாக த்யானம் பயிற்சி செய்த பிறகு…
கற்பனை தொடங்கட்டும். லிஸ்டை பாருங்க. எதெல்லாம் அனுபவிக்கணும்ன்னு கற்பனை செய்து இருக்கிறோம்? அதுல ஒண்ணு ரெண்டு எடுத்துக்கலாம்.
அனுபவங்கள் பயணம்….. இங்கெல்லாம் போக வேண்டும் என்று கனவு காணும் இடங்கள். ஐம்புலன்களையும் செயலுக்கு கொண்டு வர மறக்க வேண்டாம்.
வாழ்கையின் தரம் எப்படி இருக்கும்? உங்கள் வீடு? படிக்கும் இடம், உறங்கும் இடம், ஓய்வெடுக்கும் இடம் முதலியன
பணிக்களம் எப்படி இருக்கிறது.. உடன் வேலை செய்வோர் எப்படி? வேலை மேசை? நண்பர்கள் யார் யார்? யார் நெருக்கம்? எப்படி அவர்களுடன் நேரம் செலவழிக்கிறோம்?
நேரமும் கையில் காசும் எல்லையற்று இருந்தால் என்ன எல்லாம் அனுபவிப்போம்?
இப்போது முதல் பகுதி முடிந்தது.. இவை எல்லாம் என்றோ ஒரு நாள் மெய்ப்படும் என நினைத்து புன்னைகை ஒன்றை புரியுங்கள்!

அடுத்து இவை எல்லாம் மெய்ப்படும் போது நான் எப்படி இருப்பேன்? உணர்வு பூர்வமாக, புத்தி பூர்வமாக? பண்புகளுடன்?
புதிய திறன்களுடன் உங்களை கற்பனை செய்து பாருங்க. அது புதிய மொழியோ, தலைமை தாங்குவது போன்ற திறனோ, தைரியம் போன்ற பண்போ ….. என்ன புத்தகங்கள் படிக்கிறோம்? எந்த செமினார், ப்ரோக்ராம் க்கு போகிறோம்? 
இப்போது நாம் முழுக்க ஆதரிக்கும் வாழ்கை மதிப்புகள் என்ன?
உணர்வு சார் நுண்ணறிவு எப்படி இருக்கிறது?
ஆன்மீக வாழ்கை எப்படி இருக்கிறது? எவ்வளவு முறை இறைவனை நினைக்கிறோம்? அல்லது த்யானம்/ மௌன விரதம் அனுசரிக்கிறோம்?
ஆதர்ச மனிதனாக கற்பனை செய்து, வீட்டிலும் பணிக்களத்திலும் எப்படி இருக்கிறோம் என்று கவனிக்கலாம்.
நம் உடலை கருத்தாக கவனிக்கிறோமா? நோய் எதிர்ப்பு எப்படி இருக்கிறது?  உடல் எடை? அடுத்த சில நிமிடங்களை இவற்றைக்குறித்து கற்பனை செய்யுங்கள்.
இந்த கற்பனையின் ள்ளுக்குள் புகுந்துவிடுங்கள்…. ஒரு முழு உடைக்குள் புகுவது போல

இது போல நாம் கற்பனை செய்வது போல நாம் வளர்ச்சி அடைந்த பின் நாம் பிறருக்கு என்ன தரப்போகிறோம்?
குடும்பத்துக்கு? மனைவி, மக்கள்,பெற்றோர்? நண்பர்கள்? வேலைக்களத்தில்? நகரத்துக்கு? மாநிலத்துக்கு? நாட்டுக்கு? உலகிற்கு?
இப்படி உதவி செய்தபின் அவர்களது முகத்தில் நிலவும் திருப்தியை கற்பனை செய்யுங்கள்.
இப்படி கொடுப்பதில்தான் உங்கள் நிறைவு இருக்கிறது என்பதை உணருங்கள். அடுத்த சில நொடிகளில் இப்போது எழுப்பிய கேள்விகளுக்கு விடை தேடுங்கள்!
பிறகு மெதுவாக வெளி வாருங்கள்.


No comments: