அஷ்டாவக்ர
கீதை குறித்து பேச்சு எழுந்தது.
அந்த கீதோபதேசம்
ஏற்பட காரணமாக இருந்த ஜனகர்,
அஷ்டாவக்கிரர்
சம்பாஷணை சுவையாக இருக்கும்
என்றார் பகவான்.
பகவான் அந்த
கதையை சொல்ல வேண்டுமென்று
வேண்டுகோள் எழ,
பகவான்
சொல்லத்துவங்கினார்.
"எல்லா
மிதிலாதிபர்களையும் ஜனகர்
என்றே சொல்வார்கள் இல்லையா?
அவர்களில் ஒருவர்
ஆத்ம ஞானம் அடையுமுன் அவரது
அரசவை பண்டிதர் ஒருவரின்
மகன் ஜனகர் முன் சாஸ்திரம்
வாசித்துக்கொண்டு இருந்தான்.
அப்படி இருக்கும்
போஓது ஒரு நாள் குதிரையின்
மேலே ஏறுகையில் ஒரு அங்கவடியில்
கால் வைத்து ஏறி,
இரண்டாம் அங்கவடியில்
கால் வைக்குமுன் பிரம்ஹ ஞானம்
பெறலாம் என்ற வாக்கியத்தை
படித்தான்.
ஜனகர் "இந்த
வாக்கியம் உண்மைதானா அல்லது
கற்பனையா?”
என்று கேட்டார்.
"உண்மைதான்,
அதில் அணுவளவும்
சந்தேகம் இல்லை!”
என்றான் சிறுவன்.
"அது நடக்கவொண்ணாது
என்று தோன்றுகிறது.
அது உண்மையானால்
என் குதிரையை இப்போதே
வரவைக்கிறேன்.
அதன் முதல்
அங்கவடியில் கால் வைத்து ஏறி
இரண்டாம் அங்கவடியில் காலை
வைக்கு முன் பிரம்ஹஞானம்
எனக்கு சித்திக்கும் படி
செய்து நிரூபிக்க வேண்டும்!”
என்றார் ஜனகர்.
சிறுவன் "எனக்கு
அந்த திறமையில்லை;
அது என்னால்
முடியாது.
ஆனாலும் இந்த
வாக்கியம் பொய்யில்லை"
என்றான்.
கோபம் கொண்ட
ஜனகர் "அப்படியானால்
அந்த வாக்கியத்தை சாத்திரத்தில்
இருந்து எடுத்துவிடுங்கள்"
என்றார்.
பையன் சிறிதும்
பின் வாங்காமல் மீண்டும்
"இந்த
வாக்கியத்தின் உண்மை என்பது
குறித்து எந்த சந்தேகமுமில்லை"
என்றான் .
ராஜா அந்த
பையனை சிறையிலிட்டார்.
பட்டணத்தில்
இருக்கிற பண்டிதர்கள் அனைவரையும்
அழைத்து சாத்திர வாக்கியத்தை
நிரூபிக்கும் படி கேட்டார்.
அவர்கள் பையன்
சொன்னது போலவே சொன்னார்கள்.
"அப்படியானால்
உடனே குதிரையை வரவழைக்கிறேன்,
நிரூபியுங்கள்"
என்றார் ராஜா.
'அதற்கு எங்களுக்கு
திறமையில்லை'
என்றார்கள்.
ஜனகர் அனைவரையும்
சிறையில் அடைத்து,
காவல்காரர்களிடம்
பட்டணத்தில் புகும் ப்ராம்ஹணர்கள்
யாரானாலும் தன்னிடத்தில்
அழைத்து வரும் படி கட்டளை
இட்டார்.
அது முதல்
பிராம்ஹணர்கள் யார் வந்தாலும்
அவர்களை ராஜாவிடம் அழைத்துப்போவதும்,
அவர் அதே கேள்வியை
கேட்பதும் ப்ராம்ஹணர்கள்
அதே பதிலை சொல்வதும் அவர்களை
ராஜா சிறையிடுவதுமாக நடந்து
கொண்டிருந்தது.
நாளடைவில் செய்தி
திக்கெட்டும் பரவி பண்டித
ப்ராம்மணர்கள் மிதிலைக்கு
செல்வதை நிறுத்திவிட்டார்கள்.
No comments:
Post a Comment