Pages

Sunday, March 16, 2014

ஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் - 1அவ்வப்போது ஒரு வேலையை முடிக்கும் போது தானாக அடுத்த வேலை வந்து சேருவது வழக்கம்தான். போன முறை ஶிவ அஷ்டோத்திர ஸஹஸ்ரநாமாவளி முடித்த பின் இனி ஒன்றும் இல்லை என்று நினைத்தேன். நண்பரின் தொலை பேசி உருவில் அடுத்த இரு பணிகள் வந்து சேர்ந்தன! பல நாட்களாக மெனெக்கெட்டும் சிலர் உதவியை நாடியும் இப்போதுதான் கொஞ்சம் முடியும் என்று நம்பிக்கை வந்து இருக்கிறது- அவள் விடுவாளாயின்!
ஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கத்தை வலையில் தேடி http://sanskritdocuments.org/  இல் கண்டு பிடித்து அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் கண்டு பிடித்து கூடுதலாக வலையில் சம்ஸ்க்ருத அகராதியையும் திறந்து வைத்துக்கொண்டு மொழி பெயர்த்து பின் பையரின் பார்வைக்கு அனுப்பி வைத்தால் கொஞ்சமே கொஞ்சம் சரி செய்து விட்டு பின் நேரமேயில்லை என்று திருப்பி விட்டார். நடுவில் அவர் மூலத்தை சரி பார்க்க தன் நண்பருக்கு அனுப்பி பெற்று இருந்தது உதவியாக இருந்தது. திரு சுந்தர் ஹட்டங்காடி அவர்களுக்கு நன்றி!
காத்திருந்து காத்திருந்து இனி தாமதிக்க முடியாது என்று வெளியிடுகிறேன். நடுவில் நடையும் தரமும் மாறிவிட்டது என்றால் அதற்கு இதுவே காரணமென்று அறிக!
-------------
தண்டகம் என்பது ஒரு செய்யுள் வகை. கட்டுக்குள் அடங்காதது. அதில் எவ்வளவு வாக்கியங்கள், சொற்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். வரும் பதிவுகளில் பலதாக பிரித்து போட்டு இருந்தாலும் த்யானம் ஸ்துதி ஆகியவற்றை தொடர்வது இறுதி வரை ஒரே வரி என்றுணர்க!
எழுதியவர் மஹாகவி காளிதாஸன்! எண்ணை தேய்த்து குளித்து எருமைத்தயிர் சாதம் நன்றாக வயிறு புடைக்க சாப்பிட்டுவிட்டு எழுத உட்கார்ந்தாலும் நடை என்னவோ உயரத்தான் பறக்குமாம்! அதுவும் அந்த கருப்பி பற்றியே எழுத ஆரம்பித்து விட்டால் கேட்கவும் வேண்டுமா? ரசியுங்கள்!
------

॥ ध्यानम् ॥
माणिक्यवीणामुपलालयन्तीं मदालासां मञ्जुलवाग्विलासाम् 
माहेन्द्रनीलद्युतिकोमलाङ्गीं मातंगकन्यां सततं स्मरामि  ॥१॥
माणिक्य-वीणाम् उपलालयन्तीं मदालसां मञ्जुल-वाग्-विलासाम् ।
माहेन्द्र-नील-द्युति-कोमलाङ्गीं मातङ्ग-कन्यां मनसा स्मरामि ॥ १ ॥


||  த்யானம் ||
மாணிக்யவீணாமுபலாலயந்தீம்ʼ மதா³லாஸாம்ʼ மஞ்ஜுலவாக்³விலாஸாம்  |
மாஹேந்த்³ரனீலத்³யுதிகோமலாங்கீ³ம்ʼ மாதங்க³கன்யாம்ʼ ஸததம்ʼ ஸ்மராமி  || 1||
மாணிக்ய-வீணாம் உபலாலயந்தீம்ʼ மதா³லஸாம்ʼ மஞ்ஜுல-வாக்³-விலாஸாம் |
மாஹேந்த்³ர-நீல-த்³யுதி-கோமலாங்கீ³ம்ʼ மாதங்க³-கன்யாம்ʼ மனஸா ஸ்மராமி ||  1 ||
                                                 
மதங்க முனிவரின் மகள் மகளாக அவதரித்தாள் அம்பிகை. அவள் மாணிக்கத்தால் ஆன வீணையை மெதுவாக மீட்டுகிறாள். (ப்ரஹ்மானந்தமென்னும்) போதையினால் (வெளி காரிய ஈடுபாடின்மை என்னும்) சோம்பலுள்ளவளாக இருக்கிறாள். அவளது பேச்சு மிகவும் இனிமையானதாக இருக்கிறது. ஜொலிக்கும் மாஹேந்த்ர நீலம் போன்ற மென் உடலைக் கொண்டிருக்கிறாள். அவளை மனதில் த்யானிக்கிறேன்.

चतुर्भुजे चन्द्रकलावतंसे कुचोन्नते कुङ्कुमरागशोणे ।
पुण्ड्रेक्षुपाशाङ्कुशपुष्पबाण- हस्ते नमस्ते जगदेकमातः ॥२॥
चतुर्भुजे चन्द्र-कला+वतंसे कुचोन्नते कुङ्कुम-राग-शोणे ।
पुण्ड्रे+क्षु-पाशा+ङ्कुश-पुष्प-बाण-हस्ते नमस् ते जगद्-एक-मातः ॥ २ ॥

சதுர்பு⁴ஜே சந்த்³ரகலாவதம்ʼஸே குசோன்னதே குங்குமராக³ஶோணே | புண்ட்³ரேக்ஷுபாஶாங்குஶபுஷ்பபா³- ஹஸ்தே நமஸ்தே ஜக³தே³கமாத: || 2||
சதுர்பு⁴ஜே சந்த்³ர-கலா+வதம்ʼஸே குசோன்னதே குங்கும-ராக³-ஶோணே |
புண்ட்³ரே+க்ஷு-பாஶா+ங்குஶ-புஷ்ப-பா³ண-ஹஸ்தே நமஸ் தே ஜக³த்³-ஏக-மாத: ||  2 ||:

நான்கு கைகளில் கரும்பு (வில்), மலர் அம்புகள், பாசம், அங்குசம், ஆகியவற்றை ஏந்தியவளே! இளம்பிறைச் சந்திரனை தலையில் கொண்டவளே! பருத்து உயர்ந்த முலைகளை உடையவளே! குங்குமத்தைப் போல் சிவந்த நிறத்தவளே! ஜகன்மாதாவே! உன்னை வணங்குகிறேன்.


 
Post a Comment