சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
754. லாக்ஷாவர்ண: அரக்கு போன்றவன்.
755. லஸத் கர்ண:அழகான காதுகள் உடையவன்.
756. ரஜனி த்வம்ஸி ஸந்நிப: மதி, சந்திரனுக்கு ஒப்பானவன்.
757. பிந்துப்ரிய: அமிர்தத்தில் பிரியம் கொண்டவன்.
758. அம்பிகாபுத்ர :அம்பிகையின் புதல்வன்.
759. பைந்தவ: பிந்து சக்கரத்தில் விளங்குபவன்.
760. பலநாயக: பலனுக்கு நாயகன். பலராமனுக்கு நாயகன்.
761. ஆபன்ன தாரக : ஆபத்துக்கு உள்ளானவர்களைக் காப்பாற்றுபவன்.
762. தப்த:(சத்ருக்களைப்) பொசுக்கியவன்.
763. தப்த க்ருச்ர பலப்ரத: தப்தக்ருச்சிரம் என்ற விரதத்திற்குப் பலனளிப்பவன்.
764. மருத்வ்ருத : காவேரி தீரங்களில் இருப்பவன்.
765. மஹாகர்வ : மிகவும் குள்ளமானவன், கோடிக்கணக்கான ஜனங்களால் நிறைந்தவன்.
766. சிராவாஸ: வெகு காலமாக இருப்பவன்.
767. சிகிப்ரிய: மயிலின் மேல் பிரியம் உடையவன்.
768. ஆயுஷ்மான் : ஆயுள் உள்ளவன்.
769. அநக: பாபம் அற்றவன்.
770. தூத : பரமசிவனின் தூதன்.
771. ஆயுர்வேத பராயண: வைத்ய சாஸ்த்ரம் அறிந்தவன்.
772. ஹம்ஸ: ஹம்ஸரூபன்.
773. பரமஹம்ஸ: ஸந்யாஸி ரூபன்.
774. அவதூதாச்ரமப்ரிய : நிர்வாணமாக இருக்கும் முனிவர்களிடம் பிரியம் கொண்டவன்.
775. ஆசுவேக : மிகவும் வேகமாகச் செல்பவன்.
776. அச்வ ஹ்ருதய : குதிரையின் நோக்கம் அறிந்தவன்.
777. ஹயதைர்ய பலப்ரத: குதிரையை அச்சமின்றி ஒட்டுபவனுக்கு பலம் அளிப்பவன்.
778. ஸுமுக : அழகான முகம் உள்ளவன்.
No comments:
Post a Comment