சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
703. இஷ்ட நம விதாயக: இஷ்டர்களுக்கு கெடுதல் செய்யாதவன்.
704. ஸாமரஸ்ய: சமரசப் போக்கு உள்ளவன்.
705. அப்ரமேய: ஊகிக்க முடியாதவன்.
706. பாஷண்டி: பாஷண்டன் போன்றவன்.
707. பர்வதப்ரிய: மலையில் ஆசை உள்ளவன்.
708. பஞ்சக்ருத்ய: ஐந்து தொழில் கொண்டவன்.
709. பரோ பேத: இதரர்களோடு சேர்ந்தவன்.
710. பஞ்ச மஞ்சாதி சாயிக: பெரிய மஞ்சத்தில் படுத்திருப்பவன்.
711. பத்மாக்ஷ: தாமரைக் கண்ணன், தாமரை மணிகளைப் பூண்டவன்.
712. பத்ம வதன: தாமரை போன்ற முகம் உடையவன்.
713. பாவகாப: தீ போன்ற வடிவானவன், அல்லது தீக்குழியோடு விளங்குபவன்.
714. ப்ரியங்கர: பிரியம் அளிப்பவன்.
715. கார்த்த ஸ்வராங்க: தங்கம் போல் அவயங்கள் உடையவன்.
716. கௌராங்க: சிவந்த அங்கம் உள்ளவன்.
717. கௌரீ புத்ர: கௌரியின் புதல்வன்.
718. கணேஸ்வர : சிவ கணங்களுக்குத் தலைவன்.
719. ஆஸ்லிஷ்ட: (பூர்ணா - புஷ்களா இவர்களால்) ஆலிங்கனம் செய்யப்பட்டவன். 720. ஸ்லிஷ்ட வபு: அழகான சரீரம் உள்ளவன்.
721. சீதாம்சு:குளிர்ந்த காந்தி உள்ளவன்.
722. சுபதீதிதி :மங்களமான காந்தி உடையவன்.
723. தக்ஷத்வம்ஸ: தக்ஷனை ஸ்மரித்தவன்.
724. தக்ஷகர: பலம் உள்ள கைகளை உடையவன்.
725. வர: ஸ்ரேஷ்டன், மாப்பிள்ளை .
726. காத்யாயனி ஸுத: காத்யாயன முனிவரின் புதல்வியான தேவியின் புதல்வன்.
727. ஸுமுக: அழகான முகம் உடையவன்.
728. மார்கண: தேடுகிறவன். யாசிப்பவன். ஜல உருவினன்.
No comments:
Post a Comment