சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
804. நாகரத்ன விபூஷித : நாகரத்தினம் அணிந்தவன்.
805. வாசஸ்பதி : வாக்குகளுக்கு அதிபதி.
806. புராராதி: முப்புரங்களுக்குச் சத்துருவானவன்.
807. ஸம்வர்த: ப்ரளய காலன்.
808. ஸமரேச்வர: யுத்தங்களுக்கு அதிபதி
809. உருவாக்மீ : பெரிய பேச்சாளன்.
810. உமாபுத்ர : உமையின் புதல்வன்
811. உடுலோக ஸுரஷக: நக்ஷத்திர உலகைக்காப்பவன்.
812. ச்ருங்கார ரஸ சம்பூர்ண : சிருங்கார ரஸம் நிறைந்தவன்.
813. ஸிந்தூர திலகாங்கித: ஸிந்தூரப் பொட்டு அணிந்தவன்,
814. குங்குமாங்கித ஸர்வாங்க: குங்குமத்தை எல்லா அவயவங்களிலும் தரித்தவன்.
815. காலிகேய விநாசன: காலிகேயன் என்னும் சர்ப்பம் அல்லது காலிகேயன் என்னும் அரக்கன் இவைகளை ஸம் ஹரித்தவன்.
816. மத்த நாகப்ரிய: மதம் உள்ள யானையிடம் பிரியம் உள்ளவன்.
817. நீத: அடைவிப்பவன்.
818. நாக கந்தர்வ பூஜித: நாகர்கள், கந்தர்வர்களால் புஜிக்கப்பட்டவன்.
819. ஸுஸ்வப்ன போதக : நல்ல கனவில் அடியவர்களுக்கு நன்மை போதிப்பவன்.
820. போதம் : விழிப்பு நிலையில் உள்ளவன். அதாவது ஞான நிலை உருவன்.
821. கௌளி துஸ்வப்ன நாசன: பல்லியின் கனவால் உண்டாகும் படையைப் போக்குபவன்.
822. சிந்தாராஸி பரித்வம்ஸ: மனக்கவலைகளை அகற்றுபவன்.
823. சிந்தாமணி விபூஷித: விரும்பியதை அளிக்கும் திறன் வாய்ந்த சிந்தாமணி என்னும் ரத்தினம் அணிந்தவன்.
824. சராசர ஜகத் ஸ்ரஷ்டா : அசைவதும் அசையாததுமான பொருள்களை உடைய உலகத்தை சிருஷ்டித்த அப்பன்.
825. சலத் குண்டல கர்ணயுக் : ஆடுகின்ற குண்டலங்கள் பூண்ட காதுகளை உடையவன்.
826. முகுராஸ்ய: கண்ணாடி போன்ற முகம் உடையவன்.
827. மூலநிதி : கருவூலன். பொக்கிஷதாரன். மூலன் என்ற சித்தனால் நிதிபோல் அமைக்கப் பெற்றவன்.
828. நிதித்வய நிஷேவித: சங்கம் பதுமம் என்கிற இரண்டு நிதிகளால் போற்றப்பட்டவன்
No comments:
Post a Comment