Pages

Wednesday, May 8, 2013

யக்ஷப்ப்ரச்னம் - 2

 
கேள்விகளும் பதில்களும்:
1. கேள்வி: சூர்யனை உதிக்கும்படி செய்கின்றது எது?
பதில்: பரப்ரும்ஹம்.

ஆத்மபரமாக கேள்வி: உடல் முதலியவற்றை விட ஜீவன் வேறானவன் என்று எது கூறுகிறது?
ஆத்மபரமாக பதில்: வேதம்

2. கே: சூரியனைச்சுற்றி அவனுடன் கூடச்செல்கிறவர்கள் எவர்?
: தேவர்கள். [தேவா: என்று இங்குள்ள சொல்லுக்கு வேதம் என்றும் சிலர் பொருள் சொல்லுகின்றனர்.]
.கே: உடல் முதலியவற்றை விட வேறானவன் என்று அறிந்து கொள்ள ஜீவனுக்கு ஸஹாயமாக கூடவே இருப்பவை எவை?
.: சமம், தமம் முதலிய 6 குணங்கள்.

3. கே: எது சூரியனை அஸ்தமனம் அடையச்செய்கிறது?
: தர்மம்.
.கே: எது ஜீவனை அவன் சொந்த ஸ்தானத்திற்கு அதாவது ப்ரஹ்ம ஸ்வரூபத்திற்கு அழைத்துச்செல்கிறது?
.: கர்மா, உபாஸனை முதலிய தர்மங்கள். (இவை ஆத்ம ஞானத்தை அளித்து ப்ருஹ்ம ஸ்வரூபத்திற்கு அழைத்துச்செல்கின்றன. )

4. கே: சூரியன் எங்கே நிலைபெற்றிருக்கிறான்?
: ஸத்யம் என்னும் பரமாத்ம ஸ்வரூபத்தில்.
.கே: ஜீவன் எங்கே நிலைபெற்றிருக்கிறான்?
.: பரமாத்ம ஸ்வரூபத்தில்.

5.எதனால் மனிதன் ஶ்ரோத்ரியன் ஆகிறான்?
ஆசார்ய முகமாக வேதங்களை அத்யயனம் செய்து அவற்றின் பொருளையும் அறிந்து கொள்ளுதலால்.

6. கே: எதனால் மனிதன் உயர்ந்த பதவியை அடைகிறான்?
: தவத்தினால்.
.கே: எதனால் ப்ருஹ்மத்தை அடைகிறான்?
.: "தபஸ்" எனப்படும் "மனனத்தினால்"
குரு முகமாக அறிந்த விஷயத்தை பல யுக்திகளைக் கொண்டு ஆராய்ந்து பார்த்தலே "மனனம்". இதனால் பிரமாணத்திலும் பிரமேயத்திலும் ()உள்ள சந்தேகங்கள் ஒழிந்து தத்வ நிச்சியம் ஏற்படுகிறது.
7. கே: எது மனிதனுக்கு உண்மையில் ஸஹாயமாக இருக்கிறது?
: தைரியம்.
.கே: ஜீவன் எதானால் இப்பொழுது உள்ள ஜீவ ஸ்வரூபத்தைக் காட்டிலும் வேறான வாஸ்தவ ப்ருஹ்ம ஸ்வரூபத்தை அடைகிறான்?
.: நிதித்யாஸனத்தால்.

8. கே: மனிதன் எதனால் புத்திசாலி ஆகிறான்?
: பெரியோர்களை சேவிப்பதால்.
.கே: சிரவணம் மனனம் முதலியவை எதன் மூலம் சித்திக்கிறது?
.: ஆசார்ய ஸேவை மூலம்.

9. கே: ப்ராஹ்மணர்கள் எதனால் தேவர்கள், அதாவது சுவர்க்கத்துக்கு செல்ல தகுதி உடையவர்கள் ஆகிறார்கள்?
: வேதாத்யயனத்தால்.
9,10 கேள்விகள் மூலம் சமம், தமம் முதலிய குணங்கள், ஸதாசாரம் முதலியவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும் என தெரிகிறது.

10. கே: ப்ராம்ஹணர்கள் மனிதர்கள் என்று ஏன் கருதப்படுகிறார்கள்?
: உடலில் நான் என்ற எண்ணங்கொண்டு அதனால் ஜனனத்தையும் மரணத்தையும் அடைவதால்.

No comments: