முல்லா
நசருதீன் ஒரு நாள் கடைத்தெருவில்
போய்க்கொண்டு இருக்கும் போது
ஒரு மோதிரம் கேட்பாரற்று
கிடந்தது.
உடனே அதை எடுத்து
பத்திரப்படுத்திக்கொண்டார்.
வீட்டுக்கு போன
பிறகு ஆய்ந்து பார்த்தால்
அது ஒரு அருமையான,
விலை உயர்ந்த
வைர மோதிரம்.
ஒரு பக்கம் அதை
வைத்துக்கொள்ள ஆசை.
இன்னொரு பக்கம்
அப்படி வைத்துக்கொள்வதோ
தப்போ என்று ஒரு உறுத்தல்.
யோசனை செய்தார்.
அந்த கால,
அந்த ஊர் விதிகள்
படி இப்படி கண்டடெடுக்கும்
பொருட்களை ஒருவர் தனக்கே
வைத்துக்கொள்ளலாம்.
ஆனால் ஒரு
கட்டுப்பாடு;
கடைத்தெருவில்
தான் இப்படி கண்டுபிடித்ததை
வெளிப்படையாக சொல்ல வேண்டும்.
மூன்று நாட்கள்
இப்படி சொல்லி,
யாரும் தனது
என்று உரிமை கோராவிட்டால்
தானே வைத்துக்கொள்ளலாம்.
முல்லா
பலமாக யோசனை செய்தார்.
அடுத்த
நாள் விடியும் முன் கடைத்தெருவுக்கு
போனார்.
அங்கே யாருமே
இல்லை.
தான் மோதிரத்தை
கண்டெடுத்ததை மெதுவான குரலில்
சொன்னார்.
திரும்பிவிட்டார்.
அடுத்த
நாள் அதே.
மூன்றாம் நாளும்.
ஆனால் இன்று யாரோ
ஒருவர் முல்லா எதையோ சொல்லிக்கொண்டு
இருப்பதை பார்த்துவிட்டார்கள்.
"
முல்லா என்ன
சொன்னீங்க?”
"மன்னிக்கணும்.
அதுக்கான காலம்
போயிடுத்து.
இப்ப அதை திருப்பி
சொல்ல முடியாது.
நான் என் கடமையை
நிறைவேத்திட்டேன்.”
சந்தோஷமாக
வீடு திரும்பினார் முல்லா.
கெட்டவனாக
இருக்க விதிகளை மீற வேண்டியதில்லை.
மிகச்சரியாக
அவற்றை கடை பிடித்தால் கூட
போதும்!
No comments:
Post a Comment