Pages

Monday, March 31, 2014

ஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் - 11




कुन्द्पुष्पद्युति-स्निग्धदन्तावली-निर्मलालोलकल्लोल-सम्मेलन-स्मेर-शोणाधरे  ! चारुवीणाधरे ! पक्वबिंबाधरे !

குந்த³புஷ்பத்³யுதிஸ்னிக்³த⁴த³ந்தாவலீனிர்மலாலோலகல்லோலஸம்மேலன ஸ்மேரஶோணாத⁴ரே சாருவீணாத⁴ரே பக்வபி³ம்பா³த⁴ரே 

குந்த³ புஷ்பத்³யுதி ஸ்னிக்³த⁴ த³ந்தாவலீ நிர்மலா லோல கல்லோல ஸம்மேலன ஸ்மேர ஶோணா த⁴ரே சாரு வீணா த⁴ரே பக்வ பி³ம்பா³ த⁴ரே 

மல்லிகை மலர்கள் போன்ற ப்ரகாஶத்தின் மெருகுடன் விளங்குகின்றன உன் பல்வரிசைகள். உன்தன் புன்சிரிப்புகள் அப்பழுக்கற்ற உன் பற்களின் அசையும் அலைகள் போல் உள்ளன. (வெண்மை நிறத்தவைகளான அவற்றுடன்) உனது சிவந்த உதடுகள் (அழகுபட) உள்ளன. நல்லதொரு இனிமையான (இசை எழுப்பும்) வீணையை ஏந்துகிறாய். (முற்கூறப்பட்ட) உனது உதடுகள் பழுத்த கோவைப்பழம்போல் (சிவந்து) உள்ளன. (தாயே, உனக்கு வெற்றி உண்டாகுக!) 

सुललित-नवयौवनारंभ-चन्द्रोदयोद्वेल-लावण्य-दुग्धार्णवाविर्भवत्-
कंबुबिंबोकभृत्-कन्धरे ! सत्कलामन्दिरे ! मन्थरे!

ஸுலலிதநவயௌவனாரம்ப⁴சந்த்³ரோத³யோத்³வேலலாவண்யது³க்³தா⁴ர்ணவாவிர்ப⁴வத் கம்பு³பி³ம்போ³கப்⁴ருʼத்கந்த4ரே ஸத்கலாமந்தி³ரே மந்த²ரே 

ஸுலலித நவ யௌவன ஆரம்ப⁴ சந்த்³ரோத³யோத்³வேல லாவண்ய து³க்³தா⁴ர்ணவ ஆவிர் ப⁴வத் கம்பு³ பி³ம்போ³கப்⁴ருʼத் கந்த4ரே ஸத் கலா மந்தி³ரே மந்த²ரே 

அன்னையே! நீ இளமையும், நுண்மையும், எழிலும் கொண்டவள்! சந்திரோதயம் போல பாற்கடலில் உற்பத்தியாகும் சங்கை போன்ற கழுத்தையும் உடையவள்! அனைத்து கலைகளுக்கும் இருப்பிடமானவள்! மெதுவான நடையுடையவள்! (தாயே, உனக்கு வெற்றி உண்டாகுக!)

No comments: