Pages

Wednesday, April 9, 2014

ஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் - 15



कोमलस्निग्ध- नीलोत्पलोत्पादितानङ्गतूणीर-शङ्काकरोदारजङ्घालते
चारुलीलागते

கோமலஸ்னிக்³த⁴ நீலோத்பலோத்பாதி³தானங்க³தூணீரஶங்காகரோதா³ர ஜங்கா⁴லதே சாருலீலாக³தே
கோமல ஸ்னிக்³த⁴ நீலோத்பலோத் பாதி³தானங்க³ தூணீர ஶங்கா கரோ தா³ர ஜங்கா⁴லதே சாரு லீலா க³தே 

இவளது கால்கள் மன்மதனின் பிசுபிசுப்பான நீலோத்பல அம்புராத்தூணி போல வழுவழுப்பாக அழகாக உள்ளது. இவள் நடை விளையாட்டாகவும் அழகாகவும் இருக்கிறது.

नम्रदिक्पाल सीमन्तिनीकुन्तल स्निग्धनीलप्रभापुञ्जसञ्जात दूर्वाङ्कुरासङ्ग सारङ्गसंयोगरिङ्खन्नखेन्दूज्ज्वलेप्रोज्ज्वले! निर्मले!

நம்ர-தி³க்-பால-ஸீமந்தினீ-குந்தல-ஸ்னிக்³⁴-நீல-ப்ரபா⁴-புஞ்ஜ-ஸஞ்ஜாத-தூ³ர்வா+ங்குரா+ஸங்க³-ஸாரங்க³-ஸம்ʼயோக³-ரிங்க²ன்-நகே²ந்தூ³+ஜ்ஜ்வலே-ப்ரோஜ்ஜ்வலே! நிர்மலே! 

நம்ர தி³க் பால ஸீமந்தினீ குந்தல ஸ்னிக்³த⁴ நீல ப்ரபா⁴ புஞ்ச ஸஞ்ஜாத து³ர்வாங்குரா ங்க ஸாரங்க³ ஸம்ʼயோக³ ரிங்க²ன் நகே²ந்தூ³ஜ் ஜ்வலே ப்ரோஜ் ஜ்வலே! நிர்மலே!


ஒளிரும் கால் நகங்களை சுற்றி வணங்கி நிற்கும் திக்பாலர்களின் துணைவிகளின் தலை முடியால் சூழப்பட்டவள் இவள். சாரங்கங்கள் (மான்கள்) அந்த கரும் பச்சை தலை முடியை அருகம் புல் என நினைத்து மயங்கி கவரப்பட்டு தவழ்ந்து சூழ்கின்றன.


 

No comments: