சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
729. கர்ப: உள்ளே இருப்பவன். கர்ப வடிவானவன்.
730. கர்வ பங்க: கர்வங்களை அகற்றியவன்.
731. குசாஸன : தர்பைகளை ஆஸனமாகக் கொண்டவன். கொடுமையாக கட்டளை இடுபவன்.
732. குலபாலபதி : பதிவ்ருதைகளுக்கு தெய்வம். சக்தி மதத்தைப் பின்பற்றியவர்களுக்கு பதியானவன்.
733. ஸ்ரேஷ்ட: சிரேஷ்டமனவன்.
734. பவமான: வாயு, பரிசுத்தன்.
735. ப்ரஜாதிப: பிராணிகளுக்கு அதிபதி.
736. தர்சப்ரிய : அமாவாசையன்று தன்னைப் பூஜை செய்வதில் விருப்பம் உள்ளவன். தனது தரிசனத்தால் பிரியம் அளிப்பவன்.
737. தர்விகார: பாம்பின் படம் போன்றவன்.
738. தீர்க்க காய: நீண்ட சரீரம் உள்ளவன்.
739. திவாகர: பகல் பொழுதை செய்பவன். (சூரியன்)
740. பேரீ நாத ப்ரிய: படஹ வாத்ய தொனியில் பிரியம் உள்ளவன்.
741. ப்ருந்த: ப்ருந்தன் என்னும் பெயர் கொண்டவன்.
742. ப்ருஹத்தனு: பெரிய சேனையைக் கொண்டவன்.
743. ஸுபாலக: நன்றாகக் காப்பாற்றுபவன்.
744. ஸுப்ரஹ்மா: உயர்ந்த அந்தணன்.
745. ப்ரஹ்ம ரஸிக: பிராமணனிடம் கூடி இருப்பவன். வேதத்தில் விருப்பம் உள்ளவன். பரம் பொருளோடு ஐக்கியமானவன்.
746. ரஸக்ஞ: ருசி அறிந்தவன்.
747. ரஜ்தாத்ரிப: கைலை மலைபோல் காந்தி உள்ளவன்.
748. திமிரக்ன: இருட்டை அகற்றுபவன். கண் நோயை அகற்றுபவன்.
749. மிஹிராப: சூரியன் போன்றவன்.
750. மஹா நீல ஸமப்ரப: பெரிய நீலக் கல் போன்றவன். தனக்கு ஒப்பான பலம் உள்ள மஹா நீலன் என்பவனை உடையவன்.
751. ஸ்ரீசந்தன விலிப்தாங்க : நல்மணம் கமழும் சந்தனம் பூசிக் கொண்டவன்.
752. ஸ்ரீபுத்ர: லக்ஷ்மீ குமாரன்.
753. ஸ்ரீதருப்ரிய: வில்வ மரத்தில் ஆசை கொண்டவன்.