Pages

Monday, May 11, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 40





ௐ பூ⁴ஷணப்ரியாய நம: ।அணிகலன்களில் பிரியம் கொண்டவனே
ௐ ஆஶ்யாமகோமலதநவே நம: ।கரும் நிறத்த மனம் கொள்ளும் உடலை உடையவனே
ௐ அரக்தாபாங்க³லோசநாய நம: ।ஓரத்தில் சிவந்த விழிகளை உடையவனே
ௐ த்³வாத³ஶாஹக்ரதுப்ரீயாய நம: ।பன்னிரு நாள் வேள்விகளில் பிரியம் உள்ளவனே
ௐ பௌண்ட³ரீகப²லப்ரதா³ய நம: ।பௌண்டரீக வேள்வியில் பலனை அளிப்பவனே
ௐ அப்தோர்யாமக்ரதுமயாய நம: ।அப்தோர்யாமம் எனும் யாகமாக இருப்பவனே
ௐ சயநாதி³ப²லப்ரதா³ய நம: ।சயன வேள்விகளுக்கு பலனளிப்பவனே
ௐ பஶுப³ந்த⁴ஸ்யப²லதா³ய நம: ।பசுபந்த வேள்விக்கு பலனளிப்பவனே
ௐ வாஜபேயாத்மதை³வதாய நம: ।வாஜபேய யாகத்தின் தெய்வமாக இருப்பவனே
ௐ அப்³ரஹ்மகீடஜநநாவநாத்மநே நம: । 960ப்ரமன் முதல் புழு வரை காக்கும் ஆத்மனே
ௐ சம்பகப்ரியாய நம: ।சம்பகத்தை விரும்புபவனே
ௐ பஶுபாஶவிபா⁴க³ஜ்ஞாய நம: ।பசு பாசம் ஆகியவற்றின் பிரிப்பை அறிந்தவனே
ௐ பரிஜ்ஞாநப்ரதா³யகாய நம: ।பதியை அறியும் அறிவை அளிப்பவனே
ௐ கல்பேஶ்வராய நம: ।இந்த கல்ப காலத்திற்கு ஈசனே
ௐ கல்பவர்யாய நம: ।தனக்கு உபாசனா கல்பங்களை உடையவனே
ௐ ஜாதவேத³ப்ரபா⁴கராய நம: ।அக்னியின் ஒளியுள்ளவனே
ௐ கும்பீ⁴ஶ்வராய நம: ।பாதிரி தாவரத்தின் ஈசனே
ௐ கும்ப⁴பாணயே நம: ।குடத்தை கையேந்தியவனே
ௐ குங்குமாக்த்தலலாடகாய நம: ।நெற்றில் குங்குமம் தரித்தவனே
ௐ ஶிலீத்⁴ரபத்ரஸங்காஶாய நம: । 970ஷிலீத்ரம் எனும் இலை போன்றவனே
ௐ ஸிம்ஹவக்த்ரப்ரமர்த³நாய நம: ।சிங்கமுகனை வதைத்தவனே
ௐ கோகிலக்வணநாகர்ணிநே நம: ।குயிலின் கூவுதலை கேட்பவனே
ௐ காலநாஶநதத்பராய நம: ।காலனை அகற்றுபவனே
ௐ நையாயிகமதக்⁴நாய நம: ।நியாய சித்தாந்திகளின் மதத்தை அகற்றுபவனே
ௐ பௌ³த்³த⁴ஸங்க⁴விநாஶநாய நம: ।பௌத்தர்களின் கூட்டத்தை அழிப்பவனே

  சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:

951. நாநாஸ்தி பூஷணப்ரிய : நாநாவித எலும்புகளை (எலும்பு மாலைகளை) சூடிக் கொள்ளப் பிரியம் கொண்டவன். அநேக எலும்பு மாலைகளை தரித்த பரமசிவனுக்குப் பிரியமான புத்திரன்,
952. ஆசயாம கோமளதனு : நீலவர்ணத்தினால் அழகான உருவம் உள்ளவன்.
953. ஆரக்தா பாங்க லோசன: சற்றே சிவந்த கடைக்கண் பார்வை உடையவன்.
954. த்வாதசாஹக்ரதுப்பிரிய: 12 நாட்களில் முடியும் வேள்வியின் பலன் அளிப்பவன். அல்லது பெளண்டரீக முனிவருக்கு அருள் செய்தவன்.
956. அப்தோர் யாமக்ரதுமய: அப்தோர் யாமம் என்ற வேள்வியின் உருவமானவன்.
957. சயநாதி பலப்ரத: சயனம் முதலிய வேள்வியின் பலனை அளிப்பவன்.
958. பசுபந்த பலதாதா : பசுபந்தம் என்ற வேள்வியின் பலனை அளிப்பவன்.
959. வாஜபேயாத்ம தைவத : வாஜபேயம் என்ற வேள்வியின் பிரதான தேவதையாக இருப்பவன். ப்ரஜாபதி என்கிற தேவஸ்வரூபன்.
960. ஆப்ரம் ஹக்ட ஜனனா வனாத்மனா: பிரம்மா முதல் புழுக்கள் வரை உள்ள சகலஜீவராசிகளையும் ரக்ஷிப்பதற்கெனவே உருவம் கொண்டவன்.
961. சம்பகப்ரிய : சம்பக புஷ்பத்தில் பிரியம் கொண்டவன்.
962. பசுபாச விபாகக்ஞ: தானபதியானதால், பசுக்களுடையதும், அதாவது ஜீவன்களுடையதும் பாசங்களுடையதுமான வேற்றுமை அறிந்தவன்.
963. பதிக்ஞானப்ரதாயக: பதியை அறியும் அறிவை அருளுபவன்.
964. கல்பேச்வர: கல்பம் என்பது நாட்களின் கூட்டமாகும். அவைகளுக்கு எஜமானன். அல்லது கல்பம் என்பது ஒரு நூலாகும் அதை வெளியிட்டவன்.
965. கல்பவர்ய : கல்பங்களில் கூறப்பட்டவன். (அல்லது) சிரேஷ்டமான தனது உபாஸனா கல்பங்களை கொண்டவன்.
966. ஜாதவேத:வேதங்களை உண்டு பண்ணியவன். ப்ரபாகர காந்தி அளிப்பவன்.
967. கும்பிச்வர: அரவங்களுக்கு அரசன், ஆதிசேஷனின் உருவன்.
968. கும்ப பாணி : ர்ண கும்பத்தைக் கையில் தரித்தவன்.
969. குங்குமாக்த லலாடக : நெற்றியில் குங்குமம் தரித்தவன்.
970. சிலித்ர பத்ர ஸங்காச: சிலித்ரம் என்ற இலையைப் போன்றவன்.
971. ஸிம்ஹ வக்த்ர ப்ரமர்த்தன : சிங்கமுகன் என்ற அவுணனைக் கொன்றவன்.
972. கோகிலத்வனிதாகர்ணீ: குயில் கூவுதலைக் கேட்பவன்.
973. கால நாசன தத்பர: காலனை அகற்றுபவன்.
974. நையாயிக மதக்ன: வேதப்ரமாணமன்றி அனுமான ப்ரமாணத்தால் ஈசுவரனை வாதிக்கிற தர்க்க வாதங்களின் ஸித்தாந்தத்தை அகற்றுபவன்.
975. பௌத்த ஸங்க விநாசன: பெளத்த கூட்டங்களை அழிப்பவன்.

 

No comments: