ஒரு சன்யாசி
இருந்தார்.
அவர் ப்ரம்ஹசர்யத்தை
மிகவும் வலியுறுத்தி வந்தார்.
குறிப்பாக உடலுறவு
கொள்வதை எதிர்த்து பிரசாரம்
செய்தார்.
அவருக்கும் சில
சிஷ்யர்கள் உருவானார்கள்.
நாளடைவில் அவர்
இறந்து போனார்.
இந்த அதிர்ச்சி
தாங்காமல் அவருடைய பிரதான
சிஷ்யரும் சில நாட்களிலேயே
இறந்து போனார்.
மேலுலகம்
போன சிஷ்யருக்கும் அதிர்ச்சி
காத்து இருந்தது.
சன்யாசி ஒரு
மரத்தின் கீழ் அமர்ந்திருக்க
அவர் மடியில் பேரழகி ஒருவள்
அமர்ந்து இருந்தாள்.
சிஷ்யர்
சொன்னார்:
"குருவே இறைவன்
கருணையே கருணை!
நீங்கள் மண்ணுலகில்
கடைபிடித்த பிரம்மச்சரியத்தின்
பரிசாக இப்படி ஒரு பேரழகியை
உங்களுக்கு சொர்க்கத்தில்
அனுபவிக்க கொடுத்து இருக்கிறார்!”
சன்யாசி
சொன்னார்,”
முட்டாளே!
முதலாவது இது
சொர்க்கம் இல்லை.
இரண்டாவது இது
பரிசு இல்லை.
எனக்கும் அவளுக்குமான
தண்டனை!”
No comments:
Post a Comment