Pages

Tuesday, March 25, 2014

ஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் - 8




वल्लकीवादन-प्रक्रियालोल-तालीदलाबद्ध-ताटङ्कभूषाविशेषान्विते, सिद्धसम्मानिते !

வல்லகீவாத³னப்ரக்ரியாலோலதாலீத³லாப³த்³த⁴- தாடங்கபூ⁴ஷாவிஶேஷான்விதே ஸித்³த⁴ஸம்மானிதே 

வல்லகீ வாத³ன ப்ரக்ரியா லோல தாலீ த³லா ப³த்³த⁴- தாடங்க பூ⁴ஷா விஶேஷான் விதே ஸித்³த⁴ ஸம்மானிதே 

வீணையை வாசிக்கும்போது (ரஸனையில் உன் தலை ஆடுவதால்) ஆடும் பனை ஓலை கூடிய தாடங்கம் என்னும் (மாங்கல்ய) ஆபரணத்தை அணிந்தவளே! ஸித்தர்களால் மதிக்கப்பட்டவளே! (தாயே, உனக்கு வெற்றி உண்டாகுக!) 

दिव्यहाला-मदोद्वेल-हेलालसच्चक्षुरान्दोलनश्री-समाक्षिप्त-कर्णैकनीलोत्पले ! श्यामले, पूरिताशेषलोकाभिवाञ्छाफले ! श्रीफले!

தி³வ்யஹாலாமதோ³த்³வேலஹேலாலஸச்சக்ஷுராந்தோ³லனஶ்ரீஸமாக்ஷிப்தகர்ணைக- நீலோத்பலே ஶ்யாமலே பூரிதாஶேஷலோகாபி⁴வாஞ்சா²²லே ஶ்ரீப²லே 

தி³வ்ய ஹாலா மதோ³த்³வேல ஹேலா லஸச் சக்ஷு: அந்தோ³லன ஶ்ரீ ஸமாக்ஷிப்த கர்ணைக- நீலோத்பலே ஶ்யாமலே பூரிதாஶேஷ லோகாபி⁴ வாஞ்சா² ²லே ஶ்ரீப²லே 

திவ்வியமான (ப்ரஹ்மாநந்தமென்னும்) கள்ளின் உத்ஸாஹத்தால் விளையாடும் உன் கண்கள் இங்கும் அங்கும் அலைவதில் அதன் அழகு உன் செவியில் இருக்கும் அந்தவொரு நீலோத்பலத்தின் அழகை வெல்கிறது. கறும் (பச்சை) நிறத்தவளே! (உனை அண்டும் பக்த) ஜனங்கள் விரும்பும் பலன்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவளே! (அழியாத மோக்ஷ) செல்வத்தையும் அருளுபவளே! (தாயே, உனக்கு வெற்றி உண்டாகுக!)




No comments: