Pages

Saturday, April 11, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 15





ௐ ப⁴வாய நம: ।அனைத்தையும் உருவாக்குபவன்
ௐ ஶர்வாய நம: ।எல்லாமுமாக இருப்பவன்
ௐ பா⁴நுமயாய நம: ।(சூரிய) ஒளி மயமாக உள்ளவன்
ௐ ப்ரஜாபத்யஸ்வரூபகாய நம: ।
மக்களை உண்டு பண்ணும் பிரஜாபதி உருவமாக உள்ளவனே
ௐ ஸ்வச்ச²ந்தா³ய நம: ।சுயமாக விரும்பத்தக்கவனாக இருப்பவனே
ௐ ச²ந்த:³ஶாஸ்த்ரஜ்ஞாய நம: ।சந்தள் சாத்திரம் ஆகியவற்றை அறிந்தவனே
ௐ தா³ந்தாய நம: ।அடக்குபவனே
ௐ தே³வமநுப்ரப⁴வே நம: ।தேவர்களுக்கும் மனுவுக்கும் பிரபுவே
ௐ த³ஶபு⁴ஜே நம: ।பத்து வகை உணவை புசிப்பவனே
ௐ த³ஶாத்⁴யக்ஷாய நம: । 360பத்து விஷயங்களை நிர்வகிப்பவனே
ௐ தா³நவாநாம் விநாஶநாய நம: ।அசுரர்களை அழிப்பவனே
ௐ ஸஹஸ்ராக்ஷாய நம: ।ஆயிரம் (பல) கண்களை உடையவனே
ௐ ஶரோத்பந்நாய நம: ।அம்பை தயாராக வைத்திருப்பவனே
ௐ ஶதாநந்த³ஸமாக³மாய நம: ।
எப்போதும் ஆனந்தத்துடனும் சமநிலை பெற்றவனுமாக இருப்பவனே
ௐ க்³ருʼத்⁴ராத்³ரிவாஸாய நம: ।கழுகு மலையில் வசிப்பவனே
ௐ க³ம்பீ⁴ராய நம: ।ஆழமானவனே
ௐ க³ந்த⁴க்³ராஹாய நம: ।நறுமணத்தை ரசிப்பவனே
ௐ க³ணேஶ்வராய நம: ।கணங்களுக்கு தலைவனே
ௐ கோ³மேதா⁴ய நம: ।கோமேதம் தரித்தவனே
ௐ க³ண்ட³காவாஸாய நம: । 370கண்டகநதி வாசனே
ௐ கோ³குலை: பரிவாரிதாய நம: ।பசுக்களால் சூழப்பட்டவன்
ௐ பரிவேஷாய நம: ।பரிவேடம் அணிந்தவனே
ௐ பத³ஜ்ஞாநிநே நம: ।சொற்களின் பொருளை அறிந்தவனே
ௐ ப்ரியங்கு³த்³ருமவாஸகாய நம: ।தினை (வயலிலுள்ள) மரத்தில் வசிப்பவனே

  சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
   
351. பவ: எல்லாவற்றையும் உண்டு பண்ணுபவன்.
352. சர்வ: சர்வன் என்ற பெயர் பூண்டவன்.
353. பானுமய ஒளிக்கிரணங்கள் நிறைந்தவன்.
354. ப்ராஜாபத்ய ஸ்வரூபக : தனது பொருள்கள் எல்லாவற்றையும் பிறருக்கு கொடுத்து, விரக்தனாய் ஸன்யாசம் பூண்ட உருவினன்.
355. ஸ்வச்சந்த : தனது இஷ்டப்படி இருப்பவன்.
356. சந்தஸ் சாஸ்த்ரக்ஞ: சந்தஸ், சாஸ்திரம் இவைகளை அறிந்தவன்.
357. தாந்த: தயாளு, அடக்குபவன்.
358. தேவ மனுப்ரபு: தேவர்களுக்கும், மனுக்களுக்கும் பிரபுவானவன். அல்லது தேவமனு என்பவருக்கு இஷ்டத்தை அளித்தவன்.
359. தசபுக்: பத்துவித ஆகாரங்களை புசிப்பவன். காய், கிழங்கு, வேர், பட்டை , இலை, சருகு, பிஞ்சு, பழம், புஷ்பம், பிசின் இவைகள் பத்தையும் உணவாக யோக நூல் கூறுகிறது.
360. தலாத்யக்ஷ : தளன் என்பவனை ஸேனாபதியாகக் கொண்டவன்.
361. தானவானாம் வினாசன: அசுரர்களை அழிப்பவன்.
362. ஸஹஸ்ராக்ஷ:ஆயிரம் கண்களை உடையவன்.
363. சதநிஷ்பன்ன: ஓரே சமயத்தில் நூறு விதமான உருவங்களைக் கொண்டவன்.
364. சதானந்த : நூறு மடங்கு அதிக ஆனந்தம் கொண்டவன். அல்லது பிரம்மன். சதானந்தர் என்ற தசரதரின் மந்திரி உருகொண்டவன்.
365. ஸமாகம: லக்ஷ்மியோடு கூடிய திருமாலின் வரவு பெற்றவன்.
366. கருடாத்ரிவாஸ: கருடமலையில் வசிப்பவன். கருடபர்யாயபதம் - சபரீ ஆகவே சபரிமலையில் வசிப்பவன்.
367. கம்பிர: அடர்ந்த பெருத்த உருவம் உள்ளவன்.
368. கந்தக்ராஹ : வாசனையைக் ரஸிப்பவன். வாஸனை உள்ள மீன் கள் நிறைந்த நீரோடை கொண்டவன். (குளத்து புழைபாலன்)
369. கணேச்வர: -ப்ரதமர்களுக்கு அல்லது இந்திரியங்களுக்கு ஈஸ்வரன்.
370. கண்டகவாஸ: கண்டக நதி தீரத்தில் வசிப்பவன்.
371. கோமேத : கோமேத ரத்னம் தரித்தவன். கோமேதம் என்ற வேள்வியில் பரியம் உள்ளவன்.
372. கோகுலை பரிவாரித: பசுக்களால் சூழப்பட்டவன்.
373. பரிவேஷ: மண்டலம் பூண்டவன்.
374. பதக்ஞான : சகல கலைகளிலும் உள்ள பதங்களை அறிந்தவன்.
375. ப்ரியங்குத்ரும வாஸக : தினை விளையும் வயலில் உள்ள மரத்தடியில் இருப்பவன். வேடராஜன் வேண்டுகோளால் வள்ளியைக் காக்க வேண்டி தினை விளையும் வயலில் இருப்பவன் என்று கூறுவர்.

No comments: