Pages

Friday, April 17, 2020

#கொரோனாவும்_கோமு_பாட்டியின்_ஆச்சாரமும்- 7




"இந்தாங்கம்மா நீங்க புதன்கிழமை சனிக்கிழமை மட்டும் கடையில் எதுவும் வாங்க வெளியே போகலாம். கடைக்குப் போகும்போது இந்த சீட்டை எல்லாம் நிச்சயமாக எடுத்துப்போங்க. யாரான்னு கேட்டா காட்ட ரெடியா இருக்கணும்" என்றவாறு சிவப்பு நிற அனுமதிச் சீட்டுகளை கொடுத்தார் நகராட்சி அலுவலர்.
கொதிக்கும் வெயிலில் வீடு வீடாகப் போய் இந்த வேலையை செய்யும் அவரை அனுதாபத்துடன் பார்த்தார் பாட்டி.
"பாவம் ! ரொம்ப வெயில் அடிக்கிறது கொஞ்சம் மோர் குடிக்கிறீங்களா?"
"வேண்டாம்மா " என்றார் அலுவலர். "நாங்க எந்த வீட்டிலேயும் வாசல் கேட்டு தாண்டி உள்ளேயும் போகக்கூடாது எதையும் வாங்கி குடிக்கவோ சாப்பிடவோ கூடாது அப்படின்னு உத்தரவு போட்டிருக்காங்க."
"அது சரிதான் எங்க உங்களோட தண்ணி பாட்டில்?" என்று கேட்டார் பாட்டி.
"தண்ணி பாட்டில்? அதெல்லாம் எடுத்துக்கொண்டு போறதில்லம்மா" என்றார் அலுவலர்.
ஏனோ?
பழக்கம் இல்லை.
"பழக்கப்படுத்திக்கனம்" என்றார் பாட்டி. "நாங்கல்லாம் எப்போ வெளியே போனாலும் தண்ணி கூட கொண்டு போய் விடுவோம். முன்னல்லாம் வெண்கல கூஜால எடுத்து போவோம். இப்பல்லாம் கூஜா போய் பாட்டிலை ஆயிடுத்து."
"ஏன்மா அவ்வளவு முக்கியம்?" என்று கேட்டார் அலுவலர்.
"ஏண்டாப்பா இப்படி கேக்கறே? நேத்து என்னக்கா காமு கூட பேசிக்கொண்டு இருந்தேன். காட்டுமன்னார்குடி பக்கம் கிராமத்துல ஒரு பேங்குக்கு ஒருத்தர் வந்து செக்கு கொடுத்து பணம் எடுத்தாராம். அவர் எங்கேயோ ஒரே இடத்துக்கு போயிட்டு வந்தவர் அப்படின்னு சொன்னா. ஏன்டா கணேசா அது என்னடா ஒரே இடம்?"
அம்மா தில்லி அம்மா.
அப்பா அதை ஒழுங்கா சொல்லித் தொலைய கூடாது? நான் என்னமோ ஏதோன்னு நினைச்சு இருக்கேன். சரி. அவருக்கு இந்த வைரஸ் வந்துடுத்தாம். அவர் பேங்குக்கு போனார்ன்னு கேள்விப்பட்டு அங்க போயி அங்க இருக்கிறவாள டெஸ்ட் பண்ணாளாம். அங்க இருந்தது ரெண்டே பேரு. அதுல ஒருத்தருக்கு வைரஸ் வந்திருக்காம். இப்போ பாங்க சுத்தப்படுத்த னும்ன்னு மூடிட்டளாம். எப்படி இது நடந்தது என்று விசாரிச்சப்போ வந்த ஆசாமி அங்க தண்ணி குடிச்சு இருக்கார். தண்ணி குடித்துவிட்டு டம்ளரை தண்ணீ பானை மேலே அப்படியே விட்டு விட்டு போயிருக்கார். அப்புறம் இவாளும் அந்த டம்ளரில் தண்ணீர் எடுத்து குடிச்சிருக்கா. அவ்வளவுதான். இது ரொம்ப அனாச்சாரம் இல்லையோ? நா முழுக்க வேலை செய்யற வரவர்தானே. அவர் போறப்போ தண்ணி பாட்டில் எடுத்து போயிருக்கலாம் இல்லையா அதுல கட்டுப்பாடு இருந்தா வந்திருக்காது இல்லையா?"
இவ்வளவு விவரமாக பேசும் பாட்டியைப் பார்த்து திகைத்துப் போனார் அலுவலர்.
பாட்டி வேற என்ன பார்க்கணும் சொல்லுங்க.
ஏண்டாப்பா நீ போட்டு இருக்கியே இந்த ஜீன்ஸ் பேண்ட் எப்போது தோச்சது?
பாட்டி அது ஒரு நாலு மாசம் இருக்கும்.
நாலு மாசமா? இந்த நாலு மாசத்துல நீ எங்கேல்லாம் போயிருப்ப?
நிறைய இடத்துக்குப் போய் இருப்பேன் பாட்டி. வேலையே அப்படித்தானே?
சரிதான் பா . ஆனால் நாலு மாசத்துல நீ எங்கெல்லாம் போனாயோ அந்த இடத்துல எல்லாம் என்ன பாக்டீரியா வைரஸ் எங்கறாளே அதெல்லாம் மேலப்பட்டு இருக்கோ ? அது பல நாள் உசுரோட இருக்குமாமே?
அதுக்கு என்ன செய்யறது பாட்டி ஜீன்ஸ் பேண்ட் எல்லாம் அடிக்கடி துவைக்க முடியாது.
சரிதான்ப்பா. சாக்குத் துணி மாதிரி இருக்கிற பேண்ட்டை அடிக்கடி தோக்கத்தான் முடியாது. அது சரி, ஏன் அப்படி ஒரு பேண்ட் போட்டுக்கணும்?
அலுவலர் வாயடைத்துப் போனார்.
இப்ப வர பேண்ட் எல்லாம் சுலபமா தோச்சுடலாமே? கணேசன் அந்த மாதிரி தானே போட்டு போறான். அதெல்லாம் தினசரி அலசி போட்டா கூட போதுமே சட்டுனு காஞ்சுடுமே? என்று கேட்டாள் பாட்டி.
ஏன் பாட்டி நான் அடிக்கடி வெளியூர் போக வேண்டியிருக்கு. தண்ணி பாட்டில் எடுத்துட்டு போனாலும் எவ்வளவு நாள் தாங்கும்? சரி, உள்ளூர்ல இருக்கறப்பவாது அப்படி பண்ணப்பாக்கறேன். ஆனா அந்த மாதிரி வெளியூர் போய் வந்தா என்ன செய்யணும்னு சொல்லுங்களேன்.
தாராளமா சொல்றேன்ப்பா. நாங்கள் எல்லாம் வெளியூர் போனா திரும்பி வந்ததும் எடுத்துப் போன துணிமணி எல்லாம் சுத்தமா இருக்கோ இல்லையோ திருப்பி தோச்சுருவோம். பார்க்க நல்லாதானே இருக்கு அப்படி நனைக்காமல் இருக்க மாட்டோம். அதே மாதிரி எடுத்துப் போன பொருள் எல்லாம் ஒரு தரம் சுத்தம் பண்ணிடுவோம்.
என் பாட்டி அவ்வளவு தூரம் பாக்கணுமானா?
ஏண்டாப்பா நீ பேப்பர் படிக்கிறது இல்லையா என்ன? இன்னிக்கு கூட வந்து இருக்கே. அந்த ஒரே இடத்திற்கு போயிட்டு வந்தவர் - அவருக்கு ஒன்னும் வைரஸ் பிரச்சனை வரலையாம். ஆனா அவங்க வீட்டிலிருந்தவாளுக்கு ரெண்டு பேருக்கு வந்துடுத்தாம். அது எப்படி வரும்? அவரெல்லாம் கொண்டுவந்த துணிமணி ல தான வந்திருக்கும். அதுக்கு தான் சொன்னேன். வெளி ஊரெல்லாம் போய்ட்டு வந்தா போய் வந்து கொண்டு போன விஷயம் எல்லாம் சுத்தப் படுத்தறாது முக்கியம்! என்றாள் பாட்டி .
"சரி பாட்டி நான் போய் வரேன்!" என்று பாட்டி சொன்னவற்றை அசை போட்டவாறே கிளம்பினார் அலுவலர்.



No comments: