Pages

Tuesday, May 12, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 41






ௐ த்⁴ருதஹேமாப்³ஜபாணயே நம: ।தங்கத்தாமரையை கையில் ஏந்தியவனே
ௐ ஹோமஸந்துஷ்டமாநஸாயஹோமங்களால் மகிழும் மனமுள்ளவனே
ௐ பித்ருʼயஜ்ஞஸ்யப²லதா³ய நம: ।பித்ரு காரியங்களுக்கு பலனை அளிப்பவனே
ௐ பித்ருʼவஜ்ஜநரக்ஷகாய நம: ।தந்தை போல ஜனங்களை காப்பவனே
ௐ பதா³திகர்மநிரதாய நம: । 980காலாட்படையின் வேலையை நிர்ணயிப்பவனே
ௐ ப்ருʼஷதா³ஜ்யப்ரதா³யகாய நம: ।தயிர் கலந்த நெய்யை அவியாக அளிப்பவனே
ௐ மஹாஸுரவதோ⁴த்³யுக்தாய நம: ।பெரும் அசுரர்களை வதைக்க தயாராகா இருப்பவனே
ௐ ஸ்வஸ்த்ரப்ரத்யஸ்த்ரவர்ஷகாய நம: ।
போரில் எதிரிகளின் பாணங்களுக்கு தக்கபடி தனதை மழை போல வர்ஷிப்பவனே
ௐ மஹாவர்ஷதிரோதா⁴நாய நம: ।பெரும் மழையை மறைப்பவனே
ௐ நாகா³ப்⁴ருʼதகராம்பு³ஜாய நம: ।நாகத்தை வலுவாக பற்றிய தாமரைக்கையனே
ௐ நம:ஸ்வாஹாவஷட்³வௌஷட்வல்லவப்ரதிபாத³காய நம: ।
நம: ஸ்வாஹா வஷட்³ வௌஷட் எனும் சொற்கள் ஒலிக்கும் வேள்வியாய் ஒளிர்பவனே
ௐ மஹீரஸத்³ருʼஶக்³ரீவாய நம: ।?மிஹிர-ஸத்ருஶ-க்ரீவசூர்யனுக்குத் துல்லியமான கழுத்தை உடையவன்.
ௐ மஹீரஸத்³ருʼஶஸ்தவாயே நம: । ?மிஹிரஸத்³ருʼஶஸ்தவாயே நம: ।
சூர்யன் போல் எங்கும் பிரகாசிக்கும் தனது ஸ்தோத்திரத்தை உடையவன்.
ௐ தந்த்ரீவாத³நஹஸ்தாக்³ராய நம: ।(கம்பி ) தந்தி வாத்தியங்களை கைக்கொண்டவனே
ௐ ஸங்கீ³தப்ரியமாநஸாய நம: । 990சங்கீதத்தை விரும்பும் மனதுள்ளவனே
ௐ சித³ம்ஶமுகுராவாஸாய நம: ।பேரறிவு என்னும் கண்ணாடியில் வசிப்பவனே
ௐ மணிகூடாத்³ரிஸஞ்சராய நம: ।மணி கூடம் என்னும் மலையில் வசிப்பவனே
ௐ லீலாஸஞ்சாரதநுகாய நம: ।விளையாட்டாக சஞ்சரிக்கும் உடலை உடையவனே
ௐ லிங்க³ஶாஸ்த்ரப்ரவர்தகாய நம: ।
லிங்கம் தொடர்பான சாத்திரங்களை வெளிப்படுத்துபவனே
ௐ ராகேந்து³த்³யுதிஸம்பந்நாய நம: ।
சூரியன் சந்திரன் ஆகியோரது ஒளிக்கு சவால் விடுக்கும் ஒளி பொருந்தியவனே
ௐ யாக³கர்மப²லப்ரதா³ய நம: ।யாகங்களுக்கு க்ரம் பலனை அளிப்பவனே
ௐ மைநாககி³ரிஸஞ்சாரிணே நம: ।மைநாக மலையில் சஞ்சரிப்பவனே
ௐ மது⁴வம்ஶவிநாஶநாய நம: ।
மது என்னும் அரக்கனின் வம்சத்தை நாசம் செய்தவனே
ௐ தாலக²ண்ட³புராவாஸாய நம: ।தாலகண்டம் என்னும் நகரில் வசிப்பவனே
ௐ தமாலநிப⁴தேஜஸே நம: । 1000செங்கருங்காலியை ஒத்த தேஜஸ் உள்ளவனே
ௐ பூர்ணாபுஷ்கலாம்பா³ஸமேத ஶ்ரீஹரிஹரபுத்ரஸ்வாமிநே நம: ।
பூர்ணா புஷ்கலாம்பாவுடன் கூடிய ஹரிஹர புத்திரனே நமஸ்கரிக்கிறேன்.

  சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:


976. ஹேமாப்ஜாத்ரூத பாணி : தங்கத் தாமரையைக் கையில் வைத்திருப்பவன்.
977. ஹோமசந்துஷ்ட மானஸ: ஹோமத்தில் சந்தோஷம் அடைபவன்.
978. பித்ரு யக்ஞஸ்ய பலத : பித்ருக்களை உத்தேசித்துச் செய்யும் கர்மாக்களின் பலனை அளிப்பவன்.
979. பிதேவ ஜனரக்ஷக : தந்தையைப் போல் ஜனங்களைக் காப்பவன்.
980. பதாதி கர்ம நிரத: காலாட்படையின் செயல்களைக் குறிப்பிடுபவன்.
981. ப்ருஷதாஜ்ய ப்ரதாயக : தயிர் கலந்த நெய் அளிப்பவன். இது வேள்வியில் உள்ளது.
982. மஹாஸுர வதோத்யுக்த: பெரிய அசுரர்களை ஸம் ஹரிப்பதில் தயாராக இருப்பவன்.
983. ஸ்வாஸ்த்ர ப்ரத் யத்ஸ்த்ர வர்ஷக: யுத்தத்தில் தனது பாணங்களை எதிரிகள் ஏவும் பாணங்களுக்கு தக்கவாறு வர்ஷிப்பவன்.
984. மஹா வர்ஷ திரோதான : பெரிய மழையை அடக்குபவன்.
985. நாகாக்ருத கராம்புஜ: பாம்பைக் கையில் கொண்டவன்.
986. நம : ஸ்வாஹா வஷட் ச்ரௌஷட் பல்லவ ப்ரதிபாதக: நம : என்னும் சொல் சம்பத்தை அளிக்கக்கூடியது. ஸ்வாஹா என்பது சரீர ஆரோக்யம் அளிப்பது. வஷட் என்பது வசியத்தை அளிப்பது . ச்ரௌஷட் என்பது பிரியத்தை அளிப்பது. இவைகளைப் பரமனது மந்திரத்தில் எந்தெந்த விருப்பம் உள்ளதோ அவ்விதம் சேர்த்து அன்பர்களால் ஜபித்துக் கொண்டாடப்பட்டவன். இந்த நாமாவினால் பரமன் மந்திர மயமான உருவன். எல்லா தேவர்களுக்கும் மேலான தேவன்; வேள்வி உருவினன்;அக்னிவடிவினன் அன்பர்களின், ஸர்வோத்தமன் ஆவான் என்று பலவிதமாகப் போற்றப்படுகிறான்.
987. மிஹிரசத்ரு சக்ரீவ :சூர்யனுக்குத் துல்லியமான கழுத்தை உடையவன்.
988. மிஹிர ஸத்ரு சஸ்தவ :சூர்யன் போல் எங்கும் பிரகாசிக்கும் (பக்தர்களால் சொல்லப்பட்ட) தனது ஸ்தோத்திரத்தை உடையவன்.
989. தந்த்ரீ வாதன ஹஸ்தாக்ர :எப்போதும் வீணை முதலான வாத்யங்களின் தந்திகளை மீட்டிக் கொண்டிருக்கும் கையை உடையவன்.
990. ஸங்கதப்ரியமானஸ:சங்கீதத்தில் பிரியமான மனது உடையவன்.
991. சிதம்ஸ முகுராவாஸ:ஞானரூபமான கண்ணாடியில் வசிப்பவன்.
992. மணி கூடாத்ரி ஸஞ்சார :மணிகூடம் என்ற மலையில் வசிப்பவன்.
993. லீலா ஸஞ்சார தனுக:விளையாட்டாக வில்லைக் கையிலேந்தி ஸஞ்சரிப்பவன்.
994. லிங்கசாஸ்த்ர ப்ரவர்த்தக : பும்லிங்கம், ஸ்த்ரீலிங்கம், நபும்ஸகலிங்கம் (அதாவது ஆண், பெண், அலி) என்ற மூன்று லிங்கங்களைத் தீர்மானம் செய்யும் சாஸ்திரத்தை வெளிப்படுத்துபவன். (அல்லது சிவலிங்க பூஜா விதியை பிரகாசிக்கும்படி செய்பவன்)
995. ராகேந்துத் யுதி ஸம்பன்ன: பௌர்ணமி கால சாந்திரன் போன்றவன்.
996. யாமகர்மபலப்ரத: வேள்வியின் பலனை அளிப்பவன்.
997. மைநாககிரி ஸஞ்சார : (இந்திரனுக்குப் பயந்து சமுத்திரத்தில் ஒளிந்திருக்கும் இமயமலையின் புதல்வனான) மைனாகம் என்ற மலையில் ஸஞ்சரிப்பவன்.
998. மது வம்ச விநாசன: மது என்ற அரக்கனின் வம்சத்தை அழித்தவன்.
999. தால கண்ட புராவாஸா : தால கண்டம் என்ற நகரத்தில் வசிப்பவன்.
1000. தபால நிப தேஜ: தமாலம் போல் காந்தி உடையவன். (தமாலன் என்பது ஒருவகை இலை. இது மிகவும் காந்தி உள்ளதாக இருக்கும்)


-நிறைவுற்றது-
 

No comments: