ஆன்மீகத்தில மிகவும் நாட்டம் கொண்ட எனக்கு இந்த The 6 Phase Meditation சப்ஜெக்ட் மிகவும் சுவாரசியமாக
இருந்தது. எல்லா உயிர்களுடனும் கனெக்ட் செய்வது எல்லாவற்றிலும் இருக்கும்
ஆன்மாவை கண்டறிவதே! அவற்றுடன் நேசம் கொள்வதும் தர்க்க ரீதியாக அடுத்த படியே. பழகப்பழக இது நம்மை மிகவும் முன்னேற்றும் என்று தோன்றுகிறது!
இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளாமல் மேலும் மேலும் எதையாவது எதிர்பார்ப்பதே
துன்பத்துக்கு காரணம் என்பதிலும் ஆச்சரியமில்லை. அதனால்
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது என்று கண்டறிவதும் சரியே.
பாரமான சுமையை அனாவசியமாக தூக்கிக்கொண்டு இருக்காமல் கர்மாவை
கழட்டி வைக்கும் வித்தையைப் பற்றி ஏற்கெனெவே சொல்லி இருக்கிறேன். வாசனா க்ஷயத்தை உண்டாக்கும்
அது மிக முக்கியமானது.
தன் இருப்பை உணர்ந்து (சத்), உணர்வு பூர்வமான மனசை நேர்மறை விஷயங்களில் திருப்பி (சித்) சந்தோஷத்தில் (ஆனந்தம்) நிலை நிற்கும் இது சத் சித் ஆனந்த வடிவான ப்ரம்மத்தை நினைவு
படுத்துகிறது. உண்மையில் நாம் எதிர்பார்ப்பது பரம லௌகீகமான ஆனந்தம் என்றாலும்
இங்கே எதோ விஷயம் இருக்கிறது. பரப்ரம்மத்துக்கு அடுத்த படியான ப்ரம்ம, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் சங்கல்ப மாத்திரத்திலேயே நடப்புகளை
மாற்றி சாதிக்கிறார்கள். அது போல பலவீனமான நரர்களாகிய நாம் பலமான, மீண்டும் மீண்டும் நிகழ்த்தும் சிந்தனைகளால் சில காலத்தில்
சாதிப்பது இயன்றதே! மலைக்கும் மடுவுக்கும் இருக்கும் வித்தியாசம் போல இருந்தாலும்
இது முடிகிறதே என்று சந்தோஷம் ஏற்படுகிறது! உலகையெல்லாம்
மாற்ற நம்மால் முடியாவிட்டாலும் ஏதோ நம்மைப்பொருத்த வரை கொஞ்சமாவது மாற்ற முடிவது பெரிய
விஷயம்!
அவசியம் பயிற்சி செய்து பாருங்கள்!
No comments:
Post a Comment