Pages

Friday, April 10, 2020

#கொரோனாவும்_கோமு_பாட்டியின்_ஆச்சாரமும்- 1




ராம் ராம்
புதிய தொடர். இந்த கொரோனா வந்தாலும் வந்தது இப்ப பலரும் பிராம்மண ஆச்சாரம் பத்தி பேசறாங்க. உண்மையில் பிராம்ம ஆசாரம்ன்னு இல்ல. அது எல்லாருக்கும்தான். காலப்போகில மத்தவங்க விட்ட பிறகும் அந்தணர்கள் தொடர்ந்து கிட்டு இருந்ததால அத அப்படி கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. இப்ப இதெல்லாம் கடை பிடிக்கற அந்தணர் குடும்பங்களையேக்கூட தேடிப்பிடிக்கறதாதான் இருக்கும்! எப்படியோ, அது எதா வேணா இருந்துட்டு போகட்டும். இப்ப கொஞ்சம் விஷயம் தெரிஞ்சுண்டா சரி. அப்பறம் கடைப்பிடிக்கறதைப்பத்தி அவரவர் யோசிச்சுக்கலாம். அது அவங்கவங்க இஷ்டம்.
அந்தணர் குறித்து எதிர்ப்பு உணர்ச்சி இருப்பவர்கள், விஷயம் தெரிஞ்சுக்க விரும்பாதவங்க எல்லாம் ப்ளீஸ் டேக் டைவர்ஷன்!
இது குறித்து எல்லாம் விவாதிக்க நேரம் எனக்கு இல்லை. அதுக்கு எனக்கு கடமை இருக்கறதாகவும் நான் நினைக்கல. கமெண்டுக்கு பதில் வரலைன்னா யாரும் வருத்தப்பட வேண்டாம்.
--
இந்த வீட்டில் ஒரு தாத்தா பாட்டி அப்பா அம்மா பையன் பெண் இருக்கிறார்கள். அடிப்படையில் ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். இவர்கள் நடுவில் நடைபெறும் உரையாடல்கள் அந்த நாள் ஆசாரங்கள் குறித்து நமக்கு சொல்லும் என்று எதிர்பார்க்கிறேன்.
---
பாட்டியிடம் பள்ளிக்கு செல்லும் சிறுவன் வருகிறான்.
பாட்டி பாட்டி இனிமே நான் உன்னை கட்டி பிடிக்க மாட்டேன்.
ஏண்டா செல்லம்?
ஸ்கூல்ல சொல்றாங்க… வயசானவங்க கிட்ட சின்ன பசங்க போயி கட்டி பிடிச்சுக்கக் கூடாதாம். வைரஸ் தொத்திக்கும் னு சொல்றாங்க
அப்படியா ரொம்ப நல்லது இவ்வளவு நாள் நான் குளிச்சுட்டு பாராயணம் செய்யறப்ப தள்ளி நில்லுடா என்று சொன்னேன் ஆனால் நீ கேட்கவே மாட்ட! ஆமா, இப்ப ஏதுடா உனக்கு ஸ்கூலு?
ஜூம்ல பாடம் எடுக்கறங்க பாட்டி. ஆமா பாட்டி, ஏன் இப்படி தள்ளி நிக்க சொல்ற?
ஆமாண்டா அதுதான் மடி ஆச்சாரம். நான் குளிச்சுட்டு பாராயணம் எல்லாம் முடிக்கிற வரைக்கும் மடியா ஆசாரமா இருக்கணும்னு பாப்பேன். ஆனால் நீயோ பாட்டி பாட்டின்னு கட்டிப்பிடிச்சுப்ப! ரொம்ப அன்பா தான் இருக்க நீன்னாலும் நானும் இப்போலேந்து சொன்னாதானே வயசான பிறகு உனக்கு பழக்கத்துல இருக்கும்? அதனால ரொம்ப கண்டிப்பா இருந்தேன்.
பாட்டி அது என்ன மடி ஆச்சாரம் எனக்கு சொல்லேன்?
அதான்டா இப்பல்லாம் சொல்றாங்களே ஏதோ ஹைஜீன் அப்படின்னு … அன் அது!
அப்படியா பாட்டி பின்ன ஏன் அப்படி சொல்லல?
அதான்டா, அதுல பல விஷயம் எல்லாம் ரிஷிகள் பெரியவா எஆல்ல்ரும் சொன்னது. அது எல்லாத்துக்கும் ஆதாரம் கொண்டுவா, அப்பத்தான் நம்புவேன்னா, கொண்டு வர முடியாது அதனால அது ஒங்க சயன்ஸ்ஸ் இல்ல அப்படின்னு எல்லாரும் சொல்றா. ஆனா பல விஷயங்களுக்கு சயன்ஸ் ஆதாரம் இல்லைன்னு சொல்றாங்க. அதைப்பற்றி யாரும் பேச மாட்டான்.
அடி அப்படின்னா எனக்கு தினமும் ஏதாவது இதை பத்தி கொஞ்சம் சொல்லிக் கொடேன்
தாராளமா சொல்றேன்டா என் பட்டு! அதத் தவிர வேற எனக்கு வேற என்ன வேலை?
சரி இன்னிக்கு என்ன சொல்ல போற?
காத்தாலேந்து ராத்திரி வரைக்கும் செய்யக்கூடிய பல விஷயங்கள் இருக்குடா. அதெல்லாம் பொறுமையா ஒவ்வொன்னா தான் பார்க்க முடியும். அப்பப்போ ஒரு விஷயத்தை பாக்குறப்போ தோன்றத நா உனக்கு சொல்றேன் சரியா?
சரி பாட்டி, என் செல்ல பாட்டி! சமத்து பாட்டி !

No comments: