Pages

Friday, March 21, 2014

ஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் - 6




कामलीला-धनुस्सन्निभ-भ्रूलतापुष्प-सन्दोह-सन्देहकृल्लोचने,
वाक्सुधासेचने, चारुगोरचनापङ्क-केलीललामाभिरामे, सुरामे! रमे!

காமலீலாத⁴னுஸ்ஸன்னிப⁴ப்⁴ரூலதாபுஷ்பஸந்தோ³ஹஸந்தே³ஹக்ருʼல்லோசனே வாக்ஸுதா⁴ஸேசனே சாருகோ³ரோசனாபங்ககேலீலலாமாபி⁴ராமே ஸுராமே ரமே 

காம லீலா த⁴னுஸ் ஸன்னிப⁴ ப்⁴ரூ லதா புஷ்ப ஸந்தோ³ஹ ஸந்தே³ஹ க்ருʼல் லோசனே வாக் ஸுதா⁴ ஸேசனே சாரு கோ³ரோசனா பங்க கேலீ லலாமாபி⁴ராமே ஸுராமே ரமே

(ஈர்க்கும் தன்மையால்) காமனின் வில்லை ஒத்த உன் புருவங்கள் கொடிகளைப் போல் (மெல்லியவையாக) இருக்கையில், அவற்றில் பற்பல பூக்கள் பூத்துள்ளனவோ என்ற ஐயத்தை உண்டாக்கும்படி (இங்கும் அங்கும் அலைபாயும்) கண்களை உடையவளே! தமது அமுதம் போன்ற பேச்சைப் பொழிபவளே! (தாயே, உனக்கு வெற்றி உண்டாகுக!)
(உன்) நெற்றியை அலங்கரிக்கும் (வாசனைப் பொருளான) கோரோசனையால் ஆன அழகிய விரிந்த திலகம் உனது வனப்பை எடுத்துக்காட்டுகிறது. பெண்ணினத்தில் சிறந்தவள் நீ. (பக்தர்களை) மகிழ்விப்பவள் நீ. (தாயே, உனக்கு வெற்றி உண்டாகுக!)



No comments: