Pages

Saturday, May 9, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 39






ௐ வீரநூபுரபாதா³ப்³ஜாய நம: ।வீர சங்கை அணிந்த பாத கமலங்களை உடையவனே
ௐ வீரகங்கணபாணிமதே நம: ।வீர கங்கணம் அணிந்த கைகளை உடையவனே
ௐ விஶ்வமூர்தயே நம: ।உலக உருவினனே
ௐ ஶுத்³த⁴முகா²ய நம: ।சுத்தமான முகத்தை உடையவனே
ௐ ஶுத்³த⁴ப⁴ஸ்மாநுலேபநாய நம: । 930தூர வெண்ணீற்றை அணிந்தவனே
ௐ ஶும்ப⁴ த்⁴வம்ஸிந்யா ஸம்பூஜ்யாய நம: ।
சும்பனை த்வம்சம் செய்தவளால் போற்றப்பட்டவனே
ௐ ரக்தபீ³ஜகுலாந்த3காய நம: ।ரக்த பீஜன் குலத்திற்கு எமனே
ௐ நிஷாதா³தி³ஸ்வரப்ரீதாய நம: ।நிஷாதம் முதலான ஸ்வரங்களை விரும்புபவனே
ௐ நமஸ்காரப²லப்ரதா³ய நம: ।நமஸ்காரத்துக்கு பலனை அளிப்பவனே
ௐ ப⁴க்தாரிபஞ்சதாதா³யிநே நம: । பக்தர்களின் சத்ருக்களுக்கு அழிவுஅளிப்பவரே
ௐ ஸஜ்ஜீக்ருʼதஶராயுதா⁴ய நம: ।
தயாராக இருக்கும் அம்பை ஆயுதமாக கொண்டவனே
ௐ அப⁴யங்கரமந்த்ரஜ்ஞாய நம: ।அபயங்கர மந்திரத்தை அறிந்தவனே
ௐ குப்³ஜிகாமந்த்ரவிக்³ரஹாய நம: ।குப்ஜிகா எனும் மந்திரத்தை வரைந்த உருவினனே
ௐ தூ⁴ம்ராஶ்வாய நம: ।புகை வர்ண குதிரைகளை கொண்டவனே
ௐ உக்³ரதேஜஸ்விநே நம: । 940உக்கிரமான தேஜசை கொண்டவனே
ௐ த³ஶகண்ட²விநாஶநாய நம: ।பத்து கழுத்தனை (ராவணனை) அழித்தவனே
ௐ ஆஶுகா³யுத⁴ஹஸ்தாப்³ஜாய நம: ।வேகமான ஆயுதங்களை ஏந்திய தாமரைக்கையனே
ௐ க³தா³யுத⁴கராம்பு³ஜாய நம: ।கதை ஆயுதம் கொண்ட பங்கயக்கையனே
ௐ பாஶாயுத⁴ஸுபாணயே நம: ।பாசத்தை ஆயுதமாகக் கொண்ட நற்கையனே
ௐ கபாலாயுத⁴ஸத்³பு⁴ஜாய நம: ।
பல ஆயுதங்களை கொண்ட நல்ல தோள்களை கொண்டவனே
ௐ ஸஹஸ்ரஶீர்ஷவத³நாய நம: ।எண்ணற்ற தலைகளை உடையவனே
ௐ ஸஹஸ்ரத்³வயலோசநாய நம: ।எண்ணற்ற இரு கண்களை உடையவனே
ௐ நாநாஹேதயே நம: ।பலவித கணைகளை உடையவனே
ௐ த³நுஷ்பாணயே நம: ।வில் ஏந்தியவனே
ௐ நாநாஸ்ரஜே நம: ?நாநாஸ்ரகே। 950பல(வித) மாலைகளால்அலங்கரிப்பதில் ப்ரியர்.

சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
 
928. வீரநூபுர பாதாப்ஜ: வீரசலங்கை அணிந்த திருவடிகளை உடையவன்.
929. வீரகங்கணபாணிமான்: வீர வண்டையம் பூண்ட கைகளை உடையவன்
930. விச்வமூர்த்தி : உலகத்தின் உருவானவன்.
931. சுத்தமுக: சுத்தமான முகம் கொண்டவன்.
932. சுத்த பஸ்மானு லேபன: வெளுத்த திருநீற்றைத் தரித்தவன்.
933. சும்பத் வம்ஸன ஸம்பூஜ்ய: சும்பன் என்ற அரக்கனை வதம் செய்த காளியால் பூஜிக்கப்பட்டவன்.
934. ரக்த கும்ப குலாந்தக: ரக்த கும்பன் என்ற அரக்கனின் குலத்திற்கு யமன் போன்றவன்.
935.நிஷாதாதி ஸ்வரப்ரீத : நிஷாதம் முதலிய ஸங்கீத ஸ்வரங்களில் பிரியம் கொண்டவன்.
936. நமஸ்கார பலப்ரத: தன்னை வணங்குகிறவர்களுக்கு வேண்டியவற்றை அளிப்பவன்.
937. பக்தாரி பஞ்சதா தாய் : பக்தர்களின் சத்ருக்களைக் கொல்பவன்.
938. ஸஞ்சீக்ருத சராயுத : தயார் செய்யப்பட்ட வில் முதலிய ஆயுதங்களை உடையவன்.
939. அபயங்கர மந்த்ரக்ஞ: பயத்தைப் போக்கடிக்கும் மந்திரத்தை அறிந்தவன். அபயங்கரன் என்ற மந்திரவாதியால் கருதப்பட்டவன்.
940. குப்ஜிகா மந்த்ர விக்ரஹ: குப்ஜிகா என்ற மந்திர எழுத்துக்களால் வரையப் பட்ட தேகத்தை உடையவன். குப்ஜிகா என்ற தேவதையின் மந்திர பலத்தைக் கொண்டு அவுணர்களுடன் போர்புரிகிறவன்.
941. தூம்ராஸ்த்ரா: புகையை அஸ்திரமாகக் கொண்டவன்.
942. உக்ர தேஜஸ்வி : உக்ரமான காந்தி உள்ளவன்.
943. தசகண்ட விநாசக: ராவணனைக் கொன்றவன். ஸ்ரீராமனின் உருவினன்.
944. ஆசுகாயுத ஹஸ்தாப்ஜ : சீக்கிரம் செல்லக்கூடிய ஆயுதம் கொண்டவன்
945. கதாயுத கராம்புஜ: கதாயுதத்தைக் கையில் கொண்டவன்,
946.பாசாயுத ஸுபாணி :பாசாயுதம் தரித்தவன்.
947.கபாலாயுத ஸத்புஜ: கபாலத்தை ஆயுதமாகக் கொண்டவன்.
948. ஸஹஸ்ர மூர்த்த வதன: ஆயிரம் தலைகளைக் கொண்டவன்.
949. ஸஹஸ்ர த்வய லோசன : இரண்டாயிரம் கண்கள் உடையவன்.
950. நாநாஹேதி தரபாணி : நாநாவிதமான ஆயுதங்களைக் கொண்டவன்.


No comments: