சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
779. துர்முக : துஷ்டர்களுக்கு பயத்தை உண்டு பண்ணும் முகம் கொண்டவன்.
780. விக்ன : காரியங்களுக்குத் தடையை உண்டு பண்ணுகிறவன்.
781. அவிக்ன : காரியங்களுக்குத் தடையின்றி பூர்த்தி செய்து அருள்பவன்.
782. விக்ன விநாசன : விக்னங்களை நாசம் செய்பவன்.
783. ஆர்ய: பூஜ்யன்
784. நாத: இறைவன்
785. அர்யமாபாஸ: சூரியனை விளங்கும்படி செய்பவன்.
786. பல்குண: அர்ஜுனன் - சிறிய உருவன்
787. பார்வதிப்ரிய : பார்வதிக்குப் பிரியமானவன்.
788. அராதிக்ன : சத்ருக்களைக் கொல்பவன்.
789. கனக்ரீவ : மேகம் போன்ற கழுத்து உடையவன்.
790. க்ரீஷ்ம சூர்ய ஸமப்ரப: க்ரீஷ்மகால (ஆனி ஆடி) சூரியன் போல் காந்தி தரித்தவன்.
791. க்ரீடி : கிரீடம் தரித்தவன்.
792. கல்ப சாஸ்த்ரக்ஞ: கல்ப சாஸ்த்ரம் அறிந்தவன்.
793. கல்பானல விதாயக : பிரளய காலத்து நெருப்பை ஏற்கிறவன்.
794. ஞான விக்ஞான பலத: விசேஷமான அறிவை அளிப்பவன்.
795. விரிஞ்சாரி விநாசன : ப்ரம்ம சத்ருக்களைக் கொல்லுபவன்.
796. வீரமார்த்தாண்ட வரத: வீரமார்த்தாண்டன் என்பவருக்கு வரம் அளித்தவன்.
797. வீர பாஹு: வீரபாகு உருவன். சுப்ரமண்யனின் சேனைகளுக்கு அதிபதி பலமான தோள்களை உடையவன்.
798. பூர்வஜ: முன்னால் உண்டானவன்.
799. வீரஸிம் ஹாஸன: மிகவும் பலம் பொருந்திய சிம்மத்தில் ஏறிக்கொண்டவன். வீரர்களுக்குள் சிங்காதனம் கொண்டவன்.
800. விக்ஞ: விசேஷ ஞானம் உள்ளவன்.
801. வீரகார்ய : வீரச் செயல் புரிபவன்.
802. அஸ்த்ர தானவ : ஆஸுராஸ்த்ரம் தரித்தவன்.
803. நரவீர ஸுஹ்ருத் ப்ராதா : அர்ஜுனனுக்குத் தோழனான கண்ணபிரானின் தம்பி உருவன், ஸாத்யகி.
No comments:
Post a Comment