Pages

Friday, May 10, 2013

யக்ஷப்ப்ரச்னம் - 4



21. கே: இவ்வுலகில் சுக வாழ்வை விரும்புகிறவர்களுக்கு முக்கியமானது எது?
: பசுக்கள்.
[பசுக்களே சிறந்த சம்பத் என்று பல நூல்களிலும் கூறப்பட்டு இருக்கின்றது. வித்3யதே கோ3ஷு சம்பன்னம் என்ற ராமாயண ஸ்லோகத்தை காண்க.]

22. கே: ஸந்ததியை விரும்புகின்றவர்களுக்கு சிறந்த ஸந்ததி யாது?
: பிள்ளை. [பெண் வயிற்று பிள்ளை முதலியவர்களை ஸந்ததி என் ஒருவாறு கூறியிருப்பினும் அவர்கள் எல்லோரையும்விட தன் சொந்த பிள்ளையே சிறந்த ஸந்ததியாவான்.]

நேரடி கேள்விகள் போய் இப்போது புதிர்கள் வருகின்றன.
23. கே: ஒருவன் சப்தம் ஸ்பரிசம் முதலிய விஷயங்களை எல்லாம் இந்திரியங்களால் அனுபவித்து வருகிறான். சிறந்த அறிவாளி "தனம் முதலியவை உள்ளவன்" என்று போற்றப்படுகிறான். ஏராளமாக தானம் செய்யத்தகுதி உள்ளவன் என்றும் பலரால் கருதப்படுகிறான். உயிருடனும் இருக்கிறான். இருந்தாலும் பிழைத்து இருப்பவனாக கருதப்படவில்லை. யார்?
: தேவதைகள், பித்ருக்கள், ஊழியம் செய்கின்றவர்கள், அதிதிகள் இவர்களுக்கு அந்தந்த காலத்தில் அளிக்க வேண்டியதை அளிக்காமல் தானும் அனுபவிக்காமல் இருப்பவனே உயிருடன் இருந்தும் பிழைத்திருப்பவனாக கருதப்படுவதில்லை. [அவனையே "ஜீவன் ம்ருதன்" என்று கூறுவர்.]

24. கே: பூமியைவிட போற்றத்தகுந்தவள் யார்?
: தாய்

25. கே:ஆகாயத்தைவிட உயர்ந்தவன் யார்?
: தகப்பன். [மேற்கண்ட இரு கேள்விகளால் தாய் தந்தையருக்கு பணிவிடை செய்ய வேண்டுமென்ற கருத்து புலனாகிறது]

26.கே: காற்றைவிட வேகமாக செல்லக்கூடியது எது?
: மனது.

27. கே: புற்களை விட அதிகமானது எது? (பயனற்றது எது என்றும் பாடமுண்டு.)
: கவலை. [கவலைப்பட ஆரம்பித்தால் அது மேன்மேலும் வளர்ந்துகொண்டே போகும். கவலைப்படுதால் சொற்ப பயனும் இல்லை. ஆதலால் மனதை ஒடுக்கி கவலையை ஒழிக்க வேண்டும் என்பது கருத்து.]

28.கே: எது தூங்கும்பொழுது கண்ணை மூடுவதில்லை?
: மீன்.
. : ஜீவன் ஸுஷுப்தி காலத்தில் ப்ருஹ்ம ஸ்வரூபத்தில் லயித்து இருக்கிறபடியால் அவனுக்கு எப்போதும் "த்ருஷ்டி" எனப்படும் அறிவு குன்றுவதில்லை.

29. கே: பிறந்தவுடன் அசையாமல் இருப்பது எது?
: முட்டை
.: பிண்டம் எனப்படும் இவ்வுடலும், ப்ருஹ்மாண்டமும் இயற்கையில் ஜடமாதலால் சேதனன் ஒருவனால் தூன்டப்படும் வரை அசைவற்றே இருக்கும்.

30. கே:எதற்கு ஹ்ருதயமில்லை?
: கல்லுக்கு ஹ்ருதயமில்லை.
.: கல் போல், தேகத்தில் நான் என்ற அபிமானமில்லாத ஞானிக்கு, சோகத்தையும் துக்கத்தையும் அனுபவிக்கக்கூடிய ஹ்ருதயம் கிடையாது.

No comments: